பொதுவாக நாம் ஸ்கிறீன்சொட் எடுக்க Ms Paint, picasa போன்ற மென்பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் சில அடிப்படை வசதிகளை மட்டுமே செய்ய முடியும்.ஆகவே இதற்காவே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே அனைத்து வசதிகளையும் நாம் பெற முடியும். இதற்கு நிறைய மென்பொருட்கள் இருந்தாலும் PicPick என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் பல வசதிகள் உண்டு. 1. நினைத்த பகுதியை ஸ்கிறீன்சொட் எடுக்கும் வசதி. 2. நீங்கள் எடுக்கும் ஸ்கிறீன்சொட்டை நேரடியாக Ms office மென்பொருட்களில் கொண்டு வரும் சூப்பர் வசதி. 3. எடுக்கும் ஸ்கிறீன்சொட்களை நேரடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்து அதன் வெப் URL காணும் வசதி. 4. ஸ்கிறீன்சொட்டை நேரடியாக சமூக தளங்களான ட்விட்டர், பேஸ்புக் தளத்திற்கு தரவேற்றும் வசதி. 5. பக்கங்களை zoom செய்யும் வசதி. 6. இணையத்தில் நீங்கள் நினைக்கும் நிறத்தை பயன்படுத்தி கொள்ளும் Color Picker வசதி. 7. நீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் திரையிலேயே அப்படியே எழுதும் Whiteboard வசதி. இன்னும் ஏராளமான வசதிகள் உள்ளன. இந்த வசதிகளை பெறுவதற்கு முதலில் கீழே உள்ள தரவிறக்க சுட்டியை அழுத்தி மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவியதும் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கணணியின் டாஸ்க்பாரில் அதற்கான ஐகான் வந்திருக்கும். இப்பொழுது நீங்கள் ஸ்கிறீன்சொட் எடுக்கவேண்டிய பக்கத்தை திறந்து கொள்ளுங்கள். திறந்து கொண்டு உங்கள் கணணியில் டாஸ்க் பாரில் உள்ள picpick ஐகானை க்ளிக் செய்து அதில் Screen Capture சென்று அடுத்து உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து கொள்ளுங்கள். இல்லையேல் நம் கீபோர்டில் உள்ள Print Screen பட்டனை அழுத்தினால் அந்த பக்கம் முழுவதும் ஸ்கிறீன்சொட் எடுக்கலாம். இது போல் கொடுத்தவுடன் அடுத்து உங்களுடைய ஸ்கிறீன்சொட் நேராக இந்த மென்பொருளில் வந்திருக்கும். இதில் உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து பின்னர் மேலே உள்ள Save என்ற பட்டனை அழுத்தி ஸ்கிறீன்சொட்டை சேமித்து கொள்ளுங்கள். தரவிறக்க சுட்டி |
Home
»
»
கணணியின் திரையை அழகாக ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு
கணணியின் திரையை அழகாக ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு
Tweet |