Web Page Tracking

URL
இன்டெர்நெட்டை திரும்பி பார்க்க உதவும் வேபேக் மெஷின் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.இணையதளங்களின் கடந்த கால தோற்றங்களை சேமித்து வைக்கும் இந்த தளத்தை இணையத்தின் கால் இயந்திரம் என்றும் சொல்கின்றனர்.


ஒரு இணையதளம் குறிப்பிட்ட காலத்திற்கு முன் எப்படி இருந்தது என்று அறிய விரும்பினால் இந்த இயந்திரத்தின் மூலம் காலத்தில் பின்னோக்கி சென்று அந்த தளத்தின் அப்போதைய தோற்றத்தை பார்க்க முடியும்.

மைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்
உங்களுக்கென்று ஒரு நிறுவனம் இயங்கி, அதற்கான இணைய தளம் ஒன்றை உருவாக்க எண்ணினால், நீங்கள் அவசியம் மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் தொகுப்பினைப் பயன்படுத்த வேண்டும். இந்த தொகுப்பின் மூலம் தொழில் ரீதியான ஓர் இணைய தளம், தளப் பெயர், இமெயில் வசதி மற்றும் அதனைத் தாங்கி இயக்கும் வசதி என அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் பெறலாம். இவை அனைத்துமே இலவசம் என்பது இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று.  இதனைப் பெற நீங்கள் முதலில் அணுக வேண்டிய தள முகவரி http://officelive.com/enus/. தளத்தில் நுழைந்தவுடன் அங்குள்ள “Create a Free Website” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். உடன் இதில் பதிவு (Sign In) செய்திட செய்தி கிடைக்கும். அனைத்தும் பதிவு செய்து உறுதியானவுடன், மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் மெயின் விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு தான் உங்களுக்குத் தேவையான இமெயில் வசதி, தளப் பெயர், தள வடிவமைப்பு ஆகியவற்றைப் பெறலாம். நீங்களே உங்கள் தளத்தினை வடிவமைக்கலாம். அதற்கான டூல்கள் இங்கு தரப்பட்டுள்ளன. இங்கு சென்று இந்த டூல்களைப் பற்றித் தெரிந்த பின்பே, இணையதளம் ஒன்றினை வடிவமைப்பது எவ்வளவு எளிது என்று அறிந்து கொள்ளலாம்.
“Design Site” லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இரண்டு விண்டோக்கள் திறக்கப்படும். ஒரு விண்டோவில் வெப்சைட் மேனேஜர் பக்கம் கிடைக்கிறது. இன்னொன்றில் வெப் டிசைன் டூல்கள் தரப்படுகின்றன. இதற்குக் கீழாக ஹோம் பேஜ் ஒன்று தரப்பட்டு நீங்கள் எடிட் செய்வதற்கு ரெடியாக இருக்கும். அதிலேயே உங்கள் தளத்திற்கான “About Us” மற்றும் “Contact Us” தயாராக இருப்பதனைக் காணலாம். இதன் பின்னர், அதில் தரப்பட்டுள்ள எளிதான யூசர் இன்டர்பேஸ் மூலம் தளத்தினை வடிவமைக்கலாம். ஏற்கனவே மைக்ரோசாப்ட் தரும் ஷேர் பாய்ண்ட் பயன்படுத்தியவர்களுக்கு இது இன்னும் எளிதாகத் தோன்றும்.
தளத்தின் ஹெடர் டெக்ஸ்ட்டை விரும்பியபடி மாற்றலாம். அதற்கான பாப் அப் விண்டோக்கள் அடுத்தடுத்து கிடைக்கின்றன. டெக்ஸ்ட்டை நமக்கேற்ற வகையில் பார்மட் செய்திடலாம். இதில் நம் இலச்சினையைச் சேர்த்து அமைக்கலாம். எளிதான டூல்களும், வழி நடத்தும் குறிப்புகளும் இணைந்து நம் இணைய பக்கத்தினை எளிதாக உருவாக்க உதவுகின்றன. மேலும் இது இலவசம் என்பது கூடுதல் சிறப்பாகும். எதற்கும் ஒருமுறை சென்று பார்த்து பயன்படுத்திப் பாருக்கள்.

10 சிறந்த இலவச Best Anti Virus

இந்த கட்டுரை உண்மையில் எந்த அறிமுகம் வேண்டும். பல இலவச உள்ளன வைரஸ் தடுப்புசந்தையில் திட்டங்கள், மற்றும் நீங்கள் வைக்கோல் கோதுமை வரிசைப்படுத்த வேண்டும். போதும். சந்தையில் 10 சிறந்த வைரஸ் திட்டங்கள் இங்கே ஆவணப்படுத்தப்பட்டது.

ஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்பது எப்படி?இன்று பேஸ்புக் கணக்கு வைத்திருக்காதவர்களே இருக்கமுடியாது. அந்தளவுக்கு பேஸ்புக் பிரபல்யம் பெற்றுள்ளது. எந்தளவுக்கு பிரபல்யமாகியுள்ளதோ அந்தளவுக்கு திருட்டு வேலைகளும் அதிகரித்துள்ளது.
இன்று பார்க்கப்போவது திருட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றி.

ரகசியமாக மின்னஞ்சல் அனுப்புவதற்குமின்னஞ்சல் முகவரியை மறைத்து அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுவது போல மின்னஞ்சல்  செய்தியையே ரகசியமாக அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுமா என்று தெரியவில்லை.

