கணனியில் பற்சுகாதாரத்தை பேணும் முறையை கற்றுக்கொள்ளுங்கள்

உங்களுக்கு பற்கள் இருக்கிறதா? ஆம் என்றால் கட்டாயம் வாசிக்க  வேண்டிய பகுதி இது.நரசிம்மராவாகவே இருந்தாலும் பல் டாக்டரிடம் பல்லைக் காட்டித் தான் ஆக வேண்டும் என்பார்கள்.உங்கள் பற்களில் ஏற்பாடும் பிரச்சனைகள் உங்கள் முழு இயக்கத்தையும் பாதிக்கிறது. இப்பக்கம் நிச்சயம் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

எங்கே எப்போது உங்கள் கைத்தொலைபேசிகள் தொலைகின்றன?

நீங்கள் உங்கள் தொலைபேசியை தொலைத்தால் அதிஷ்டசாலியா அல்லது?? வருடாந்தம் 30 Billion  $ பெறுமதியான கையடக்க பேசிகள் தொலைகின்றன. இவ்வாறான தொலைதல் அல்லது களவு போதல் நிகழ்ந்த பின்னர் உங்களுக்கு ஏற்பாடும் இழப்பு என்ன? அநேகமானவர்களுக்கு அவர்களுடைய Phonebook இல் உள்ள தொலைபேசி இலக்கங்களே முக்கியமானது. ஏனைய படங்கள் பெரும்பாலும் நீங்கள் எங்காவது தரவேற்றி இருப்பீர்கள். ஆனால் நாம் நபர்களின் தொலைபேசி இலக்கங்களை backup செய்வது இல்லை. அனைத்து தொலைபேசிகளில் இந்த வசதி தரப்பட்டாலும் நாம் அதை பயன்படுத்துவது இல்லை. பெரும்பாலும் மதுபான பார்களில், ஆலயங்களில், பேரூந்துகளில் சில விழாக்காலங்களில்

உங்கள் வருங்கால கார்கள் எப்படி இருக்கும்?

ஓட்டுனரில்லா கார்கள்,Vehicle-to-vehicle communications, சுயமாக கட்டுப்படுத்தப்படும் வாகனங்கள். இவை விபத்துக்களை தாமாக கையாளக்கூடியதாகவும், சுயமாக சைகைகளை வெளிப்படுத்தகூடியதாகவும் இருக்கும். கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்து வருகிறது.இப்படி பற்பல கார்கள் பற்றி ஒரு சிறு விவரணப்படம். உங்கள் எண்ணக்கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து எம்முடன் இணைந்து இருங்கள்.

Twitter பயன்படுத்துவது எப்படி? (பூரண விளக்கப்படம்)

Facebook பயன்படுத்த எந்த கட்டுப்பட்டுகளோ அல்லது நுணுக்கங்களோ இல்லை. ஆனால் ட்விட்டர் அப்படி பட்டது ஒன்றல்ல. அதற்க்கு காரணம் அதன் சிறப்பு தன்மையாகும். இதனாலயே ட்விட்டர் இன்றுவரை அனைவராலும் விரும்பப்படுகிறது. ட்விட்டர் பயன்படுத்துவதற்கு என்று ஒரு முறை இருக்கிறது! இது பற்றி பல தளங்களில் வாசித்து இருப்பீர்கள். ஆனால் ட்விட்டர் பயன்படுத்தும் முறையை அவர்களே சொல்கிறார்கள். ஆயிரம் வார்த்தைகளை ஒரு படம் சொல்கிறது. இதை பார்க்கும் போது தான் இத்தனை நாளாக அறியாத விடயங்களை அறிந்து கொண்டோம் என்ற திருப்பி ஏற்படுகிறது. சொன்ன புரியாது சொன்ன சொல்லில் அடங்காது.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...

அடர்ந்த Amazon காடுகளில் திகில் நிறைந்த கணனிப்பயணம்


நாம் உங்களை கூட்டி செல்ல இருக்கும் இடம் தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் அமேசன் மழை காடுகளுக்கு....அமேசான் நதி ஆற்றுபள்ளத்தாக்கு பூமியில் பெரிய மழைக்காடுகளின் தாயகமாக உள்ளது. Amazonia எனஅழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் உலகின் மிகப்பெரிய மழைக்காடு. உலகின் மிகப்பெரிய உயிரியல்ஆய்வு பிரதேசமாகவும் இது விளங்குகிறது.அமேசான் மழைக்காடுகள் அமேசான் நதியால்அப் பெயர் பெறுகிறது.பிரதான ஆறு 4080 மைல் நீண்டு உள்ளது. அதன் வடிகால் 2722000 மில்லியன் சதுர மைல்கள் உள்ளடக்குகிறது.

