
இலங்கை உடன் கடந்த செவ்வாய்க்கிழமை, கூகிள் Loon திட்டம் அரிமுகம் ஆகி உள்ளது. உலகத்தில் Google Loon மூலம் முழுவதுமாக இணையும் நாடு என்ற பெருமையை இலங்கை பெறுகிறது.
தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், மங்கள சமர வீர இதை பற்றி குறிப்பிடும் போது, ஹீலியம் நிறைக்கப்பட்ட பலூன்கள் மூலம் உயர் வேக இணைய சேவைக்கு இன்று கூகிள் உடன் ஒப்பத்தம் உத்தியோக பூர்வமாக கைச்சாத்து ஆகியுள்ளது என கூறினார்.
Google Project Loon in 2013 ல் அறிமுகம் ஆகியது. பின்தங்கிய கிராமங்களில் அதி வேக இணைய இணைப்பை பெற்று கொடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கையின் தலையில் உள்ள பருத்தித்துறை முதல் தேவேந்திர முனை வரை இந்த சேவை இன்னும் சில மாதங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்படுள்ளது. இலங்கையில் உள்ள 6, ISP களும் இதில இணைந்து சேவையை வழங்கலாம். அனைத்து பலூன்களும் அடுத்த வருட பங்குனி மாதத்துக்கு இடையில் வானில் ஏவப்படும் என கூகுள் அறிவித்துள்ளது!!
ஆனால் தற்போது நாட்டின் பிரதான நகரங்கள் அனைத்தும் 4G உடன் இணைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகி விட்டது. எவ்வாறாயினும் Data கட்டணங்கள் குறையலாம் என எதிர்வு கூறப்படுகிறது.
வணிக விமானங்களின் பாதையை போல இரு மடங்கு உயரத்தில் பலூன்கள் நிறுத்தப்பட உள்ளதுடன், அவை சாதாரண கண்ணுக்கும் தெரியும். முதன் முதலில் கூகிள் இதை பரீட்சார்த்தமாக 2013 ல் நியூ சிலாந்து நாட்டில் அறிமுகம் செய்தது.
இலங்கையில் 2.8 மில்லியன் மக்கள் இணையத்துடன் இணைந்து உள்ளதுடன், 606000 நிரந்தர இணைப்புகளும் உள்ளது. இலங்கைன் மொத்த சனத்தொகை 20 மில்லியன். 1989ல் முதலாவது கையடக்க தொலைபேசி சேவை இலங்கையில் அறிமுகம் ஆனதுடன், 2004 ல் 3G ம் அறிமுகம் ஆகியது. அத்துடன் 4G ம் 2013 ல் அறிமுகம் ஆகியது.