ரகசியமாக மின்னஞ்சல் அனுப்புவதற்குமின்னஞ்சல் முகவரியை மறைத்து அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுவது போல மின்னஞ்சல்  செய்தியையே ரகசியமாக அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுமா என்று தெரியவில்லை.அதாவது நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் செய்தியை தாக்காளர் யாராவது இடைமறித்து படித்து விடக்கூடும் என்ற அச்சம் இருந்தால் மின்னஞ்சல் வாசகங்களை யாரும் படித்து விட முடியாத வகையில் ரகசியமாக அனுப்பி வைக்க நினைத்தால் பிரைவ் நோட் இணையதளம் அதற்காகவே காத்திருக்கிறது.
இந்த தளத்தில் ரகசியமாக அனுப்ப வேண்டிய தகவலை டைப் செய்தால் அதற்கான இணைய முகவரி ஒன்றை தருகிறது. யாருக்கு மின்னஞ்சல் சென்று சேர வேண்டுமோ அவருக்கு இந்த இணைய முகவரியை மட்டும் அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சல் அழியே அல்லது மெசேஜிங் மூலம் இந்த ரகசிய குறியீட்டு முகவரியை அனுப்பலாம்.
இதனை பெறுபவர் மட்டுமே அதனை கிளிக் செய்து படிக்க முடியும். அவரும் கூட ஒரே ஒரு முறை தான் இந்த செய்தியை படிக்க முடியும். காரணம் அவர் படித்து முடித்தபிறகு இந்த செய்தி காணாமல் போய்விடும். அதாவது தன்னை தானே அழித்து கொண்டுவிடும்.
எனவே யாருக்கு அனுப்பபட்டதோ அவரை தவிர யாரும் இந்த செய்தியை படித்துவிட முடியாது. இந்த அளவுக்கு மிகவும் ரகசியமான மின்னஞ்சல் அனுப்பும் அவசியம் ஏற்படுகிறதோ இல்லையோ இப்படி படித்தவுடன் மறைந்துவிடும் மின்னஞ்சல் சேவையை சுவாரஸ்யம் கருதி பயன்படுத்தலாம்.
இணையதளமுகவரி

இணையதளங்களை சோதிப்பதற்கு

இணையதளங்களை சோதிப்பதற்கு

இன்றைய இணையதளங்களில் எந்த தளத்தில் என்ன மோசமான வைரஸ் அல்லது திருடும் நோக்கம் கொண்ட புரோகிராம் இருக்கும் என நம்மால் கண்டறிய முடியவில்லை.பிரபல நிறுவனங்களின் இணைய தள முகவரிகளில் சிறிய மாற்றங்கள் செய்தும், அந்நிறுவனங்களின் இணைய தளங்களைப் போலவே பக்கங்களை வடிவமைத்தும், பல திருடர்கள் தங்கள் திருடும் புரோகிராம்களை நம் கணணிக்குள் அனுப்பி விடுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஓர் இணைய தளம் இது போல தீங்கு எதுவும் இல்லாததுதானா என்று கண்டறிந்து கூறும் சேவையினை சைமாண்டெக் நிறுவனம் இலவசமாக நமக்குத் தருகிறது.
இதற்கென http://safeweb.norton.com/ என்ற முகவரியில் தளம் ஒன்றை அமைத்துள்ளது.

கைத்தொலைபேசிக்கான இணையதளத்தை வடிவமைப்பதற்கு


   
 கைத்தொலைபேசியில் பார்ப்பதற்கு தகுந்தபடி அழகான மொபைல் வலைதளம் ஓன்லைன் மூலம் எந்த மென்பொருள் துணையுமின்றி இலவசமாக உருவாக்கலாம்.கைத்தொலைபேசிகள் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் என்று ஆகிவிட்டது. மின்னஞ்சல் படிப்பதில் தொடங்கி இணையதளம் பார்ப்பது வரை அத்தனையும் நாம் கைத்தொலைபேசி மூலமே செய்யலாம்.