தமிழ் தொலைக்காட்சிகளை நேரடியாக கணனியில் பார்க்க

நாம் பல சமயங்களில் கணனியில் தொலைக்காட்சிகளை பார்க்க விரும்பி இருப்போம். இணையத்தில் பல அலைவரிசைகள் streming முறையில் நேரடியாக கிடைகின்றன. அந்த வரிசையில் தமிழ் தொலைகாட்சிகள் கிடைப்பது அரிது. இணையத்தில் தேடி சென்றாலும் கிடைப்பது கடினம். ஆனால் அண்மையில் ஒரு தளத்தில் தமிழில் குறிப்பிட தக்க அளவு அலைவரிசைகளை இலவசமாக தரும் ஒரு தளத்தை பார்த்தோம். அதை உங்களுடன் பகிர்கிறோம்.

வலைப்பூவில் "3D ANIMATED CLOUD LABEL" விட்ஜெட் இணைப்பது எப்படி?

நாம் தொடர்ந்து கணணிக்கல்லூரி ஊடாக உங்கள் வலைப்பூவில் பற்பல விட்ஜெட்களை இணைக்கும் முறை பற்றி வழங்க உள்ளோம். நீங்களும் தொடர்ந்து கணணிக்கல்லூரியில் இணைந்து இலவசமாக பெற்று கொள்ளுங்கள். நாம் இப்பதிவின் ஊடாக "3D ANIMATED CLOUD LABEL" விட்ஜெட் இணைப்பது பற்றி பார்ப்போம். முதலில் "3D ANIMATED CLOUD LABEL" என்றால் என்ன என்று பார்ப்போம். இதன் விளக்கத்தை நாம் எழுத்தில் சொல்வதை விட நீங்களே இங்கே பாருங்கள்:

எவ்வாறு Disqus 2012 பெறுவது?- வரவேற்பை பெறுங்கள்!

Disqus 2012 get invitedஎங்கள் தளத்தில் இந்த வகை Disqus 2012 எமது தளத்தில் இணைக்கப்பட்டு விட்டது. நீங்களும் உங்கள் தளத்தில் இதனை இணைத்து பயன்பெறுங்கள். இப்போது அதில் இணைக்கப்பட்ட பல வகை சிறப்புக்களை இங்கே பாருங்கள். உங்கள் முழு கமெண்ட் பகுதிகளை மட்டும் இன்றி பல செயற்பாடுகளை ஆளும் வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான எமது முன்னைய பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

நீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : 10 காரணங்கள்உங்கள் facebook கணக்கை நிரந்தரமாக அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்கான பத்து காரணங்களை கீழே பாருங்கள். இதை வாசித்த பின்னராவது உங்கள் பாதுகாப்பில் அக்கறை இருந்தால் அழித்து விடுங்கள். இது கோரிக்கை அல்ல. எச்சரிக்கை. நீங்கள் உங்கள் மீதான நம்பிக்கை உடன் இப்போது திடகாத்திரமான முடிவை எடுக்க தயாராகுங்கள்.

கணனியில் தாஜ்மஹாலின் அழகை ரசிப்போம்

தாஜ்மஹால் என்றவுடன் சட்டென்று ஞாபகம் வருவது கட்டிட கலை. யாருக்குத்தான் இதை நேரில் சென்று பார்த்து வர விருப்பம் இல்லை?ஆனால் அந்த சந்தர்ப்பம் பல மக்களுக்கு கிடைப்பது இல்லை. இந்த தாஜ்மஹால் பற்றி முதலில் கொஞ்சம் பார்ப்போம். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது.

