இப்பதிவில்,
- மனித DNA இல் பரிமாறப்படும் தகவல்களை Bytes இல் சொன்னால்?
என்பது பற்றியும்,
அடுத்த பதிவுகளில்
- மனிதனின் மூளையின் கொள்ளளவை Bytes இல் அளந்தால் எத்தனை GB?
- மனித கண்ணை Digital Camera ஆக கருதினால் அதன் Pixels?
என காணலாம்.
அனைத்து தகவல்களும் இணையத்தில் இருந்து திரட்டப்பட்டதுடன் கணிப்பீடுகள் அனைத்தும் Computing Engine மூலம் நிகழ்த்தப்பட்டது என்பதை கவனத்தில் கொள்க.
மனித DNA
DNA என்றால் Biology இல் வந்திருக்கும். DNA இனை பற்றி விவரிப்பது இங்கு பொருத்தமில்லை. என்றாலும்,
மனித DNA 22 autosomal chromosomes களையும் X / Y என ஆண் / பெண் என்பதற்கான ஒரு chromosome ஐயும் கொண்டு மொத்தம் 23 சோடி நிறமூர்த்தங்களை கொண்டுள்ளது. இது இடது புறமாக சுருண்ட ஏணி வடிவம் உள்ளது. A-T, T-A, G-C, C-G என 4 வகையான அடிப்படை சோடிகளை கொண்டது.
இவ்வாறு 23 Billion சோடிகளை 23 chromosomes கள் கொண்டிருக்கும். எனவே ஒரு மனித DNA 46 Billion அடிப்படை சோடிகளை கொண்டது.
கணனியில் Data Storage Technology உடன் மனித DNA ஒப்பீடு
ஒவ்வொரு அடிப்படை சோடிகளையும் 2 Bits மூலம் குறிப்பிட்டால் 1 Byte என்பது 8 bits. ஆகவே ஒரு Byte மூலம் 4 அடிப்படை சோடிகளை வகை குறிக்கலாம்.
எனவே
(6 Billion அடிப்படை சோடிகள் ) / 4 = 1.5 Billions Bytes = 1.5GBஎனவே ஒரு மனித DNA 1.5 GB அளவை கொண்டது.
மனித உடலில் 1 Trillions கலங்கள் இருப்பதாக கொண்டால்.
1.5 GB x 100 trillion cells = 150 trillion GB = 150 Zettabytes (10^21)இவ்வளவு தகவல்களையும் நாம் சுமந்து செல்கிறோம்.
ஒரு புணரியில் 22 சாதாரண உடல் நிறமூர்த்தங்களும் ஒரு இலிங்க நிற மூர்த்தமும் காணப்படும். மொத்தம் 23 நிரமூர்த்த்ங்கள் 750 MB தகவலை கொண்டு உருவாக்கப்படும்.
மனித விந்து ஒன்றும், முட்டை ஒன்றும் தலா 750 MB தகவல்களை பரிமாறி மனித குழந்தையின் முதல் கலத்தை உருவாகும். இதில் தான் அந்த குழந்தை சிவப்பா? நெட்டையா ? அழகா? அறிவா? என அனைத்து தகவல்களும் உள்ளடங்கி இருக்கும்.
ஆண் பெண் பேதம் XY, XX என கொள்ளப்படுவதால் ஆணின் DNA , பெண்ணினத்தை விட சற்று அதிக தகவல்களை கொண்டது.
ஒவ்வொரு ஆண் விந்தும் 750 MB தகவல்களை காவுவதாக கொண்டால் சராசரியாக 180 million விந்துக்கள் கருப்பையில் ஒரே தடவையில் விடுவிக்க படுவதால்
180 x 10^6 விந்துக்கள் x 750 MB = 135 x10^9 MB=135000 Terabytesஅளவு தகவல்கள் ஒரு தடவையில் பரிமாறப்பட்டு விடுகிறது.
உண்மையில் சில துளியில் 135000 தகவல்கள் அடங்கி இருக்கின்ற போதும் மனிதனால் அப்படி ஒரு Hard disk இனை உருவாக முடியாது. ஏனெனில் DNA ஆனது நைதரசன் உப்பு மூலதொடரால் ஆக்கப்பட்டு வலிமையான ஐதரசன் பிணைப்பால் பற்றி இணைக்கப்பட்டுள்ளதால் ஆகும்.
நன்றி: BitesizeBio.com