கணவன்மார்களுடன் விளையாடுவதை விட ?
தங்கள் கணவன்மார்களுடன் நேரம் செலவிடுவதை விட கணணியில் விளையாடுவதே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த டொரிடோஸ் என்னும் நிறுவனம் கணணி விளையாட்டுக்கள் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது.
அந்த ஆய்வில் தெரியவந்துள்ள விபரங்கள் வருமாறு: ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக கணணியில் விளையாட விரும்புகின்றனர். கணணி விளையாட்டில் தான் அதிக திருப்தி கிடைப்பதாக பெண்களில் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆண்கள் 22.3 சதவிகிதம் நேரத்தையும், பெண்கள் 23.2 சதவிகிதம் நேரத்தையும் விளையாட்டில் செலவிடுகின்றனர்.
கணவன்மார்களுடன் நேரத்தை செலவிடுவதை விட படுக்கை அறையிலேயே விடிய விடிய கணணி விளையாட்டில் மூழ்கும் பெண்களின் சதவிகிதமும் கணிசமாக உள்ளன.
அதே போல கணணி விளையாட்டுக்கு அடிமையான பெண்களிடம் ஷாப்பிங் செய்வது குறைந்துள்ளது. இவர்கள் நண்பர்கள், கணவர்கள் உறவினர்களிடம் இருந்து தனிமைப்பட்டு வருகின்றனர்.
இதுபற்றி மனித உறவுகள் நிபுணர் டக்ளஸ் வீஸ் கூறுகையில்,"கணணி விளையாட்டில் மூழ்கிப்போகும் நபர்கள் தங்களது வாழ்க்கை துணை, நண்பர்கள், உறவுகள் போன்றவற்றை இழக்க நேரிடும். அவர்கள் தனிமையில் தள்ளப்பட்டு ஒருவிதமன நோய்க்கு ஆளாகும் ஆபத்தும் உள்ளது" என்று எச்சரித்துள்ளனர்.
Home
»
»