செவ்வாய் கோளில் ஒரு சுற்று பயணம்

செவ்வாயின் தட்பவெப்பம்
செவ்வாயின் மேற்பரப்பின் வெப்பநிலை +27 முதல் -126 டிகிரி வரை உள்ளது. (பூமியில் +58 முதல் -88.3 வரை). ஆனால் சூரியனிடமிருந்து பூமியை விட தூரத்திலிருப்பதால் சராசரி வெப்பநிலை -48 டிகிரி சென்டிகிரேடு. இதனுடைய காற்று மண்டலம் மிகவும் மெல்லியது, பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டது. டெலஸ்கோப்பில் பார்த்தால் மிகச் சிவப்பாகத் தெரியும். அதனால் தான் செவ்வாய் என்றும் ஆங்கிலத்தில் the red planet என்றும் அழைக்கப்படுகிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பூமியைப் போன்றே துருவங்கள் பனிப்பிரதேசங்களாக இருப்பது தான். இங்கு ஐஸ் என்பது பெரும்பாலும் 'ட்ரை ஐஸ்' எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு தான்.

ஒரே பார்வையில் சமூக வலைதளங்களில் வளர்ச்சி

ஒரே பார்வையில் சமூக வலைதளங்களில் வளர்ச்சி. கடந்த காலங்களில் பல சமூக வலைத்தளங்கள் உருவானாலும் அவை எவ்வாறு தொடர்ந்து நிலை கொண்டுள்ளன என்பதை பார்ப்போம். அனைத்தையும் பந்தி பந்தியாக சொல்லாமல் ஒரு வரைபிலே நாம் வடிவமைத்து தந்துள்ளோம். நீங்களே பாருங்கள். கடந்தகாலங்களில் திரட்டப்பட்ட ஓட்டு மொத்த தகவலின் அடிப்படையில் இவை வடிவமைக்கப்பட்டு உள்ளன.

Disqusஇல் Author உடைய கருத்துரைகளை CSS ஊடாக வேறுபடுத்திக்காட்டுவது எப்படி?

add css to disqusநாம் ஏற்கனவே இப்பகுதியில் Disqus கமெண்ட் பகுதியை இணைப்பதை பற்றி பார்த்து இருந்தும். அந்த வகையில் இன்று அதில் Adminனை வேறுபடுத்தி காட்டுவது பற்றி பார்போம்.இது உங்களை ஏனைய  commenters இல் இருந்து உங்களை வேறுபடுத்திக்காட்டும். கலர் குறியீடுகளை வேறுபடுத்தி வேறுபட்ட நிறங்களை தெரிவு செய்யலாம்.


இப்போது இதன் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். முதலில் உங்கள் disqus கணக்கிற்கு செல்லுங்கள்.

வலைபூவிற்கான கண்கவர் துள்ளி எழும் வரவேற்பு widget

Cool EXE-Style POP-UP V2 Widget For Blog And Website.நீங்கள் சில வலைபூக்கள், சில இணைய தளங்களிற்கு செல்லும் போது உங்களுக்கு இத்தளத்தில் வரவேற்கும் ஒரு விட்ஜெட் ஒன்றை கண்டு இருப்பீர்கள். அதனை உங்கள் வலைப்பூவிலும் இணைப்பதை இப்பதிவு தெளிவு படுத்துகிறது எனலாம். இதை இணைப்பது ஒன்றும் கடினம் அல்ல. உங்களுக்கு விருப்பமான பின்னணியை நீங்கள் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

தொழிநுட்பத்தில் இலங்கையாருடன் கை கோர்க்கும் கணணிக்கல்லூரி

Dialogஇலங்கையின் முன்னணி வலையமைப்பு வழங்குனரான Dialog Axiata நிறுவனத்துடன் தொழிநுட்ப உலகில் முடி சூடா மன்னனாக வழங்கும் கணணிக்கல்லூரி இணைந்து இலங்கை கணணி கல்லூரி பயனாலர்களுக்காக தமிழ் தொழிநுட்ப வரலாற்றில் முதன் முதலாக முற்றிலும் இலவசமாக உடனடி இலவச தொழிநுட்ப சேவைகளை கையடக்க தொலைபேசி மூலம் வழங்க முன் வந்துள்ளது. இது தமிழ் தொழிநுட்ப வரலாற்றில் புதிய மைல் கல் வரலாறு..

