Home » » சிகிளீனர் புதிய தொகுப்பு




கம்ப்யூட்டர் இயக்கத்தின் போது உருவாக்கப்படுகின்ற தற்காலிக பைல்கள், ரெஜிஸ்ட்ரியில் ஏற்படுத்தப் படும் வரிகள், நீக்கப்படும் பைல்கள், இணைய உலாவின் போது பிரவுசர்கள் தங்கள் வசதிக்கென உருவாக்கும் குக்கீஸ், பிரவுசிங் ஹிஸ்டரி பைல்கள் ஆகியவற்றை நீக்கப் பலரும் பயன்படுத்துவது சிகிளீனர் புரோகிராம் ஆகும். இதனை Priform நிறுவனம் தயாரித்து இலவசமாக இணையத்தில் வழங்கி வருகிறது. ....

பிரவுசர்களுக்கிடையேயான போட்டியில், பல பிரவுசர்கள் அடிக்கடி புதுப்பிக்கப்படுகின்றன. எனவே, அதன் பைல்களை நீக்கும் பணியில் ஈடுபடும் சிகிளீனர் புரோகிராமும் அவ்வப்போது அப்டேட் செய்யப்படுவது கட்டாய மாகிறது. அந்த வகையில் Priform நிறுவனம் தன் சிகிளீனர் புரோகிராமை அப்டேட் செய்து, புதிய வசதிகளுடன், சிகிளீனர் பதிப்பு 3.09 ஐக் கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய புரோகிராம், பயர்பாக்ஸ் பிரவுசர் 6க்கான சோதனைப் பதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களுக் கேற்ப அமைக்கப்பட்டுள்ளது. இதே முறையில் ரியல் பிளேயர், குரோம், இமேஜ் வியூவர், நோட்பேட், ஸ்டார்ட் அப் புரோகிராம்களை விருப்பப்படி தேர்ந்தெடுத்தல், மெமரி நிர்வாகம் போன்ற பல பிரிவுகளில், அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
சிகிளீனரை வழக்கமாகப் பயன்படுத்தி வருபவர்கள் மட்டுமின்றி, புதியதாகப் பயன்படுத்த எண்ணுபவர்களும் இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
செல்ல வேண்டிய முகவரி: www.piriform.com/ccleaner