விண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு
மைக்ரோசாப்ட் தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தயாரிப்பில் மிக வேகமாக ஈடுபட்டு வருகிறது. பல வலைமனைகளில் இதன் கட்டமைப்பு குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Building Windows 8 என்ற வலைமனையில் பல தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
விண்டோஸ் 95 சிஸ்டம் வந்த பின், பெரிய அளவிலான மாறுதல்களுடன் வர இருப்பது இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். விண்டோஸ் 95 வெளியான போது, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடுதான் உச்சத்தில் இருந்தது. லேப்டாப் கம்ப்யூட்டர்கள் சாதரண மக்கள் வாங்கிப் பயன்படுத்த முடியாத விலையில் அனைத்து நாடுகளிலும் இருந்தன. இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நுகர்வோர் தொழில் நுட்ப ரீதியில் சிறப்பான இயக்கத்தினை அனைத்து சாதனங்களிலும் எதிர்பார்க் கின்றனர். ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் மற்றும் ஐபேட் சாதனங்களில் உள்ள வசதிகளை பெர்சனல் கம்ப்யூட்டரிலும் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையிலான எதிர்பார்ப்புகளைச் சந்திக்கும் வகையில், விண்டோஸ் 8 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, புதிய தொடுதிரை தொழில் நுட்பம் கொண்டதாகவும், வழக்கமான பயன்பாடும் இணைந்ததாகவும் விண்டோஸ் 8 அமையும். இந்த சிஸ்டம் ஏ.ஆர்.எம். மற்றும் இன்டெல் சிப்கள் என இரண்டு வகை ப்ராசசர்களில் இயங்கும். தற்போது மைக்ரோசாப்ட் தரும் ஆன்லைன் வசதிகளான ஸ்கை ட்ரைவ், ஆபீஸ் 365 மற்றும் இலவச ஆபீஸ் இணைய அப்ளிகேஷன்களை ஒருங்கிணைப்பதாக அமையும். மற்ற சிறப்பு அம்சங்களாக, யு.எஸ்.பி.3 சப்போர்ட் மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பினைக் கூறலாம்.
தொடுதிரை வசதிக்கென பெரிய அளவிலான பேனல்களை விண்டோஸ் 8 திரையில் காட்டும். இதனை மவுஸ் கொண்டும் இயக்கலாம். வழக்கமான ஸ்டார்ட் பட்டன், டாஸ்க் பார் மற்றும் டெஸ்க்டாப் வகையறாவும் இதில் கிடைக்கும். தொடுதிரை தருவதன் மூலம் இப்போது வரும் டேப்ளட் பிசிக்களுடன், விண்டோஸ் போட்டியிட முடியும். மேலும், தன்னுடன் ஒப்பந்தம் கொண்டுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தின் கட்டமைப்பினை வழங்கியுள்ளது. அவர்களும் தொடுதிரை அமைப்பில் இயங்கக் கூடிய அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரித்து வருகின்றன.
விண்டோஸ் எக்ஸ்புளோரரின் செயல் பாட்டில் அதிகக் கவனம் விண்டோஸ் 8 தொகுப்பில் காட்டப்படுகிறது. காப்பி, மூவ், ரீ நேம், டெலீட் எனப் பல செயல்பாடுகளை நாம் அடிக்கடி இதில் மேற்கொள்கிறோம். இந்த ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு விண்டோவினை இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் தந்து வந்தது. விண்டோஸ் 8 தொகுப்பில், இவை அனைத்தும் ஒரே விண்டோவில் இருக்கும். இதன் மூலம் பெரிய பைல்கள், குறிப்பாக வீடீயோ மற்றும் போட்டோ பைல்களை எளிதாக ஒரே இடத்தில் கையாள முடியும். பைல்கள் காப்பி செய்யப்படும் போதும், நகர்த்தப்படும் போதும், எவ்வளவு பிட் டேட்டா மாற்றப்பட்டுள்ளது என வரைபடம் மூலம் தெரிய வரும்.
விண்டோஸ் விஸ்டாவில் தரப்பட்ட ரிப்பன் இன்டர்பேஸ் இதில் தரப்படுகிறது. இதன் மூலம் பைல்களைக் கையாள்வது எளிதாக இருக்கும் என்று தெரிகிறது. எக்ஸ்புளோரர் விண்டோவில் மூன்று டேப்கள் முக்கியமானதாக இடம் பெறும். அவை ஹோம், ஷேர் மற்றும் வியூ (Home, Share and View) ஆகும். இடது புறம் பைல் மெனு கிடைக்கும். ஹோம் டேப்பில், விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் மேற்கொள்ளப்படும் 84% செயல்களுக்கான கட்டளைகள் கிடைக்கும். ஒரு பைலை அதன் டைரக்டரிக்கான வழியுடன் காப்பி செய்வதற்கு “Copy path” என்னும் கட்டளை இதில் தரப்படுகிறது. இந்த கட்டளையுடன் பைல் ஒன்றை இன்னொரு எக்ஸ்புளோரர் விண்டோவில் காப்பி செய்யப்படுகையில், பைலை அணுகுவது எளிதாகிறது.
ஷேர் என்னும் டேப்பின் கீழ் இமெயில் மற்றும் ஸிப் கட்டளைகள் கிடைக்கின்றன. பர்ன் டு டிஸ்க் (Burn to Disc), பிரிண்ட் மற்றும் பேக்ஸ் ஆகியவையும் இதில் உள்ளன.
புதிய பைல் மெனு மூலம் கமாண்ட் ப்ராம்ப்ட் கிடைக்கிறது. இன்னொரு எக்ஸ்புளோரர் விண்டோ மூலம், ஹார்ட் ட்ரைவினை பார்மட், ஆப்டிமைஸ், கிளீன் அப் போன்ற செயல்களை மேற்கொள்ளலாம். பிளாஷ் ட்ரைவ் ஒன்றை வெளியில் எடுக்க, ஆட்டோ பிளே இயக்க இங்கு கட்டளையிடலாம்.
இன்னும் தொடர்ந்து பல புதிய கட்டளைகளையும் வசதிகளையும் உள்ளடக்கியதாக விண்டோஸ் 8 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சில மாதங்களில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனைப் பதிப்பு வர இருக்கிறது. இந்தத் தகவலை மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் ஸ்டீபன் சினோப்ஸ்கி, புதிதாக அமைக் கப்பட்டுள்ள ஒரு வலைமனையில் (http://blogs.msdn.com/b/b8/ archive/2011/08/15/welcometobuildingwindows8.aspx) தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவன சோதனைப் பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனாளர்கள், நிறுவனங்கள், சாப்ட்வேர் புரோகிராம் தயாரிப்பவர் களுடன் தகவல் களைப் பரிமாறிக் கொள்ள, மைக்ரோசாப்ட் விரும்புவதால், அந்த வலை மனையைத் தொடங்கி யுள்ள தாகவும் அதில் அறிவிக்கப் பட்டுள்ளது.

Google Chrome Beta 14: இணைய வேகத்தை அதிகப்படுத்துவதற்கு

கூகுள் நிறுவனம் வெளியிட்ட கூகுள் குரோம் பிரவுசர் பல சிறப்பான வசதிகளால் வாசகர்களால் கவரப்பட்டு வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.தற்போது வளர்ச்சியில் சென்று கொண்டுள்ள ஒரே பிரவுசன் கூகுள் குரோம் தான். IE மற்றும் Firefox தன்னுடைய நிலையில் இருந்து கீழே நோக்கி சென்று கொண்டு உள்ளது.
எளிமையும், வேகமும் இந்த உலவி இவ்வளவு தூரம் வளர காரணமாகும் மற்றும் அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அறிமுகப்படுத்துவதாலும் வாசகர்கள் இதனை விரும்பி பயன்படுத்துகின்றனர்.
எந்த உலவியிலும் இல்லாத சிறப்பம்சமே கூகுள் குரோம் இதன் எளிமை தான். தேவையில்லாத வசதிகளை குப்பைகளை போல் அடுக்காமல் என்ன வசதி வேண்டுமோ அதை மட்டுமே வெளியிடுவது இதன் சிறப்பு.
இப்பொழுது இந்த உலவியின் புதிய பதிப்பு வெளியிட்டு உள்ளனர். முழுக்க முழுக்க வேகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இந்த புதிய பதிப்பை உருவாக்கி உள்ளனர்.
எப்பொழுதும் போல தற்போது இதை சோதனை(Beta) நிலையிலேயே விட்டுள்ளனர். குரோம் உலவியை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவி பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பாக இணைய வேகத்தில் வித்தியாசத்தை உணர்வீர்கள். தரவிறக்க வேகமும் அதிகரிக்கும்.
இணையதள முகவரி