இலவச Domain Name மற்றும் Web Hosting வழங்குனர்கள் - இணைய பக்கம் ஆரம்பியுங்கள் - 7

இன்று அனைவரும் சொந்த டொமைன் மற்றும் சொந்த வலைத்தளம் வைத்து இருக்க ஆசைப்பட்டு இருப்போம். தள வடிவமைப்பு தொடர்பான பல ஆக்கங்கள் இங்கு தொடர்களாக வந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக இங்கே இலவச Domain Name மற்றும் Web Hosting வழங்குனர்கள் விபரத்தை இங்கே தருகிறோம். விரும்பிய இடத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்.

முதல் 40 இடங்களை பிடித்த பிளாஷ் வகை இணைய தளங்களின் அணிவகுப்பை காணுங்கள்


35 High Quality Flash Actionscript Tutorialsஉலகில் அதிகளவான தயாரிப்பு நிறுவனகள் Flash மற்றும் ActionScript மூலம் தமது இயங்கு நிலை இணைய தளங்களை வடிவமைக்கிறார்கள்.இவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு தனித்துவத்தை கொண்டவை. நீங்களும் இன்றே முயற்சித்து பாருங்கள்.ஒவ்வொரு தளமும் உங்களை கவரும் வகையில் ஏதோ ஒரு சக்தி பெற்றவையாக உள்ளன. முதல் 40 இடங்களை பிடித்த பிளாஷ் வகை இணைய தளங்களின் அணிவகுப்பை கீழே காணுங்கள் ...

ஹவாய் தீவுகளில் நீங்கள் ....

ஹவாய் தீவுகள் அமெரிக்காவின் 50-வது மாநிலமாக விளங்குகிறது. வட பசிபிக் பெருங்கடலில் சான்பிரான்சிஸ்கோவிற்கு தென்மேற்கில் இத்தீவுக் கூட்டம் அமைந்துள்ளது. இருபது தீவுகளை கொண்டுள்ள இதன் மொத்த பரப்பளவு 15,706 சதுர கி.மீ. ஆகும். இங்குள்ள தீவுகளில் சுமார் பாதி தீவுகளிலேயே மக்கள் வாழ்கிறார்கள். இத்தீவுகள் சுற்றுலாவிற்கு பெயர் பெற்றவை. இங்கு சுற்றுலாத் தொழில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

அமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு சுற்றுலா:

நாம் இன்று அமெரிக்காவில் பிரபலமான ஒரு இடத்தை பார்க்க போகிறோம். இங்கு நேரடியாக சென்று பார்க்கவிடினும் ஒரு தடவை கணனியில் சுற்றி பார்க்கலாமே. இவ் இடம் அமெரிக்க வரலாற்றில் மிக மிக முக்கியமானது. முதலில் நாம் இவ் இடத்தின் சிறப்புக்களை பார்ப்போம்.


Instagram செயலியை இணையத்தில் பயன்படுத்தி பாருங்கள்.


Instagram என்பது நமது புகைப்படங்களுக்கு அழகிய வண்ணங்கள் சேர்த்து நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்கான மொபைல் மென்பொருள் ஆகும். பிரபலமான இந்த மென்பொருளை பேஸ்புக் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 500 கோடி 5000 கோடி) கொடுத்து வாங்கியுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபோன் (iphone), ஐபேட்(ipad) மற்றும் ஐபோட் டச்(ipod touch) ஆகியவற்றுக்கு மட்டுமே இருந்த இன்ஸ்டாக்ராம் மென்பொருள் சமீபத்தில் ஆன்ட்ராய்ட் போன்களுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த மென்பொருளில் ஐபோனில் மட்டுமே 30 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர்.

Bypass Surgery எவ்வாறு செய்கிறார்கள்? நீங்களும் இணையத்தில் செய்து பார்க்கலாம்


ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம் இல்லையென்றால், உட னே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்த னை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரி ந்து மனிதன் இறந்து போக நேரிடும். பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தக்குழாய் முழுவதும் அடைபடு வதால் உண்டாகக்கூடிய மாரடைப்பு நோய்க்கு செய்யக்கூடிய இத ய ஆபரேஷன்.
இந்த ஆபரேஷனை திறந்த முறை இதய ஆபரேஷன் மூலம், செயற் கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகப்படுத்தி இதய துடிப்பை நிறுத்தியும் ஆபரேஷன் செய்யலாம்.

நகரும் Social Bookmarking பட்டையை வலைப்பூவில் இணைப்பது எப்படி?

