இப்போது தான் Adsense இருக்கிறதே.. மீளவும் தொடங்கலாமே என்று எண்ணலாம். ஆனால் அது சாத்தியம் இல்லை. காரணம்,
- தமிழில் தொழிநுட்ப செய்திகளை வாசிப்பதில் ஆர்வம் இல்லை.
- தரமான தொழிநுட்ப செய்திகள் உடனுக்குடன் வழங்க ஆயிரக்கணக்கில் ஆங்கிலத்தில் தளங்கள் உள்ளன.
- Facebook போன்ற சமூக தளங்கள் செய்திகளை பிரித்தது அவற்றின் timeline ல் காட்டுவதால் வாசகர் இணைய பக்கத்துக்கு வர வேண்டியதில்லை.
அப்படியென்றால் இப்போது எப்படியான தளங்களுக்கு மவுசு?
- பலான கதைகள் எழுதும் தளங்கள்.
- போலி செய்திகளை காட்டும் சுடசுட- வகை தளங்கள் (நடிகையின் அதுக்கு நடந்தவலிமிகுந்த சம்பவம் - என்று தலைப்பிட்டு, நாய்க்குட்டிக்கு காலில் கல்லு அடிபட்ட உண்மை சம்பவத்தை சொல்லும் தளங்கள்).
- நடிகைகளின் ஆபாச கவர்ச்சி படங்களை போடும் தளங்கள்.
அப்படியென்றால் கணணிக்கல்லூரியும் அவ்வாறு மாறப்போகிறதா?
இல்லவே இல்லை. நாம் தொடர்ந்து சில வித்தியாசமான தகவல்களை பகிரப்போகிறோம் - தொழிநுட்பத்தில் - சாமானியர்களுக்கு விளங்கும் வகையில் சில)
உண்மையிலேயே தமிழுக்கு ஆதரவு கொடுக்கிறதா இல்லையா Google?
Adsense ஆதரவு கொடுக்கவில்லை- இப்போது தான் புதிது என்பதால் தமிழ் விளம்பரங்கள் இல்லை. எல்லாம் ஆங்கிலம் (English) சார்ந்தவை தான். தமிழ் தளங்களில் விளம்பரங்கள் குறைவு.
எவ்வாறான விளம்பரங்கள்Adsense மூலம் கிடைக்கிறது?
வழக்கமான செவ்வகம் (rectangle), 728 x 90 போல, தன்னியக்கமான வடிவங்கள் (Auto ads) ஒவ்வொரு பதிவின் அடியிலும் வரும் Feed Ads, பதிவின் நடுவில் வரும் In -Article ads, துள்ளி எழும் pop -up vignette ads, நீந்தி எழும்பும் Anchor ads என நீங்கள் அறியாத பல வகை.
இவற்றை எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள், இவை சம்பந்தமாக அடுத்த பதிவில் பார்க்கலாம். இவற்றின் மூலம் ஆக குறைந்தது 10$ தினமும் சம்பாதிக்கலாம் என்பது இன்னுமொரு சுவாரசியம்.