Home » » கொலோசியம்-ரோமில் ஒரு நாள் சுற்றுலா

கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். ரோம் நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான கட்டிடம் ஆகும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இதே நோக்கத்துக்காக இது போன்ற பல அரங்கங்கள் ரோமர்களால் கட்டப்பட்டன. எனினும், இவை எல்லாவற்றிலும் பெரியது, பிளேவியன் அம்ஃபிதியேட்டர் என அழைக்கப்பட்ட கொலோசியம் ஆகும். அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 மக்கள் இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள்.


முற்றிலும் சேதம் அடைந்துள்ள இக் கட்டிட கலையை Jeans  திரைப்பட "பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக்கூட்டம் " பாடலில் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு முன்பு கிடைத்திருக்கும். ஆனால் இன்றைய அழகை காண நாம் வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளோம்.

சிறப்பு மிக்க கொலோசியத்தை நீங்களும் ஒரு தடவை இங்கே சுற்றி பாருங்கள்.

இனி உலகம் உங்கள் வசம்!!!