Bookmark Bar Blogger Screenshotஇந்த பதிவு எப்படி உங்கள் பதிவுவில் பக்க நகர்வுடன் "பகிர்தல் பட்டி"யையும் உடன் நகர செய்யலாம் என்பதை விளக்குகிறது. இந்த பட்டை தற்போது ஆங்கில முக்கிய வலைபூக்கள் மற்றும் இணைய பக்கங்களில் முன்னிறுத்தப்படும் அளவிற்கு சிறப்படைந்து விட்டது. இதன் மூலம் உங்கள் வாசகர்கள் ஒரு கிளிக்கில் Twitter Share, Facebook Like, Stumble Upon, Google+, Pinterest Pin It மற்றும்  Rss Feed ஆகியவற்றில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ள உதவும். jQuery முறை மூலம் வடிவமைக்கப்பட்ட இவை உங்கள் தளங்களில் வாசகர் வருகையை மேம்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.நீங்கள் ஏற்கனவே இவ்வாறான ஒன்றை இணைத்து இருக்கலாம். ஆனால் உங்கள் பார்வையாலரால் குறிப்பிட்ட widgetடை தேடி கண்டுபிடிப்பது சிரமம். அதனால் தான் இவ்வகை விட்ஜெட் வாசகர் கூடவே நகரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

Gmail வசதியை எப்படிக் கையாள்கிறீர்கள் என்ற புள்ளிவிபரத்தினை பெற

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னொரு கரமாய், அல்லது, பாக்கெட்டாய் இயங்கி வருவது ஜிமெயில் வசதியாகும். அனைவரும் பயன்படுத்தும் இந்த மின்னஞ்சல் சாதனத்தை ஒவ்வொரு வரும் எப்படிக் கையாள்கிறார்கள் என்பது அவரவர் விருப்பம் மற்றும் செயல்திறனைப் பொருத்ததாகும். பலர் பதிலே அனுப்பாமல் தனக்கு வரும் மெயில்களை மட்டும் படிப்பவராக இருக்கலாம். சிலர் ஒரு மெயிலைப் பலருக்கு அனுப்பலாம். ஒரு சிலர் அனுப்பிய மெயிலுக்கு மட்டும் தொடர்ந்து மாற்றி மாற்றி பதில் அனுப்பிய வண்ணம் சிலர் செயல்பட்டிருப்பார்கள்.

கணணிக்கல்லூரி கருத்துக்கணிப்பு முடிவுகள் May

நாம் அண்மையில் பரிசோதனை முறையில் இக்கருத்துக்கணிப்பை நடத்த ஆரம்பித்தோம். நல்ல வெற்றி கிடைத்தது. பலர் உண்மையான தகவல்களை எம் மீது நம்பிக்கை வைத்து வழங்கினார்கள். சிலர் பொய்யான தகவல்களை வழங்கினார்கள். அவற்றை நாம் நீக்கி விட்டோம். இங்கு பங்கு பற்றுவது இரகசியமானது. உங்கள் தனிப்பட்ட விடயங்களை நாம் வினவுவது இல்லை.
தயவுசெய்து உண்மையான தகவல்களை மாத்திரம் வழங்குங்கள்.

HTML5 மூலமான சில ஆச்சரியமான படைப்புக்கள்

HTML5 பற்றி அறிந்து இருப்பீர்கள்.. அதில் நிகழ்த்த தக்க சில பல ஆச்சரியமான மாற்றங்களை இங்கே காணுங்கள்.. இவை Canvas Applications என அழைக்கப்படுகின்றன. இவ்வாறு உங்களுக்கும் தெரிந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இவை செயற்பட உங்கள் உலாவி html5 உடன் இசைவதை உறுதிப்படுத்துங்கள். தற்கால உலவிகள் பெரும்பாலும் இவற்றை ஆதரிக்கின்றன.

HTML5 இணைய போட்டோ எடிட்டர்கள்

நாம் முன்பு கணணிக்கல்லூரியில் பிளாஷ் வகை புகைப்பட வடிவமைப்பான்களை தந்தோம். அதை தொடர்ந்து உங்கள் ஆதரவுடன் இப்போது HTML5 இல் அமைந்த இணைய போட்டோ எடிட்டர்கள் 2டை தருகிறோம். இவை முன்னையதிலும் முற்றிலும் வேறுபட்டது. நீங்களே முயன்று பாருங்கள்... இவரில் புகைப்படங்களை வடிவமைத்து தரவிறக்க முடிகிறது. கட்டணம் செலுத்தும் மென்பொருட்களை விட இவ் இலவச வடிவமைப்பான்கள் மேலானவை.

