Google Analytic உலகின் மில்லியன் கணக்கானவர்கள் பயன்படுத்தும் இலவச சேவை. இதில் கடந்த மாதத்தில் குறிப்பிட தக்களவு மாற்றங்கள் வந்தன. அவற்றை தொகுத்து சிறு பதிவு. இவர்கள் அறிமுகப்படுத்திய புதிய வசதிகள் ஏற்கனவே Woopra மற்றும் Piwik இல் அறிமுகமான சேவைகள் தான். அண்மையில் Piwiki தனது 1.11.1 ம் பதிப்பில் real time அனல்ய்டிக் இனை அறிமுகப்படுத்தியது. Woopra தனது v8 analytic முன்னோட்டத்தை வெளியிட்டது. அவ்வாறே Google'ம் தனது புதிய சேவையை வெள்ளோட்டம் விட்டது.- Google இன் அடுத்த தலைமுறைக்கான Analytic என நாமத்துடன் Google Universal Analytic அறிமுகமாகியது. பல புதிய வசதிகளுடன் அறிமுகமாகிய இது இப்போது அனைத்து பாவனையாலர்களுக்கும் கிடைக்கிறது. புதிதாக web property ஒன்றை தொடங்கும் போது இதை பெற முடியும்.
- Social Tracking இல் புதிதாக Data Hub Activity , Trackbacks tab அறிமுகபடுத்தப்பட்டு உள்ளது.
- Real time Analytic இல் Events பகுதி அறிமுகம் ஆகி உள்ளது. இதன் மூலம் மேலும் சிறப்பாக வாசகர்களை - அவர்களின் செயற்படுகளை கண்காணிக்க முடியும்.
இவை தொடர்பான screenshots: