Home » » கைத்தொலைபேசிக்கான இணையதளத்தை வடிவமைப்பதற்கு


   
 



கைத்தொலைபேசியில் பார்ப்பதற்கு தகுந்தபடி அழகான மொபைல் வலைதளம் ஓன்லைன் மூலம் எந்த மென்பொருள் துணையுமின்றி இலவசமாக உருவாக்கலாம்.கைத்தொலைபேசிகள் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் என்று ஆகிவிட்டது. மின்னஞ்சல் படிப்பதில் தொடங்கி இணையதளம் பார்ப்பது வரை அத்தனையும் நாம் கைத்தொலைபேசி மூலமே செய்யலாம்.

இப்படி இருக்கும் போது நம் இணையதளமும் கைத்தொலைபேசியில் பார்ப்பதற்கு அழகாகத் தெரியும்படி உருவாக்கினால் எப்படி இருக்கும். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Go mobile என்ற பொத்தானை சொடுக்கி நாம் புதிதாக ஒரு இலவச கணக்கு உருவாக்கி கொண்டு இணையதளம் உருவாக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட Template(ஏற்கனவே வடிவமைப்பு செய்யப்பட்டவை) பல இருக்கிறது.
இதிலிருந்து நமக்கு வேண்டிய டிசைனை தேர்ந்தெடுத்து எளிதாக சில சொடுக்குகளின் மூலம் மாற்ற வேண்டியதை மாற்றி புதிதாக ஒரு மொபைல் இணையதளம் உருவாக்கலாம்.
எல்லாம் உருவாக்கிய பின் அவர்களே ஒரு இணையதள முகவரியும் கொடுக்கின்றனர். நாம் நம் தளத்தில் கைத்தொலைபேசி வாசகர்கள் இங்கே சொடுக்க என்று ஒரு இணைப்பு வைத்து அந்த முகவரியை கொடுக்கலாம், கைத்தொலைபேசியிலும் நம் தளம் நாம் வடிவமைத்தபடி அழகாக தெரியும்.
இணையதள முகவரி