சரி, விடயத்திற்கு வருவோம். அண்மையில் நித்தியானந்தா மதுரை ஆதினத்தில் முடிசூடையமை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே காலத்தில் தான் இவ் செக்ஸ் மேஜிசியனின் நினைவு தினமும் வந்தது. அவர் இறந்த பின் மீண்டு வருவார் என்று எல்லாம் பல வதந்திகள் உலாவியது நினைவிருக்கிறதா? அவர் இறந்த பின்பு இலங்கையில் சில பல அதிசயங்கள் நிகழ்ந்தன.
உதாரணமாக திருகோண மலை பகுதில் உள்ள ஒரு வீட்டில் விபூதி கொட்டியது. நான் கூட நண்பர்களுடன் சென்று பார்த்தேன். ஒரு பிரசித்தி பெற்ற ஆலய வெளி புற மதிலின் உட்பக்கத்தில் இருந்த படத்தில் கண்ணாடி முழுவதும் நீறு.. ஆச்சரியப்பட வைத்தது. வீட்டின் தலைவர் ஒரு விதானையார். எம் ஊர் GSகளை பற்றி நம்மவர்களுக்கு தான் தெரியுமே. இவர் பல தசாப்தங்களாக இவரை வழிபாடுகிறார். தினமும் பஜனைகள் நடை பெறுகின்றன. இதேபோல யாழ்பாணத்தில் கூட ஒரு வீட்டில் திரு நீறு வந்தது. இதே போல தேனும் வருகிறதாம்.
என்ன ஆச்சரியம், இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞானி சொன்ன சக்தி திணிவு சமவலு கோட்பாடு நிஜமாகிறதா? இல்லை இவர்கள் இரவில் திருநீறையும் தேனையும் கடையில் வாங்கி பூசி விடுகிறார்களா?? இதுவரை யாரும் திரு நீறு தோன்றுவதை ரியல் Realtimeingஇல் பார்க்க வில்லை. இதைவிட நாம் பல மாயாஜால நிகழ்ச்சிகளில் கூட நிகழ் நேரத்தில் இவ்வாறு உருவாவதை பார்த்து இருக்கிறோம். எனவே இவர்களையும் நாம் கடவுள் ஆக்க்கலாமே.
இவர்கள் வைக்கவில்லை என்றால் எப்படி தோன்றியது? ஒரே ஒரு வழிதான் உள்ளது. சக்தி அங்கு உறிஞ்சப்பட்டு திணிவு ஆகிறது. சாத்தியமா? நீங்களே தீர்மானியுங்கள்.சாய் பாபாவின் சித்து வேளைகளை மக்களிடம் சொல்வதற்காக சாய் பாபாவினைப் போன்றே பிரபல பகுத்தறிவாளரான ஆபிரகாம் தோமஸ் கோவூர் விபூதிகளை கைகளில் இருந்து தந்திரமாக கொடுக்கும் காட்சியினை செய்துக் காட்டி உள்ளார். "சாய் பாபாவின் சித்து வேளைகளை மக்களிடம் சொல்வதற்காக சாய் பாபாவினைப் போன்றே பிரபல பகுத்தறிவாளரான ஆபிரகாம் தோமஸ் கோவூர் விபூதிகளை கைகளில் இருந்து தந்திரமாக கொடுக்கும் காட்சியினை செய்துக் காட்டினார்"
என்பதெல்லாம் பழைய கதைகள்.
இதே போல மாதா படத்தில் கை வந்ததும் இரத்தம் வந்தததும் இவ் யாழ் பிராந்தியத்தில் மட்டும் அல்ல, உலகம் முழுவது நிகழ்ந்தது. ஓசூரில் தனியார் கம்பெனி அதிகாரி வீட்டில், சாய்பாபா போட்டோவில் இருந்து விபூதி கொட்டுவதையும் நாம் அறிந்தோம். இதில் ஏதோ மர்மம் அல்லது வித்தை இருக்கிறது. இது சாதாரண மனிதர்கள் வீட்டில் நடந்தது,
அடுத்து புட்டபர்த்தியில் நடந்தது. இதில் புதிதாக இல்லை. வழமையான சொத்து தகராறுதான். இவற்றால் மக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகள் ஒருபோதும் மறக்க முடியாதவை. இப்பொழுதும் கூட நினைவு தினத்தில் பல தானங்கள் உலகம் முழுவதும் வழங்கப்பட்டன.
இப்பதிவு இன்னமும் முழுமையடையவில்லை. பொறுத்திருங்கள்.