எந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்குவது எப்படி

இப்போது எங்கும் இணையவேகம் ஆகக்குறைந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது (ஒரு சில பிரதேசங்கள் தவிர்த்து) . சாதாரணப் பாவனைக்கு எந்த இணைய வேகமுமே கைகொடுக்கிறது. ஆனால் தரவிறக்கத்தை பொறுத்தவரை அதிவேக இணப்புகள் மாத்திரமே சரியாகிறது. 1 ஜிபி அளவுள்ள ஒரு File ஐ தரவிறக்கவேண்டுமானால் ஒருநாள் முழுதும் செலவழிக்கவேண்டியுள்ளது. சிறிய அளவுள்ள file கள் என்றால் Internet Download Manager மூலமாகவோ அல்லது Orbit மூலமாகவோ விரைவாக தரவிறக்கிவிடலாம். ஆனால் அதிக கொள்ளளவுடைய File களை தரவிறக்குவதில்தான் பிரச்சினை. 

இப்படியான அதிக கொள்ளளவுடைய file களை தரவிறக்குவதற்கு பலரும் Bittorrent மற்றும் Utorrent போன்றவற்றை பயன்படுத்துவார்கள். ஆனால் இவை அதிவேக இணைய இணைப்புக்களுக்கு மாத்திரமே சரியாகிறது.

டுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி?டுவிட்டர் நமது செய்திகளை நண்பர்களுக்கு உடனுக்குடன் தெரிந்து கொள்ள பயன்படுத்தப் படும் ஒரு சமூக வலைத்தள சேவையாக இருக்கிறது. இதன் கட்டுப்பாடான 140 எழுத்துகளுக்குள் செய்தி இருக்க வேண்டும் என்பது ஒரு சுவாரசியமான விசயம். அத்தனை எழுத்துக்குள் நமது செய்தியை புரிகிற மாதிரியும் பொருளுடைய மாதிரியும் அமைப்பது மேலும் சுவாரசியத்தைத் தரும். சொற்களை மட்டுமே பகிர்வது வலைத்தளத்தின் பலவீனம் என உணர்ந்து தற்போது படங்களையும் பகிரும் வசதியைக் கொண்டு வந்துள்ளார்கள்.

போட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொருள்கள்அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் (Adobe Photoshop) ஒரு சிறந்த புகைப்பட மேலாண்மை (Image Editing) மென்பொருளாக இருக்கிறது. புகைப்படங்களை விரும்பிய வடிவில் மேம்படுத்தவும் மாற்றவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. போட்டோ ஸ்டுடியோக்களில் முக்கியமாக இதனையே பயன்படுத்துவார்கள். இதில் உருவாக்கப்படும் கோப்புகள் .psd என்ற கோப்பு வகையில் அமைந்திருக்கும். இந்த வகை கோப்புகளை உங்கள் கணிணியில் போட்டோஷாப் நிறுவியிருந்தால் மட்டுமே திறக்க முடியும். இது ஒரு கட்டண மென்பொருள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

PSD வகை கோப்புகள் உங்களிடம் பகிரப்படும் போது போட்டோஷாப் இல்லாவிட்டால் என்ன செய்வது?

அன்டெலிட் 360 UNDELETE 360

அன்டெலிட் மென்பொருளை பயன்படுத்தி கணினி, டிஜிட்டல் கேமரா, மெமரி கார்டுகள் மற்றும் பென்டிரைவ் போன்ற சாதனங்களிலில் இருந்து அழிந்துபோன பைல்களை மீட்டெக்கும். கணினி சேமிப்பகத்தை குறைவாக பயன்படுத்தி மிகவேகமாக செயல்படுகிறது. கணினியின் ஹார்டு டிஸ்க் மற்றும் பென்டிரைவுகள் ஃபார்மெட் ஆனாலும் மீட்டெடுக்கும் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசாகவே கிடைக்கிறது இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

ஐஎஸ்ஒ கோப்புகளை உருவாக்குவதற்குவிண்டோஸ் இமேஜ் கோப்பு போர்மட்டில் குறிப்பிடத்தக்கது ஐஎஸ்ஒ போர்மட் ஆகும்.இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் மற்றும் ஒரு சில மென்பொருள்களை ஐஎஸ்ஒ போர்மட்டில் மட்டுமே இருக்கும்.

கண்களை காப்பாற்ற

நம்முடைய கணணியை காப்பாற்ற antivirus, firewall போன்ற பலவற்றை பயன்படுத்துகி றோம். ஆனால் நம் உடல் நலனை பாதுகாப் பதை பலர் மறந்துவிடுகிறோம்.
பகல் நேரங்களில் உங்கள் மொனிட்டர் திரை நன்கு பிரகாசமாக தெரியும். அவை பகல் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும்.
நம் மொனிட்டரின் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும்.......

பூமி அழியுமா?


move arrow in pictue to zoom it.
 இப்படம் பூமி அழியும் போது கிரக நிலைகளை காட்டுகிறது. இப்படம் கணணியால் கணித தத்துவத்தின் அடிப்படையில் துல்லியமாக  வரையப்பட்டது . இப்படம் குறித்த 3 மணி நேர ஆயிடையில் கிரகங்கள் ஒரு குறித்த பகுதியில் சேருவதை காட்டுகிறது. (இத் தன்மை மாவீரன் படத்தில் ராஜகுமார வம்சம் அழியும் காரணத்தில் குறிப்பிடப்படுகிறது ) கிரகங்கள் ஒரு புறம்  சேருவதால் கவர்ச்சி விசை ஒரு பகுதியில் குவிக்கபடுகிறது. (இதுக்கு மேல சொன்னால் physics எண்டு குழம்பிடுவிங்க) இது சூரிய கொந்தளிப்புகளை பூமியின் பால் இழுத்து வரும். இது பூமியில் படிந்து காந்த மின் புலங்களை குழப்பி இயற்கைஅழிவுகளை ஏற்படுத்தி உயிரிகளை அழித்து விடும். 3,4,5,6 pars empty. major planets are in 7 8 9 10. Earth in central.