பல்கலைகழக தரத்தில் இணைய வடிவமைப்பு பயிற்சிகள்- இலவசமாக கற்பிக்கும் சிறந்த 5 இணையதளங்கள்


coderacer Web design training: The top 5 online tools
இன்று பல இணைய தளங்கள் இலவசமாக இவ் இணைய வடிவமைப்பை பற்றி சொல்லி தருகின்றன. எனினும் இவற்றில் சொல்வது பல பயில்வோருக்கு விளங்குவதே இல்லை. நாங்கள் இங்கே இணையத்தில் இலவசமாக தெளிவாக இணைய தள வடிவமைப்பையும் இணைய கருவிகளையும் தரும் 5 சிறந்த தளங்களை பட்டியல் படுத்துகிறோம். நீங்களும் இணைய வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர்களாயின் முயன்று பாருங்கள்.

HTML5இல் இணைய இசைக்கருவி

இணைய மொழிகளில் அடுத்த தலைமுறையான HTML5இல் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கருவிகள் வடிவமைக்கப்பட்டுக்கொண்டு உள்ளன. நாமும் சளைக்காமல் அனைத்தையும் உடனுக்குடன் தருகிறோம். அந்த வகையில் புதிய வகை பியானோ ஒன்றை இங்கே இசைத்து பாருங்கள் இது பெரும்பாலும் firefoxஇல் சிறப்பாக இயங்குகிறது.

Adobe CS6 இயங்குதள அடிப்படை தகவுகள்


கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட அடோப் CS 6 மென்பொருட்களின் இயக்கத்திற்கு தேவையான  கணணி நிலைமைகளை பாருங்கள். போடோஷோப்பை தொடர்ந்து இத்தளத்தில் ஒவ்வொரு மென்பொருளினதும் விமர்சனங்களை எதிர் பாருங்கள்.

Adobe CS6 தொகுப்புக்கள் ஒரே பார்வையில் + தரவிறக்க இணைப்பு

கடந்த சித்திரை மாதம் பின் நடுப்பகுதியில் அடோப் நிறுவனம் தனது CS6  மென்பொருள் தொகுதியை வெளியிட்டு வைத்தது. அடோப் போடோஷோப் பீட்டா CS 6 வெளியிடும் போது வந்த  வந்த ஆரவாரம் இல்லாமல் இத்தொகுப்பு வெளியிடப்பட்டது. பீட்டா பதிப்பு வந்த போது பல தமிழ் தளங்கள் தங்கள் தான் அந்த மென்பொருளை உருவாக்கியது போல தரவிறக்க இணைப்பு எல்லாம் கொடுத்து பதிவிட்டார்கள். இன்று புதிய பதிப்பை பற்றி ஒன்றும் சொல்ல இல்லை. இப்பதிவின் ஊடாக இம் புதிய தொகுதி மென்பொருட்களில் இணைக்கப்பட்ட புதிய சிறப்புக்கள், இவை இயங்க தேவையான அடிப்படை வன்பொருள் தகவு நிலைகள் மற்றும் இலவச தரவிறக்க இணைப்புக்களை நாம் வழங்குகிறோம்.

கொலோசியம்-ரோமில் ஒரு நாள் சுற்றுலா

கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். ரோம் நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான கட்டிடம் ஆகும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இதே நோக்கத்துக்காக இது போன்ற பல அரங்கங்கள் ரோமர்களால் கட்டப்பட்டன. எனினும், இவை எல்லாவற்றிலும் பெரியது, பிளேவியன் அம்ஃபிதியேட்டர் என அழைக்கப்பட்ட கொலோசியம் ஆகும். அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 மக்கள் இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள்.

இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு சுட்டியை இசைவாக்குவது எப்படி?

