Home » » Windows Hibernation அறிமுகம்

Windows Hibernation பற்றியும் இதன் பயன்கள் பற்றியும் இதை எப்படி
செயற்படுத்துவது என்பது பற்றியும் இப்பதிவு அலசுகிறது.

Windows Hibernation பற்றி தெரியுமா?

Windows XP பயன்படுத்தி அதன் பின்னர் படிப்படியாக 7, 8 என வந்தவர்கள் அறிந்தும் பயன்படுத்திக்கொண்டும் இருப்பார்கள். மற்றவர்கள்? நேரடியாக w7 இல் ஆரம்பித்தவர்களுக்கு இதை பற்றி தெரியாது.

Windows Hibernation வசதி மக்களுக்கு அறிமுகம் ஆகாததன் பின்னணி?

Windows இல் கூடவே வரும் Sleep வசதி தான் Hibernate வசதியை மறைத்தது.

Sleep mode என்றால் என்ன?

DVD player இல் ஒரு படத்தை Pause செய்துவிட்டு மீள play செய்வது போன்றது. மிக விரைவாக கணணியை இயக்க பயன்படுத்தும் வசதி. இதன் போது கணணி சிறிய மின்சாரத்தை எடுத்த வண்ணம் இருக்கும். இதன் போது மின் தடை வந்தால், அனைத்தும் அழிந்து, மீள இயக்க வேண்டி இருக்கும். நம் நாடுகளை பொருத்தவரை Sleep mode இல் விட்டு செல்வது பாதுகாப்பில்லை. அடிக்கடி மின் தடை வருமே.

Laptop இலும் அதன் திரையை நேரடியாக மூடினால் Sleep mode க்கு தான் செல்லும். ஆனால் அதில் மின் தடை இல்லையே. என்றாலும் Battery இனை கழற்றி போட்டால் எல்லாம் அழிந்து விடும்.

ஹைபர்னேசன் (Hibernation) என்றால் என்ன?

Windows இனை shutdown செய்யாமல், கணணியை உறை நிலைக்கு கொண்டு செல்வது. இதன் போது கணணி முற்றிலும் நிறுத்தப்படும். மின்சாரம் தடைப்பட்டாலும் எந்த தகவல் இழப்பும் ஏட்படுவதில்லை

ஹைபர்னேசனின் நன்மைகள்

ஒவ்வொரு தடவையும் shutdown செய்து மீள இயக்கினால் 3 நிமிடங்கள் வீணாகி விடும்.
Sleep செய்தால் மின் தடை என்றால் / நீண்ட நேரம் (நாட்கள்) என்றால் இது பயனில்லை.
ஹைபர்னேசனில் இவை எதுவும் தடை இல்லை. மிக விரைவாக மீள இயக்கம், நீண்ட காலத்துக்கு நிறுத்தி வைக்கலாம், தகவல் இழப்பில்லை.

ஹைபர்னேசனில் என்ன நடைபெறுகிறது?
நீங்கள் திறந்து வைத்துள்ள ஆவணங்கள், கோப்புரைகளின் நிலைகள் அனைத்தும் hard disk இல் சேமிக்கப்பட்டு கணனிக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்படும்.

Hibernate வசதியை எப்படி Active செய்வது?

Windows XP இன் பின்னர் வந்த எல்லா OS இலும் நீங்கள் தான் இந்த அற்புத வசதியை இயக்க வேண்டும். கீழே உள்ள Demo பாருங்கள்:
மேலும் உதவிக்கு: Sleep and hibernation: frequently asked questions