பூமியின் அழிவு காலம்

பூமியின் அழிவு காலம் பற்றி வெளி வந்த கட்டுரையின் Google transilate இன் தமிழ் வடிவம்

ஒரே நேரத்தில் ஒரே இணையதளத்தை அனைவரும் பார்ப்பதற்கு

இணையதளங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வது மிகவும் சுலபமானது. இணையதள முகவரிகளை மின்னஞ்சல் மூலமே, டிவிட்டர் மூலமோ பகிர்ந்து கொண்டு அந்த தளங்களை பார்வையிட கேட்டுக் கொள்ளலாம்.

டிஜிட்டல் நன்னெறிகள்


இமெயில், பேஸ்புக் போன்ற சமுதாய இணைய தளங்கள், மொபைல் போன்கள், வீடியோ அழைப்புகள், அரட்டை கட்டங்கள், வலை மனைகள், தகவல்களுக்கான பதில்கள், டெக்ஸ்ட் குறிப்புகள் என நம் வாழ்க்கையின் ஒவ்வொரு மூலையும் டிஜிட்டல் அம்சங்கள் கொண்டதாய் நிறைந்து இயங்குகின்றன........

சிகிளீனர் புதிய தொகுப்பு
கம்ப்யூட்டர் இயக்கத்தின் போது உருவாக்கப்படுகின்ற தற்காலிக பைல்கள், ரெஜிஸ்ட்ரியில் ஏற்படுத்தப் படும் வரிகள், நீக்கப்படும் பைல்கள், இணைய உலாவின் போது பிரவுசர்கள் தங்கள் வசதிக்கென உருவாக்கும் குக்கீஸ், பிரவுசிங் ஹிஸ்டரி பைல்கள் ஆகியவற்றை நீக்கப் பலரும் பயன்படுத்துவது சிகிளீனர் புரோகிராம் ஆகும். இதனை Priform நிறுவனம் தயாரித்து இலவசமாக இணையத்தில் வழங்கி வருகிறது. ....

ஜிமெயிலின் முன்தோற்றம்

சென்ற ஆகஸ்ட் 4 அன்று, கூகுள் அனைவரும் விரும்பும் ஒரு சிறப்பான வசதியைத் தன் ஜிமெயில் தளத்தில் தந்துள்ளது. பொதுவாக, நமக்கு வந்துள்ள மெயில்களைப் பார்க்கையில், அனுப்பிய வர் பெயர், நாள் மற்றும் நேரம், மெயிலின் தொடக்க சொற்கள் காட்டப்படும்....

டவுண்லோட் ஆகும் பைல் என்ன வகை?நாம் பல பைல்களை இணைய தளங்களிலிருந்து அடிக்கடி டவுண்லோட் செய்கிறோம். இந்த பைல்கள் பி.டி.எப்., ஸிப் ஆர்க்கிவ், வேர்ட் என ஏதோ ஒரு பார்மட்டில் இருக்கலாம்.

விண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடுவிண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் இடைமுகத்தையும் மேம்பட்ட வசதிகளையும் விரும்புவார்கள். சிறப்பம்சங்கள் பல கொண்டுள்ள இந்த இயங்குதளத்தில் பயன்படுத்தாத வசதிகள் நிறையவே உள்ளன. Windows 7 God Mode என்று மைக்ரோசாப்டால் சொல்லப்படும் இந்த உத்தி ஆச்சரியமான ஒன்றாகும். வழக்கமான பயனர்கள் செய்யத் தெரியாத காரியங்களை இதன் மூலம் செய்ய முடியும்.

GodMode என்றால் என்ன?

உங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன என்பதை அறியவலைப்பதிவை நடத்துவதே போதாத வேலையென இருக்கும் போது நாம் கஷ்டப்பட்டு எழுதும் பதிவுகளை மற்றவர்கள் சுலபமாக அதை காப்பி செய்து தங்களின் வலைப்பூவில் போட்டு பேர் வாங்கிக் கொள்கின்றனர்.மேலும் எரிச்சலூட்டும் விதமாக காப்பியடித்த பதிவுகளையும் திரட்டிகளிலும் இணைத்து விடுவார்கள். சில புண்ணியவான்கள் என்னமோ அவர்களே சொந்தமாக எழுதியதாக நினைத்து அதற்கு பதிவு நன்று பகிர்வுக்கு நன்றி என்று கருத்துரையும் இடுவார்கள். இந்த மாதிரி மட்டமான எண்ணமுடைய சிலருக்கிடையில் சில தளங்களும் காப்பி செய்கின்றன. காப்பி செய்வதைத் தடுக்க எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் இவர்கள் நிறுத்துவதாக இல்லை...........

கூகிள் குரோம் OS


Download Google Os directley free

இணையத்தின் பெரும் சக்தியான கூகிள் தனது புதிய இயங்குதளமான கூகிள் குரோம் ஓஎஸ்சை திறந்த வெளி (Open Source) மென்பொருளாக 19 நவம்பர் 2009 அன்று அறிமுகப்படுத்தி உள்ளது. கூகிள் புதிய இயங்குதள தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக அதற்கு கூகிள் குரோம் ஓஎஸ் என்று பெயரிட்டு கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. நேற்று அதற்கான திறந்தவெளி நிரலை வெளியிட்டு உள்ளது.

கூகிள் குரோம் ஓஎஸ் என்பது என்ன? அது என்னவெல்லாம் சேவை வழங்க போகிறது என்பதை சற்றே விளக்கமாக பார்ப்போம்.

