![]() நமக்கு உதவுவதற்காக உள்ள குரோம் உலாவியில் ஒரு நீட்சி உள்ளது. கூகுள் குரோம் உலாவியில் இருந்து கொண்டு கீழ் இருக்கும் முகவரியை சொடுக்கி வரும் திரையில் Install என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக நிறுவலாம். நிறுவி முடித்ததும் குரோம் உலாவியின் டூல் பாரில் புதிதாக ஒரு ஐகான் தோன்றும். அதை சொடுக்கி Launch cooliris என்று மற்றும் ஒரு இணையப்பக்கம் திறக்கும். அங்கு நடுப்பக்கத்தில் இருக்கும் கூகுள் தேடல் கட்டத்திற்குள் நாம் தேடவிருக்கும் படங்களின் பெயர்களை கொடுத்து Enter பொத்தானை சொடுக்கவும். ஒரு சில நிமிடங்களில் நாம் தேடிய வார்த்தையில் இருக்கும் அத்தனை படங்களும் 3D-ல் வந்து நமக்கு மகிழ்ச்சி அளிக்கும். கூடவே அந்தப்படங்களை சொடுக்கி அங்கிருந்தே பெரிதாக பார்க்கலாம். படங்கள் அல்லாத வெளியே சொடுக்கி எளிதாக அடுத்தப் படத்தை பார்க்கலாம். மவுஸில் இருக்கும் Scroll bar பயன்படுத்தி Zoom in, Zoom out செய்தும் பார்க்கலாம். தொழில்நுட்ப புதுமை விரும்பிகளுக்கும், கூகுளில் படங்களைத் தேடி ஒவ்வொரு பக்கமாக செல்லும் நபர்களுக்கும் பெருமளவு நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த நீட்சி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இணையதள முகவரி |
Home
»
»
3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்கு
3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்கு
Tweet |