Home » » Blog இல் உள்ள Youtube காணொளிகள் எந்தளவு வாசகர்களால் பார்க்கப்படுகிறது? Advance Google Analytic Tracking

இப்போது வலைப்பூக்களில் video க்களை இணைத்து பதிவிடுபவர்கள் அதிகரித்துள்ளனர். அதிலும் விமர்சனங்கள், விளக்கங்கள் என பல வகையிலும் சொந்தமாக video, Screen recording என பல விதமாக youtube இல் காணொளிகளை தரவேற்றி அதை வலைப்பூவில் இணைக்கின்றனர். Video play செய்யப்பட்ட தடவைகளை Youtube Analytic இல் காண முடியும். ஆனால் Blog post இல் உள்ள video க்கு என தனிப்பட்ட தகவல்களை காட்டாது. எவ்வாறு உங்கள் Google Analytic இல் நீங்கள் இணைத்த காணொளி பார்க்கப்பட்டது என்பதை காணும் முறையை பார்ப்போம்.



இதை நேரடியாக அல்லாமல்  plug in மூலமாக கண்காணிக்க போகிறோம். இதன் மூலம்  எத்தனை பேர் play செய்தார்கள், stop செய்தார்கள் pause செய்தார்கள், எக் காணொளிகள் செயல் இழந்துள்ளன என அனைத்தும் கண்காணிக்கப்படும்.

இதன் மூலம் youtube video மட்டும் அல்ல, வேறு பல வசதிகளும் கூடவே கிடைக்கிறது.

  1. Vimeo வீடியோக்களையும் கண்காணிக்க முடியும்.
  2. வெளிச்செல்லும் இணைப்புகளை கண்காணிக்க முடியும்.
  3. Email இணைப்புகளை கிளிக் செய்தாலும் கண்காணிக்க முடியும்.
  4. Download , Form களை கூட கண்காணிக்க முடியும்.
  5. முக்கியமாக பதிவு எவ்வளவு தூரம் வாசிக்கப்பட்டது என்பதையும் கண்காணிக்க முடியும்.
கணனிக்கல்லூரியில் Youtube காணொளி கண்காணிக்கப்பட்டது தொடர்பான Analytic report
'''

இது இயங்க அடிப்படை தேவைகள் என்ன?

Google Analytic பாவனையாலராக நிச்சயம் இருக்க வேண்டும்.
வலைப்பூவுடன் மட்டும் அல்ல  Google Analytic Script இணைக்கப்பட்ட எங்கும் இதை பாவிக்க முடியும்.

எப்படி இணைப்பது?

கீழே உள்ள Script இனை உங்கள் வலைப்பூவில் ஒரு HTML Widjet ஆக சேர்த்து கொள்ளுங்கள்.
கவனிக்க :
  • _gas.push(['_setAccount', 'UA-33563207-1']); இல் உங்கள் analytic ID இனை மறக்காமல் சேருங்கள்
  • _gas.push(['_setDomainName', 'tamilcomputercollege.blogspot.com']);  இல் உங்கள் வலைப்பூ முகவரியை கொடுங்கள்.


எங்கே  Reports பார்ப்பது?

உங்கள் analytic  கணக்கில் Content > Event பகுதியில் இது தொடர்பான Report கிடைக்கும். இதை இணைத்து 1 மணி நேரத்தின் உள் report கிடைக்க ஆரம்பிக்கும்.

முன்பு அதிகளவான Script களை வழங்கி வந்தேன். பொதுவாக அதற்கு வரவேற்பு கிடைப்பதில்லை. ஒரு வருடமாக Analytic தொடர்பாக எதுவும் பகிர்வது இல்லை. இது நீண்ட காலத்தின் பின் அனைவருக்கும் பயன் படும் என எதிர் பார்ப்பில் பகிர்கிறேன்.

An Advance version of this code available on GitHub