இன்று நாம் கணனியில் இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு சுட்டியை இசைவாக்குவதை பற்றி பார்ப்போம். நாம் தினமும் சந்திக்கும் அசாத்திய திறமை கொண்ட மனிதர்களில்  பலர் இடது கைக்காரர்கள். ஐயன்டின் முதல் ஒபாமா வரை அனைவரும் இடது கை காரர்கள். எனினும் சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்கள் அவர்களை கலப்பு கை காரர்களாக மாற்றி விடுகிறது.கைகளில் இடது கை மௌஸ் கிடைப்பது கஷ்டம். கிடைத்தாலும் இயங்கு தளம் இவர்களுக்காக இசைவாக்க வேண்டும். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ஈபிள் கோபுரத்தில் (Eiffel Tower) ஏறி பார்ப்போம்

ஈபிள் / Eiffel கோபுரம் பாரிஸில் மிகக் கூடுதலாக அடையாளம் காணத்தக்க குறிப்பிடமாகும். அத்துடன், உலகம் முழுவதிலும், இது பாரிஸிற்கான ஒரு குறியீடாகவும் அறியப்படுகிறது. இதை வடிவமைத்த குஸ்ட்டேவ் ஈபெல்ல்லின் பெயரினால் அழைக்கப்படும் இக் கோபுரம், முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஆண்டுதோறும் 55 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்க்க வருகிறார்கள். இக் கோபுரம் தனது 20 கோடியாவது பார்வையாளரை 2002, நவம்பர் 28 ஆம் திகதி பெற்றது. உலகில் உள்ள அனைவராலும் பார்க்க ஆசைப்பபடும் படியாக வடிவமைக்கப்பட்ட இந்த இடம் இரவில் ஒளிரும் போது நாம் சொர்க்க வாசலில் தான் நிற்கிறோமா என்று என்ன தோன்றும்.

இந்தியாவின் தேசிய அருங்காட்சியகத்தை கணனியில் சுற்றிப்பார்ப்போம்

அருங்காட்சியகங்கள், அறிவியல், கலை, மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைச் சேகரித்துப் பாதுகாத்து, மக்களுடைய பார்வைக்காகக் காட்சிப்படுத்துகின்றன. இக் கண்காட்சிகள், நிலையானவையாகவோ அல்லது தறகாலிகமானவையாகவோ இருக்கலாம். பெரிய அருங்காட்சியகங்கள், உலகின் பெரிய நகரங்கள் எல்லாவற்றிலும் காணப்படுகின்றன.பல அருங்காட்சியகங்கள் அவை அமைந்துள்ள பகுதிகளின் பண்பாடுகளின் மீது குறிப்பான கவனம் செலுத்துகின்றன. பெரும்பாலான அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருட்களைத் தொட்டுப்பார்க்க அனுமதிப்பதில்லை எனினும் சில அருங்காட்சியகங்களில் சில பொருட்களைத் தொட்டுத் தொடர்பாடுதல் ஊக்குவிக்கப்படுகின்றது.

வலைதளத்தில் பாதுகாப்பான அதிக வசதிகள் கொண்ட Comment பகுதியை இணையுங்கள்

பெரும்பாலும் இத்தளத்திற்கு வரும் நண்பர்கள் அனைவரும் எதோ ஒரு வகையில் பிளாக்கர்கள். இந்த பிளாக்கர்கள் பற்றி கூறும் போது அவர்கள் உடைய கமெண்ட் பற்றி கூற வேண்டும். எமது தளத்தில் பதியப்படும் கமெண்ட் இல் 60% ஆனவை உதவி கோரும் நோக்கிலும், 35% தங்கள் தளத்திற்கு இலவச விளம்பரம் போடுபவர்களாகவும் 5% வாழ்த்து சொல்பவர்களகவும் இருக்கிறார்கள். அண்மை காலத்தில் இந்த கமெண்ட் முக்கியத்துவம் பெறுகிறது. அண்மையில் இந்து மத வாதிகளும் இஸ்லாமிய வெறியர்களும் பால் வேறு பாடு இன்றி மோதிக்கொள்கிறார்கள். ஒருவருக்கோருவர் எச்சரிக்கை விடுவது வசை பாடுவது இவர்களின் தளத்தின் இருப்பை உறுதி படுத்துகிறது.

