Home » » மைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்




உங்களுக்கென்று ஒரு நிறுவனம் இயங்கி, அதற்கான இணைய தளம் ஒன்றை உருவாக்க எண்ணினால், நீங்கள் அவசியம் மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் தொகுப்பினைப் பயன்படுத்த வேண்டும். இந்த தொகுப்பின் மூலம் தொழில் ரீதியான ஓர் இணைய தளம், தளப் பெயர், இமெயில் வசதி மற்றும் அதனைத் தாங்கி இயக்கும் வசதி என அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் பெறலாம். இவை அனைத்துமே இலவசம் என்பது இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று.  இதனைப் பெற நீங்கள் முதலில் அணுக வேண்டிய தள முகவரி http://officelive.com/enus/. தளத்தில் நுழைந்தவுடன் அங்குள்ள “Create a Free Website” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். உடன் இதில் பதிவு (Sign In) செய்திட செய்தி கிடைக்கும். அனைத்தும் பதிவு செய்து உறுதியானவுடன், மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் மெயின் விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு தான் உங்களுக்குத் தேவையான இமெயில் வசதி, தளப் பெயர், தள வடிவமைப்பு ஆகியவற்றைப் பெறலாம். நீங்களே உங்கள் தளத்தினை வடிவமைக்கலாம். அதற்கான டூல்கள் இங்கு தரப்பட்டுள்ளன. இங்கு சென்று இந்த டூல்களைப் பற்றித் தெரிந்த பின்பே, இணையதளம் ஒன்றினை வடிவமைப்பது எவ்வளவு எளிது என்று அறிந்து கொள்ளலாம்.
“Design Site” லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இரண்டு விண்டோக்கள் திறக்கப்படும். ஒரு விண்டோவில் வெப்சைட் மேனேஜர் பக்கம் கிடைக்கிறது. இன்னொன்றில் வெப் டிசைன் டூல்கள் தரப்படுகின்றன. இதற்குக் கீழாக ஹோம் பேஜ் ஒன்று தரப்பட்டு நீங்கள் எடிட் செய்வதற்கு ரெடியாக இருக்கும். அதிலேயே உங்கள் தளத்திற்கான “About Us” மற்றும் “Contact Us” தயாராக இருப்பதனைக் காணலாம். இதன் பின்னர், அதில் தரப்பட்டுள்ள எளிதான யூசர் இன்டர்பேஸ் மூலம் தளத்தினை வடிவமைக்கலாம். ஏற்கனவே மைக்ரோசாப்ட் தரும் ஷேர் பாய்ண்ட் பயன்படுத்தியவர்களுக்கு இது இன்னும் எளிதாகத் தோன்றும்.
தளத்தின் ஹெடர் டெக்ஸ்ட்டை விரும்பியபடி மாற்றலாம். அதற்கான பாப் அப் விண்டோக்கள் அடுத்தடுத்து கிடைக்கின்றன. டெக்ஸ்ட்டை நமக்கேற்ற வகையில் பார்மட் செய்திடலாம். இதில் நம் இலச்சினையைச் சேர்த்து அமைக்கலாம். எளிதான டூல்களும், வழி நடத்தும் குறிப்புகளும் இணைந்து நம் இணைய பக்கத்தினை எளிதாக உருவாக்க உதவுகின்றன. மேலும் இது இலவசம் என்பது கூடுதல் சிறப்பாகும். எதற்கும் ஒருமுறை சென்று பார்த்து பயன்படுத்திப் பாருக்கள்.