உங்கள் கடவுச்சொல்லின் வலிமையை தெரிந்து கொள்வதற்கு

அனைவரும் இப்பொழுது மின்னஞ்சல் ஐடி அல்லது ஏதாவது ஒரு இணையதளத்தில் நுழைய லொகின் ஐடி வைத்திருப்பார்கள்.அதன் கடவுச்சொல் அவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும். உங்களுடைய கடவுச்சொல்லினை உடைக்க அதாவது ஹேக் செய்ய எவ்வளவு நாட்கள் பிடிக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். இதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இந்த தளத்தின் பெயர் How Secure Is My Password? இந்த தளத்தில் உங்கள் கடவுச்சொல்லினை கொடுத்தால் எவ்வளவு நாளில் உங்கள் கடவுச்சொல்லினை கண்டுபிடிக்க முடியும் என்று கூறிவிடுவார்கள்.
ஆனால் இந்த தளத்தில் உங்கள் உண்மையான கடவுச்சொல்லினை கொடுக்காது வேறு ஏதாவது கொடுத்து முயற்சி செய்யலாம்.
இணையதள முகவரி


கடவுச்சொல்லுடன் கூடிய பிடிஎப் கோப்புகளை உருவாக்குவதற்கு

பிடிஎப் கோப்புகளே பெரும்பாலும் பாதுகாப்பு கருதியும், சில எழுத்துரு பிரச்சினை காரணமாகவே உருவாக்கப்படுகின்றன.இவ்வாறு உருவாக்கப்படும் பிடிஎப்  கோப்புகளையே உடைப்பதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. இதனை தடுக்க என்னவழி என்றால் இவ்வாறு நாம் உருவாக்கும் பிடிஎப்  கோப்புகளுக்கு என தனியாக பூட்டு உருவாக்கினால் மட்டுமே தடுக்க முடியும்.
நாம் உருவாக்கும் கடவுச்சொல் வலிமையற்றதாக இருந்தால் மட்டுமே கடவுச்சொற்களை எளிதில் உடைக்க முடியும். பிடிஎப் கோப்புகளை உருவாக்க இலவச மென்பொருள்கள் பல உள்ளன.
கடவுச்சொல்லுடன் கூடிய பிடிஎப் கோப்புகளை உருவாக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு சில மென்பொருள்கள் மட்டுமே உள்ளன. அதில் ஒன்றுதான் Doro PDF மென்பொருள் ஆகும்.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இணையத்தின் உதவியுடன் மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் நீங்கள் கடவுச்சொல்லுடன் பிடிஎப் கோப்பாக உருவாக்க நினைக்கும் கோப்பினை திறக்கவும்.
பின் File --Print என்னும் தேர்வினை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Printer என்னும் ஆப்ஷனில் Doro PDF Writer என்பதை தேர்வு செய்து பின் OK என்னும் பொத்தானை அழுத்தவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Encryption என்னும் டேப்பினை தேர்வு செய்து குறிப்பிட்ட கடவுச்சொல்லை உள்ளிடவும். கடவுச்சொல்லானது எண் மற்றும் எழுத்துக்கள் கலந்து இருப்பின் சிறந்தது. கூடவே பெரிய எழுத்துக்கள் இருப்பது சிறந்தது.
கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் Create என்னும் பொத்தானை அழுத்தவும். தற்போது பிடிஎப் கோப்பானது கடவுச்சொல்லுடன் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த Doro PDF மூலம் அனைத்து விதமான கோப்புகளையும் கடவுச்சொல்லுடன் கூடிய பிடிஎப் கோப்பாக உருவாக்க முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.


பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளை அள்ளிக் கொடுக்கும் இணையம்

பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளை கொடுக்க பல இணையதளங்கள் இருந்தாலும் இத்தளத்தில் ஒரு புதுமை இருக்கிறதுஅது என்னவென்றால் நண்பருக்கு சொல்லும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி எப்படி இருக்க வேண்டும், அலுவகத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பும் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி எப்படி இருக்க வேண்டும், மனைவி அல்லது நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாழ்த்துச்செய்தி எப்படி அனுப்ப வேண்டும் என்று துல்லியமாக பட்டியலிடுகிறது.
வருடா வருடம் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியை தான் அனுப்புகிறோம் அதுவும் எல்லோருக்கும் ஒரே மாதிரி தான், பல தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியை என்று சென்று விளம்பரங்களை தான் பார்க்க முடிகிறது என்று சொல்லும் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச்செய்திகளை அள்ளி கொடுக்க ஒரு தளம் உள்ளது.

உபயோகம் உள்ள சில மின் புத்தகங்கள்

10:11 PM
கணிபொறி, பகுதி நேர வேலை பற்றி, நம் தளத்தை மேம்படுத்த,....... இதுபோல இங்கு சில மின் புத்தகங்கள் உள்ளன.

உங்களுக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.


உங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும் தேவை இல்லை )

FlashVortex இந்த இணையதளம் இதற்கு உதவுகிறது.இதற்கு இந்த இணையதளத்தில்
Site URL

* நீங்கள் உறுபினர்கள் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

* எந்த மென்பொருளையும் Install செய்ய தேவை இல்லை.

* உங்களுக்கு Flashல் Design பண்ண தெரிந்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.


இதில் Ready Made Menus,Banners,Texts,Buttons உள்ளன நமக்கு தேவையான மாற்றத்தினை செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


இந்த வலைபூவிற்கு சென்றவுடன் Banners என்பதை Click செய்யுங்கள்.
உங்களுக்கு தேவையான Design தேர்வு செய்த பின்பு Click Here To Edit This என்பதை Click செய்யுங்கள்.

கணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது


நாம் எந்த ஒரு வன்பொருள் ( Hardware ) சாதனங்களை வாங்கினாலும் கூடவே அதற்கூறிய Driver Cd அல்லது Dvd தருவார்கள்.
சில சமயங்களில் நம் Driver Cd (or) Dvd அடிபட்டு விடும் அல்லது தொலைந்து போகக்கூடிய வாய்பு நிறைய உள்ளது.அந்த சமயங்களில் நாம் நமக்கு தேவைப்படும் Driver Cd (or) Dvd-யை எங்கு சென்று வாங்குவது?யாரிடம் கேட்பது?

பிரவுசருக்குள் மற்றொரு பிரவுசர்
ஒரு பிரவுசரில் இன்டர்நெட் வெப்சைட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த தளத்தை வேறு ஒரு பிரவுசரில் பார்த்தால் இன்னும் சிறப்பாக நன்றாக இருக்குமோ என்று எண்ணுகிறீர்கள். உடனே என்ன செய்வீர்கள்? அந்த பிரவுசரை விட்டு விலகி, அடுத்த பிரவுசரை இயக்கி, குறிப்பிட்ட தளத்தின் முகவரியினை அமைத்து இயக்கிப் பார்ப்பீர்கள். இதற்குப் பதிலாக அதே பிரவுசரில் ஒரு ஐகானை அழுத்துவதன் மூலம் மற்ற பிரவுசர்கள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த வசதி பயர்பாக்ஸ் பிரவுசரில் உள்ளது. ஆம். பயர்பாக்ஸ் பிரவுசர் சார்ந்த ஆட் ஆன் தொகுப்புகளில், பயர்பாக்ஸ் பிரவுசரில் இருக்கையில் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா மற்றும் சபாரி பிரவுசர்களை இயக்க வழி தரும் ஆட் ஆன் தொகுப்புகள் உள்ளன.

ஆன்லைன் பல்கலைக்கழகங்கள்
நீங்கள் கல்லூரி அல்லது பள்ளியில் படிக்கிறீர்களா? அல்லது திறந்த வெளி பல்கலைக் கழகம், அஞ்சல் வழியில் ஏதேனும் பட்ட வகுப்பில் சேர்ந்து பயில்கிறீர்களா? வீட்டிற்கு வந்த பின்னும், ஆசிரியர் ஒருவரின் வகுப்பறைப் பாடம் போல கேட்டு உங்கள் பாட அறிவை வளர்த்துக் கொள்ள ஆசையா? அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம் Academic Earth.

இந்த தளத்தில் பல பிரபலமான வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் ஆன் லைன் பாடத்திட்டங்களுக்கான வகுப்பறை ஆசிரியர் விளக்க உரைகள் தரப்பட்டுள்ளன. அனைத்து பாடங்களுக்கு மான வீடியோ உரைகள் உள்ளன. அப்படியே வகுப்பில் தரப்படும் காட்சியையும், வீடியோ பாடங்களையும் கண்டு, குறிப்பெடுக்கலாம். பாடங்கள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நமக்குத் தேவையான பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், பின் அந்த பாடப் பிரிவின் கீழ் உள்ள துணைப் பாடப் பிரிவுகள் தரப்படுகின்றன. இங்கும் நமக்கு தேவைப்படும் பாடத்தைத் தேர்ந்தெடுத்தால், அதில் உள்ள அனைத்து வீடியோக்களும், பாடக் குறிப்புடன் காட்டப்படுகின்றன. இந்த பல்கலைக் கழகங்கள் இவ்வாறு ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவது நமக்கும் பயனளிக்கிறது. இதன் பாடப்பிரிவுகள் எதனையும் விட்டு வைக்கவில்லை.

அவை: Architecture, Astronomy, Biology, Chemistry, Computer Science, Economics, Engineering,Environmental Studies, History, International Relations, Law, Literature, Mathematics, MediaStudies, Medicine, Philosophy, Physics, Psychology, ,மற்றும் Religious Studies! 

இந்த வகுப்பறைகளில் உள்ள வெளிச்சத்தைக் குறைத்து வைத்து, ஆசிரியரின் கருத்துரை மீது நம் முழுக்கவனத்தையும் செலுத்தி கேட்கவும் வசதி தரப்பட்டுள்ளது.

ஆசிரியரின் விரிவுரையைக் கேட்டபின் அவருக்கு மார்க் போடும் வாய்ப்பும் தரப்பட்டுள்ளது. வீடியோ காட்சியின் மேலாகத் தரப்பட்டுள்ளA முதல் F வரையிலான ஸ்கேலைப் பயன்படுத்தி, இதற்கான மதிப்பெண்ணை வழங்கலாம்.

கற்றுக் கொள்ளவும், தகவல்களையும் தெரிந்து கொள்ளவும் விரும்புபவர்களுக்கு இது ஒரு அருமையான தளம். ஒருமுறை சென்ற பின் தினந்தோறும் பல மணி நேரம் இதில் செலவிடுவீர்கள் என்பதுவும் உறுதி.


இந்த தளம் http://www.academicearth.org/ என்ற முகவரியில் இயங்குகிறது.

கணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா?
Start Button கணினியில் ஒரே இடத்தில் இருப்பதை தான் நாம் பார்த்து இருப்போம்.அந்த Start Button வேறு இடத்திற்க்கு மாற்ற முடியுமா? வேரு இடத்திற்க்கு மாற்றினால் நன்றாக இருக்கும் அல்லவ. ஆம் இந்த மென்பொருள் Start Buttonனை வேறு இடத்திற்க்கு ஓட வைக்கிறது. ஓடிகொண்டே இருக்கும் உங்களுக்கு தேவையான இடத்தில் வைத்து இதை நிறுத்திகொள்ளலாம்.

இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிருவி கொள்ளுங்கள். பின்பு Speed & Stepes என்று இருக்கும் பட்டனை நமக்கு தேவையான அளவு வைத்து Start என்பதை அழுத்தினால் நகர ஆரம்பிக்கும். Stop என்பதை அழுத்தினால் நகர்வது நின்று விடும்.


ஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுடனும் அரட்டை அடிக்கபிரபல தளங்களின் உதவியுடன் நாம் நமது நண்பர்களுடன் அரட்டை அடித்து மகிழ்கிறோம்.இந்த சேவையை பல தளங்கள் வழங்கினாலும் ஜிமெயில், பேஸ்புக் மற்றும் யாகூ இவை மூன்றும் தான் மிகப்பிரபலமான தளங்கள்.
இந்த தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடித்து மகிழ்ந்தாலும் இந்த மூன்று தளத்திலும் ஒரே நேரத்தில் Chatting செய்ய முடியவில்லை என்பது வருத்தமே.
ஏனென்றால் ஒவ்வொரு தளத்திற்கும் நன் நண்பர்களின் வட்டம் மாறும் ஜிமெயிலில் யாருடனாவது பேசி கொண்டிருந்தால் பேஸ்புக் நண்பர்களிடம் Chatting செய்ய முடியாது.
பேஸ்புக்கில் Chatting செய்து கொண்டிருந்தால் ஜிமெயில், யாஹூ நண்பர்களிடம் அரட்டை அடிக்க முடியாது. இந்த பிரச்சினை இனி இல்லை ஜிமெயில், பேஸ்புக், யாஹூ என மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் Chatting செய்து கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு சென்று புதியதாக உறுப்பினர் ஆகி கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை ஏற்கனவே நமக்கு உள்ள பேஸ்புக் ஐடி மூலம் உறுப்பினர் ஆகி கொள்ளும் வசதி உள்ளது.
ஏதாவது ஒரு முறையில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். உறுப்பினர் ஆகிய உடன் உங்கள் விண்டோவில் வலது பக்கத்தின் கீழே ஒரு மெனுபார் போன்று இருக்கும்.
Chat with என்ற பகுதியில் Gmail, Yahoo, Facebook மற்றும் ibibo போன்ற ஐகான்கள் இருக்கும். அதில் அதில் ஒவ்வொன்றிலும் கிளிக் செய்து உங்கள் கணக்குகளில் நுழைந்தால் ஓன்லைனில் உள்ள நண்பர்களின் பட்டியல் உங்களுக்கு காட்டப்படும்.
அந்த நண்பர்களுக்கு நேராக அவர்கள் எந்த தளத்தில் ஓன்லைனில் உள்ளார்கள் என கண்டறிய ஏதுவாக அவர்களின் பெயருக்கு நேரே அதற்க்கான லோகோக்களும் காண்பிக்கப்படும். இதில் உங்களுக்கு தேவையான நண்பரின் மீது கிளிக் செய்தால் Chat window திறக்கும். அதில் அவருடன் நீங்கள் அரட்டை அடித்து கொள்ளலாம்.
மேலும் ஓன்லைனில் இருப்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்கவும் இதில் வசதியை கொடுத்து இருக்கின்றனர். இதில் உள்ள Go offline என்பதை கிளிக் செய்தால் நீங்கள் ஓன்லைனில் இருப்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்து கொள்ளலாம்.
அவ்வளவு தான் ஒவ்வொரு தளத்திற்கும் சென்று நேரத்தை வீணடிக்காமல் ஒரே இடத்தில் அனைத்து நண்பர்களுடனும் பேசி மகிழலாம்.
இணையதள முகவரி

PenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க Buzz It


இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அனைத்து பயனாளர்களும் தனக்கென்று PenDrive வைத்திருக்கிறார்கள். உங்களது பென் ட்ரைவில் உங்கள் அலுவல் சம்பந்தமான கோப்புகள், கோப்புறைகள் மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் வைத்திருப்பீர்கள். 


ஒரு சில சமயங்களில் உங்கள் பென் ட்ரைவை மற்றவர்கள் அவசரமாக பயன்படுத்த கொடுக்கலாம். அல்லது உங்கள் மேலதிகாரி முன்னிலையில் உங்கள் பென் ட்ரைவை கணினியில் திறக்க வேண்டிய சூழல் உருவாகி, அப்படி திறக்கையில் அதில், அவர் பார்க்ககூடாத புகைப்படங்களை அவர் பார்த்துவிடும் சூழ்நிலையும் வரலாம்.

இது போன்ற தர்மசங்கடமான சூழ்நிலையை தவிர்க்க ஒரு  இலவச மென்பொருள் கருவி WinMend Folder Hidden எனும் சிறிய சக்திவாய்ந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 

இந்த மென்பொருள் கருவியை பயன்படுத்தி உங்கள் பென் ட்ரைவில் Hide  செய்த கோப்புகளை, பிற கணினிகளிலும், குறிப்பாக விண்டோஸ் தவிர வேறு இயங்கு தளங்களிலும் கூட திறக்க இயலாது என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். மேலும் பென் ட்ரைவ் மட்டுமின்றி உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புறைகளையும் இதை பயன்படுத்தி கடவு சொல் கொடுத்து மறைத்து வைக்க இயலும்.


இந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி, முதல் முறையாக அதனை இயக்கும் பொழுது, உங்களுக்கான கடவு சொல்லை (கடவு சொல்லை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்) கொடுங்கள்.
அடுத்து திறக்கும் WinMend Folder Hidden பயன்பாட்டுத் திரையில்,Hide Folder அல்லது Hide File(s) பொத்தானை க்ளிக் செய்து, மறைக்க வேண்டிய கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உங்கள் பென் ட்ரைவிலிருந்து அல்லது உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.


அவ்வளவுதான் இந்த விண்டோவை மூடிவிடலாம். இனி நீங்கள் மறைத்து வைத்த கோப்புகளை உங்கள் கணினி மட்டுமின்றி வேறு எந்த கணினியிலும் பார்க்க இயலாது. மறுபடியும், Unhide செய்ய இதே மென்பொருளை இயக்கி சரியான கடவுசொல்லை கொடுத்து,தேவையான கோப்புறைகள்/கோப்புகளை Unhide செய்து கொள்ளலாம்.Windows 1 லிருந்து Windows 7 வரை