Home » »


டெஸ்க்டொப்பை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்

உங்கள் டெஸ்க்டொப்பின் தோற்றம் அழகாக இருப்பதை நீங்கள் மட்டும் பார்த்து ரசித்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதை உலகோடு பகிர்ந்து கொண்டால் நன்றாகத் தான் இருக்கும்.டெஸ்க்டொப்.லே சேவை இதை தான் செய்கிறது. இந்த சேவையின் மூலம் டெஸ்க்டொப் பிரியர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஸ்கிறீன்சேவர் சித்திரத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
இதில் உறுப்பினராவது மிகவும் சுலபம். உறுப்பினரானவுடன் ஸ்கிறீன்சேவர் தோற்றத்தை பகிர்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் அதனை பார்த்து கருத்து தெரிவிக்கலாம். பிரதானமாக மேக் கணணிகளுக்கான சேவை என்றாலும் மடிக்கணணிகள் டெஸ்க்டொப் என எல்லாவற்றிலிருந்தும் பகிர்ந்து கொள்ளலாம்.
உறுப்பினர்கள் தங்களுக்கான சுருக்கமான அறிமுகத்தையும் உருவாக்கி கொள்ளலாம். ஸ்கிறீன்சேவை தோற்றங்களை பகிர்ந்து கொள்வதோடு புதிய ஸ்கிறீன்சேவர் தோற்றங்களையும் சுலபமாக அறிமுகம் செய்து கொள்ளலாம்.
ஸ்கிறீன்சேவர் சித்திரங்கள் அழகின் அடையாளம் மட்டும் அல்ல. ஒருவிதத்தில் அவை அதனை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட குணாதிசயத்தை பிரதிபலிக்க கூடியவை. எனவே இந்த சேவை மூலம் புதுமையான ஸ்கிறீன்சேவரை மட்டும் அல்ல அவற்றின் பின்னே உள்ள நபர்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம். 
இணையதள முகவரி


பேஸ்புக்கில் உள்ள புகைப்படங்களை பிகாசாவில் பதிவேற்றம் செய்வதற்கு
பேஸ்புக் தளமானது தற்போது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுளை மிஞ்சும் அளவிற்கு இதில் வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர்.பிகாசா தளம் தற்போது கூகுள் நிறுவனத்திடம் உள்ளது. இந்த தளம் மூலம் கூகுள் கணக்குடையவர்கள் இந்த தளத்தில் பதிவேற்றி கொள்ள முடியும்.
கூகுள் கணக்கில் பதிவேற்றும் புகைப்படங்கள் அனைத்தும் பிகாசாவிலேயே பதிவேற்றப்படும். நம்முடைய புகைப்படங்களை பெரும்பாலும் பேஸ்புக் தளத்திலேயே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.
இவ்வாறு முகநூலில் பகிர்ந்து கொண்ட உங்களுடைய புகைப்படங்களை வேண்டுமெனில் பிகாசாவில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். பேஸ்புக் கணக்கில் உள்ள புகைப்படங்களை பிகாசா தளத்தில் பதிவேற்ற குரோம் நீட்சி ஒன்று உதவி செய்கிறது.
சுட்டியில் குறிப்பிட்ட நீட்சியை குரோம் உலவியில் பதிந்து கொள்ளவும். பின் ஒருமுறை குரோம் உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். தற்போது உங்களுடைய பேஸ்புக் கணக்கு மற்றும் கூகுள் கணக்கினை குரோம் உலவியில் திறந்து வைத்துக் கொள்ளவும். தற்போது Move2Picasa என்னும் ஐகானை அழுத்தவும்.
தற்போது தோன்றும் விண்டோவில் உங்களுடைய பேஸ்புக் கணக்கில் உள்ள புகைப்படங்கள் வரிசைப்படுத்தப்படும். வேண்டிய புகைப்படத்தினை தேர்வு செய்துவிட்டு பின் Upload என்னும் பொத்தானை அழுத்தவும்.
இணைய வேகத்தை பொறுத்து உங்களுடைய புகைப்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பதிவேற்றப்படும். பின் சில மணி நேரங்களில் உங்களுடைய புகைப்படங்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டுவிடும். தற்போது உங்களுடைய பிகாசா கணக்கில் பேஸ்புக் கணக்கில் நீங்கள் குறிப்பிட்ட புகைப்படங்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டுவிடும்.
தரவிறக்க சுட்டி