பாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை மறைத்துக் கொண்டு செயலாற்றுவதில் கில்லாடி களாகும். இவை பரவிக் கைப்பற்றியுள்ள, பெரும்பாலான கம்ப்யூட்டர்கள், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்கள் எனக் கண்டறியப் பட்டுள்ளது. எக்ஸ்பி பயன்படுத்தப்படும் நான்கு கம்ப்யூட்டர் களில் நிச்சயம் ஒன்றில் ரூட்கிட் வைரஸ் இருப்பதாகத் தெரிகிறது. ரூட்கிட் பாதித்த கம்ப்யூட்டரை, அதனை அனுப்பியவர், வெகு அழகாக, நேர்த்தியாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு விடுகிறார். பல தனிப்பட்ட விஷயங்களை தன் கைகளுக்குள் கொண்டு வந்து, அனைத்து மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறார். இந்த ரூட்கிட் புரோகிராம்கள் நவீன தொழில் நுட்ப உதவியுடன் நேர்த்தியாக மறைக்கப்பட்டு பரவுகின்றன. இவற்றைத் தேக்கிவைப்பதிலும், பரப்புவதிலும் விண்டோஸ் எக்ஸ்பி இயங்கும் கம்ப்யூட்டர்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இன்றைக்குப் பயன்பாட்டில் உள்ள கம்ப்யூட்டர்களில் 58% கம்ப்யூட்டர்களில் எக்ஸ்பி இயக்கப் படுகிறது. ரூட்கிட் பாதித்த கம்ப்யூட்டர்களில் 74%, எக்ஸ்பி சிஸ்டம் உள்ளவை என அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 31% கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 இருந்தும், வைரஸ்களைப் பரப்புவதில், இவற்றின் பங்கு 12% மட்டுமே.
இதற்கான காரணமும் கண்டறியப் பட்டுள்ளது. விண்டோஸ் எக்ஸ்பிக்கென வெளியிடப்பட்ட சர்வீஸ் பேக் 3 ஐப் பலர் இன்னும் தங்கள் கம்ப்யூட்டர்களில் நிறுவவில்லை. இதனை நிறுவிய கம்ப்யூட்டர்கள் மட்டுமே, முழுமையான பாதுகாப்பினைக் கொண்டுள்ளன. மேலும், இவற்றிற்கு மட்டுமே சப்போர்ட் தருவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. எனவே தான் ரூட் கிட் தன் தந்திரமான போர்வை மூலமும், எக்ஸ்பியில் உள்ள பாதுகாப்பற்ற அம்சங்கள் வழியிலும் தன் தளமாக எக்ஸ்பி உள்ள கம்ப்யூட்டர்களைக் கொண்டுள்ளது.
எனவே, எக்ஸ்பி சிஸ்டம் இயக்குபவர்கள் அனைவரும் சர்வீஸ் பேக் 3 ஐ உடனடியாகத் தங்கள் கம்ப்யூட்டரில் நிறுவ வேண்டும். இயலும் என்றால், விண்டோஸ் 7 சிஸ்டத்தினைத் தங்கள் கம்ப்யூட்டரில் அமைக்க வேண்டும். விண்டோஸ் 7 சிஸ்டத்தின் 64 பிட் பதிப்பு, ரூட்கிட் புரோகிராமினை அண்டவிடாமல் வைத்திடும் நவீன தொழில் நுட்பத்தினைக் கொண்டுள்ளது.
ரூட்கிட்கள், எம்.பி.ஆர். என அழைக்கப் படும் மாஸ்டர் பூட் ரெகார்டினைக் கெடுக்கும் வகையில் இயங்குபவையாகும். இது கெடுக்கப்பட்டால், மீண்டும் அதனைச் சரிப்படுத்தி, ரூட்கிட்டை அழிப்பது மிகவும் கடினம். எனவே தான், பல நாடுகளில் எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்து பவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பி பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், தங்கள் கம்ப்யூட்டரில் ரூட்கிட் இருப்பதாகச் சந்தேகப்பட்டால், இவற்றைக் கண்டறிந்து அழிக்க இணையத்தில் கிடைக்கும் புரோகிராம்களைப் பயன் படுத்தலாம். அவற்றில் சிறந்தவையாக அவாஸ்ட் நிறுவனம் வழங்கும் “aswMBR” என்பதைக் கூறலாம். இதனை http://public.avast.com/~gmerek/aswMBR.htm என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். சோபோஸ் நிறுவனம் வழங்கும் ஆண்ட்டி ரூட்கிட் புரோகிராமும் மிகச் சிறப்பாகச் செயல்புரிகிறது. இதுவும் இலவசமே. இதனைப் பெற http://www.sophos.com/enus/products/freetools/sophosantirootkit.aspx என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.