இன்று பல இணைய தளங்கள் இலவசமாக இவ் இணைய வடிவமைப்பை பற்றி சொல்லி தருகின்றன. எனினும் இவற்றில் சொல்வது பல பயில்வோருக்கு விளங்குவதே இல்லை. நாங்கள் இங்கே இணையத்தில் இலவசமாக தெளிவாக இணைய தள வடிவமைப்பையும் இணைய கருவிகளையும் தரும் 5 சிறந்த தளங்களை பட்டியல் படுத்துகிறோம். நீங்களும் இணைய வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர்களாயின் முயன்று பாருங்கள்.
01. Web design training with Treehouse

இங்கு HTML , CSS மட்டும் இன்றி Apple iOS இயங்கு தள வடிவமைப்பையும் சொல்லி தருகிறார்கள்(Objective-C and Xcode). அத்துடன் பல பயிற்சிகளை தந்து உங்கள் திறமைக்கு ஏற்ப விருதுகளையும் தந்து உங்களை ஊக்கபடுத்துகிறார்கள். பயன்படுத்தும் உங்களை சிறந்த முறையில் வழிப்படுத்தும் தள வடிவமைப்பு சிறப்பானது.
02. Learn to code with Codecademy

அண்மையில் பல தமிழ் தளங்களில் இதை பற்றி அறிந்து இருப்பீர்கள். இவை websites, games மற்றும் apps வடிவமைப்பு ஊடாக இலவசமாக கோடிங் பற்றி சொல்லி தருகிறார்கள். இவர்களும் உங்களை ஊக்கப்படுத்த பல விருதுகளை தருகிறார்கள். இங்கு மிக மிக அடிப்படையில் இருந்து கற்பிப்பது மிகச்சிறப்பானது.
03. Web designtraining from Mozilla School of Webcraft

இவர்கள் PHP, HTML , CSS ஆகியவற்றை கற்பிக்கிறார்கள். இவர்கள் உங்களை வேறுபட்ட திறமை உள்ளவர்களாக உருவாக்க முயல்கிறார்கள். உதாரணமாக இவர்கள் உடைய முதல் பாட நெறி உங்களை அடிப்படை தகவுடன் இணைய தளத்தை உங்களுக்கு என்றே சொந்தமாக உருவாக்குதல் ஆகும். இது இணைய பல்கலை கழகங்களில் ஒன்றாகும்.
04. Udacity

படத்தை பார்த்தே புரிந்து கொள்ளலாம். இங்கு உள்ள பாட நெறிகள் Stanford and the University of Virginia ஆகிய இடங்களில் உள்ள விரிவுரையாளர்கள் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. நீங்கள் விரும்பிய வகையில் திட்டம் இட்டு படிக்கும் வசதியையும் இங்கு தருகிறார்கள். இதை விட முக்கியம் தம்மை நம்பி வரும் அனைவரையும் 7 வாரங்களில் ஒரு சிறந்த இணைய வடிவமைப்பாளர் ஆக்குவதே தங்கள் நோக்கம் என்கிறார்கள்.
05.Code Racer

இது சற்று வித்தியாசமானது. வழமையான பாணியில் அல்லாமல் உங்களை வேறு விதத்தில் கற்பிக்க விழைகிறது. இவற்றில் நீங்கள் எதிர் பாராத பல விடயங்கள் உண்டு. இது HTML, CSS அடிப்படைகளை பயில சிறப்பானதும் ஆச்சரியம் மிக்கதுமான தளம் . உதாரணமாக நீங்கள் உங்கள் பாடத்தை பூர்த்தி செய்ய நீங்கள் உங்கள் எதிரியின் செயல் நிரலை விசேட ஆயுதம் மூலம் தகர்க்க வேண்டும். அப்போது தான் அடுத்த படிக்கு செல்ல முடிகிறது.
தளம்: coderace.me
தளம்: coderace.me

06.Code School
இங்கு அடிப்படை இலவசமாகவும் தொடர பணமும் செலுத்தும் வசதியை தருகின்றார்கள்.Site: codeschool.com/இனி என்ன? நீங்களும் உங்கள் இணைய வடிவமைப்பை ஆரம்பிக்க வேண்டியதுதான். நாங்கள் இதை தவிர வேறு ஏதும் சிறப்பான தளங்களை குறிப்பிட இங்கு தவறின் comment பகுதியில் அறிய தாருங்கள்.
============================================================================
உங்களிற்கு சில ...
- பலர் பல இலட்சங்கள் செலவழித்து இணைய வடிவமைப்பை பயில்கிறார்கள். ஆனால் நிறுவனங்கள் பணத்தை கறந்து விட்டு கை விரிக்கிறார்கள். HTML அடிப்படை மட்டும் கற்பித்து விட்டு 10000 பெறுகிறார்கள். இவர்களின் நோக்கம் பணம் கறப்பதா அல்லது குருவை மிஞ்சிய சிஷ்யன் இருக்க கூடாது என்பதற்காகவா?
- பலர் இவ்வாறான இலவச பயிற்சிகளை நம்புவது இல்லை. பணம் கொடுத்துதான் படித்தால் படிப்போம் - நன்றாக படிப்பிப்பார்கள் என்ற எண்ணம் இவர்களில் வலுத்துள்ளது. உயர் தர பரீட்சை முடிவடைவையும் தினங்களில் இவ்வாறான அப்பாவி மாணவர்களை வளைத்து போட பெண்களுடன் நிறுவங்கள் கையில் துண்டு பிரசுரம் ஏந்தியபடி பாடசாலை வாசல்களை மொயப்பதை இலங்கை முழுவதும் பார்க்கலாம்.
- இத் தளத்தில் சில பரிசோதனை முறையிலான கருத்துக்கணிப்புகள் இடம் பெறுகின்றன. இவற்றில் நீங்கள் விரும்பினால் பங்கு பெறலாம்.
நீங்களே எங்கள் உலகம்!!