பிளாக்கரை சொந்த வலை தளம் போல மாற்றி விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைப்பது எப்படி?

joomla templatesவலைப்பூ வைத்து இருக்கும் அனைவரும் அறிய வேண்டிய மென்பொருள். ஆனால் ஒருவரும் அறிந்திராத மென்பொருள் என்றால் இது தான். இதன் சிறப்பை சுருங்க சொல்லின் பிளாக்கர் என்பது முன் வடிவமைக்கப்பட்ட டேம்ப்லஸ்களை உபயோகித்து உருவாகிய வலைப்பூக்களை சாதாரண வலை தளம் போல எமது விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து சொந்த வலை தளம் போல இயங்க வழி வகுக்கும் மென்பொருள். இதன் செயற்பாட்டை சுருங்க சொல்லின் இம் மென்பொருள் மூலம் உங்களால் வடிவமைக்கப்பட வலை தளத்தை இதில் தரும் HTML Codingகை பிளாக்கர் html பகுதியில் ஒட்டி ஏனைய போட்டோ போன்ற filesசை அவர்கள் தரும் வேறு இடங்களில் சேமித்து தனி வலைத்தளம் போல நிர்வகித்தல் ஆகும்.

நயகரா நீர்வீழ்ச்சிக்கு கணனியில் ஒரு பயணம்

முதலில் நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி கொஞ்சம்.அமெரிக்கா மற்றும் கனேடிய எல்லைகளுக்கு நடுவில் ஓடும் நயாகரா நதியில் பாதி தொலைவில் உள்ளது.நீர்வீழ்ச்சியின் ஒரு புறம் அமெரிக்கா, மற்றொரு புறம் கனடா.மூன்று முக்கிய நீர்வீழ்ச்சிகளை கொண்டது.பெரியது மற்றும் முக்கியமானது ஹார்ஸ் ஷூ(Horse Shoe Falls) அல்லது குதிரை லாட நீர்வீழ்ச்சி கனடாவில் உள்ளது.அடுத்தது அமெரிக்கன் நீர் வீழ்ச்சி மற்றும் சிறிய ப்ரைடல் வேய்ல் நீர்வீழ்ச்சி.உயரம் அதிகம் இல்லாவிட்டாலும் ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சி 762 மீ அகலம் கொண்டது.

கூகிள் நிறுவனத்தின் உட்புறத்தை சுற்றி பார்ப்போமா?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கூகிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.நீங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் தவறான இடங்களில் வேலை செய்கின்றோமோ என்று எண்ணியிருப்பீர்கள்? அப்படியாயின் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தைப் பாருங்கள்.
அதன் சூழல் எவ்வளவு அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமாக சறுக்கி வரும் மாடிப் படிகள்,விரும்பிய உணவையோ அல்லது பானத்தையோ அருந்தும் நிலையிலுள்ள உணவுக் கூடங்கள்,விளையாடுவதற்கான பிரத்தியேக இடங்கள், சொந்த விவாகாரங்கள் பற்றி தொலைபேசியில் பேசுவதற்கு பிரத்தியேகமான இடங்கள்,ஓய்வு அறைகள், என்பன ஒரு அலுவலகம் என்ற எண்ணத்தையே ஊழியர்களிடம் இல்லாமல் செய்து விடுகின்றது.கூகுளின் பிரமாண்ட வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சாய் பாபாவின் மரணத்தின் பின்னரான காலத்தில் அதிசயங்கள்

பிரபல செக்ஸ் சாமியார்கள் வரிசையில் சாய் பாபாவிற்கு தனி இடம் உண்டு. ஏற்கனவே "பிரபல செக்ஸ் மேஜிசியன் சாய் பாபாவின் உண்மை முகம்" பகுதியில் அவரின் மறைவை முன்னிட்டு வழங்கப்பட்ட  பதிவை தொடர்ந்து இப்பதிவு இடம் பெறுகிறது.ஏனப்பா பாபா மீது உங்களுக்கு கோபம் என சிலர் என்னைப் பார்த்துக் கேட்கலாம்? தனிப்பட்ட கோபம் என்று அவர் மீது ஒன்றுமில்லை. ஆனால் ஒரு சத்திய சாய் பாபாவின் மரணத்தைக் காட்டிய இதே ஊடகங்கள் நாளை எங்க வீட்டுப் பக்கத்தில் இருக்கும் குறியாடியின் மரணத்தைக் காட்டுவார்களா என்பதே எனது கேள்வி? அய்யோடா பாபா வாழும் கடவுளாச்சே அதான் இவ்வளவு பெரிதாக காட்டுறாங்க என்கின்றீர்களா?