Home » »



கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்குவதற்கு

அனைவரையும் கவரும் வகையில் கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்கவும் அவற்றை AVI வடிவத்தில் சேமித்து கொள்ளவும் ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.இதன் பெயர் WEB CARTOON MAKER ஆகும். இந்த மென்பொருளை பயன்படுத்தி கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்கி கொள்ள முடியும்.
மிக நீண்ட மற்றும் குறுகிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கலாம்.
அத்துடன் வடிவமைக்கபட்ட வீடியோக்களுக்கு ஒலி வடிவம் கொடுக்க முடியும். ஓன்லைனிலும் வடிவமைக்க முடியும்.
இது விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்படக்கூடியது.
தரவிறக்க சுட்டி 


உங்கள் கடவுச்சொல்லின் வலிமையை பரிசோதிப்பதற்கு

இணைய சேவைகளை பெறும் போதோ அல்லது மின்னஞ்சல் கணக்குகளுக்கும் நாம் கடவுச்சொல்லை பயன்படுத்தி வருகிறோம்.இத்தகைய கடவுச்சொற்கள் பாதுகாப்பானதாக அமைதல் வேண்டும். ஏனெனில் உங்கள் கடவுச்சொற்களை பயன்படுத்தி மற்றவர்கள் உங்கள் கணக்குகளை முடக்க முடியும். எனவே உங்கள் கடவுச்சொற்கள் மிக பாதுகாப்பனதாகவும் சிக்கல் மிகுந்ததாகவும் அமைதல் வேண்டும்.
உங்கள் கடவுச்சொற்கள் எண்கள், எழுத்துக்கள் கொண்டு அமைதல் சிறப்பானதாகும். உங்களின் கடவுச்சொல்லின் பாதுகாப்பு தன்மையினை அளவீடு செய்யவும், மேலும் சிறப்பான கடவுச்சொற்களை உருவாக்கி கொள்ளவும் PASSWORD METER என்ற தளம் உதவுகிறது.
இந்த தளத்தில் சென்று உங்கள் கடவுச்சொல்லை கொடுத்தால் உங்கள் கடவுச்சொல்லின் பாதுகாப்பு தன்மையினை வீத அடிப்படையில் உங்களுக்கு வழங்கும்.
அத்துடன் உங்கள் கடவுச்சொல்லில் உள்ள பலம் மற்றும் பலவீனங்களுக்கு புள்ளி வழங்கப்படும். அதனைக் கொண்டு உங்கள் கடவுச்சொல்லை சீர் செய்து பாதுகாப்பு மிக்கதாக மாற்றி கொள்ள முடியும்.
இணையதள முகவரி





கூகுளின் புதிய பயனுள்ள இணையதளம்

இணையத்தில் கூகுள் நிறைய வசதிகளை வாசகர்களுக்கு தருகிறது. பிளாக்கர், யூடியூப், ஜிமெயில், மேப் என கூகுளின் சேவை விரிகிறது.இந்த சேவைகள் அனைத்தையும் கூகுள் வாசகர்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. இந்த வரிசையில் கூகுள் மேலும் ஒரு வசதியை அனைவருக்கும் வழங்கி உள்ளது. அது தான் What do you Love? என்பது.
இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் கூகுளின் அனைத்து தளங்களிலும் தேடும் வசதி. இதனால் நாம் ஒவ்வொரு தளத்திலும் சென்று தனித்தனியாக தேடாமல் ஒரே இடத்தில் அனைத்து தளங்களிலும் தேடி வீணாகும் நம் நேரத்தை மிச்சமாக்கலாம்.
இந்த தளத்திற்கு சென்று நீங்கள் தேட விரும்பும் ஒரு குறிப்பிட்ட வார்த்தை நிரப்பி கீபோர்டில் என்டர் கொடுத்தால் போதும். அனைத்து கூகுள் தளங்களிலும் தேடல் முடிவு வந்திருக்கும்.
அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து சென்றால் அந்த தளத்தில் தேடல் முடிவு ஓபன் ஆகும்.
இப்படி ஒரே நேரத்தில் கூகுளின் Image, Map, youtube, Gmail, Alert இப்படி பல தளங்களிலும் தேடுதல் முடிவை கொடுக்கும். இதில் கூகுளின் பெரும்பாலான தளங்கள் வரும். இன்னும் பல தளங்கள் சேர்க்கப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது.
இணையதள முகவரி