விண்டோஸ் இமேஜ் கோப்பு போர்மட்டில் குறிப்பிடத்தக்கது ஐஎஸ்ஒ போர்மட் ஆகும்.இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் மற்றும் ஒரு சில மென்பொருள்களை ஐஎஸ்ஒ போர்மட்டில் மட்டுமே இருக்கும். இவ்வாறு உள்ள ஐஎஸ்ஒ கோப்புகளை பூட்டபிள் கோப்பாக மாற்ற வேண்டுமெனில் ஏதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே மாற்ற முடியும். இவ்வாறு மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் சாதாரண கோப்புகளை ஐஎஸ்ஒ பைலாக மாற்றம் செய்வதற்கு இணையத்தில் இருக்கும் மென்பொருள்கள் குறைவு, ஆனால் இந்த இரண்டு பயன்பாடுகளையும் செய்வதற்கு ஒரே மென்பொருள் உதவி செய்கிறது. மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்து கொண்டு இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் ஆகும் விண்டோவில் DVD to ISO மற்றும் ISO to DVD இரண்டில் விருப்பமான தேர்வினை தேர்வு செய்யவும். தேர்வு செய்து கொண்டு, பின் குறிப்பிட்ட கோப்பை தேர்வு செய்யவும். அடுத்து Run என்னும் பொத்தானை அழுத்தவும். குறிப்பிட்ட சில மணி நேரங்களில் கோப்பானது மாற்றம் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் சீடி, டிவீடி மற்றும் புளுரேடிஸ்க் போன்றவற்றை ஆதரிக்க கூடியது ஆகும். இந்த இயங்குதளத்தை விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, ஏழு ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். ஐஎஸ்ஒ கோப்புகளை உருவாக்க இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும். தரவிறக்க சுட்டி |
Home
»
»
ஐஎஸ்ஒ கோப்புகளை உருவாக்குவதற்கு
ஐஎஸ்ஒ கோப்புகளை உருவாக்குவதற்கு
Tweet |