1. Google Reader (RSS reader)
சென்ற Julyமாதம் நிறுத்தப்பட்ட இந்த சேவை குறித்துப் பலர் தங்கள் ஆச்சரியத்தைத் தெரிவித்துள்ளனர். இந்த சேவை, சென்ற 2005 ஆம் ஆண்டுமுதல், Google வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்து வந்தது. இதனைப் பயன்படுத்தியவர்கள், பெரிய அளவில் இல்லை என்றாலும், அது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இருப்பினும், இதனை மிக விரும்பிய சிலர், இணையத்தில் இது தொடர வேண்டும் என மனுவெல்லாம் கொடுத்துப் பார்த்தனர். சிலர், கூகுள் நிறுவனம் தன் Google Plus மீது அதீத பாசம் கொண்டு, இதனை சாகடிக்கிறது என்றெல்லாம் வசனம் அமைத்து குழு அமைத்து வசை பாடினார்கள். ஆனால், Google தனக்கெனக் கொண்டிருந்த அளவு கோலின் அடிப்படையில் இந்த சேவையினை நிறுத்தியது. இந்த வசதிக்கு இணையான இன்னொரு வசதியை Google அல்லது வேறு யாரும் தரவில்லை.2. iGoogle
இந்த தனி நபர் Home page தரும் இணைய தளம், 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்த November 1 முதல் நிறுத்தப்பட்டது. இது கைவிடப்படும் செய்தி, 2012 July லேயே அறிவிக்கப்பட்டது. Chrome , Android போன்ற System 'களில் இயங்கும் புதிய வகை applications வந்த பின்னர், iGoogle tool 'இனை காலம் கடந்த பழைய பெருங்காய டப்பா என்று Google ருதியது. எனவே இதனை மூடப் போகிறோம் என்று முன்பாகவே அறிவித்தது. 16 மாதங்களுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தங்கள் டேட்டாவினை, நகர்த்திக் கொள்ள போதுமான காலம் தரப்பட்டது.3. Latitude
Android OS 'ல் இயங்கும் Google Map application 'னுடன் இணைந்து செயல்படும் Tool ஆக இது வெளியானது. iOS System இயங்கிய சாதனங்களிலும் இது கிடைத்தது. Map 'ல் ஓர் இடத்தை அடையாளம் காண, அதன் Latitude கொடுத்துப் பார்க்கும் வசதியினை இந்த tool தந்தது. ஆனால், இந்த வசதி பின்னர் வந்த புதிய map 'களிலிருந்து எடுக்கப்பட்டது. Auguest மாதத்தில் முழுவதுமாக நீக்கப்பட்டது. இந்த டூல் வழங்கப்பட்ட ஆண்டு 2009. இப்போது இயங்கப்படும் இடத்தை மையமாகக் கொண்டு மேப் பயன்படுத்தும் வசதியை Google தன் Google plus இல் தந்து வருகிறது.4. சொந்த ஆய்வுக்கு 20 சதவீத நேரம் (Google 20% Time)
Google நிறுவனத்தில் ஊழியர்கள் பணிபுரியும் விதம் பற்றிக் கூறுகையில், அவர்கள் தங்கள் சொந்த ஆய்வுப் பணியினை, வாரத்தில் 20 சதவீத நேரம் ஒதுக்கி மேற்கொள்ளலாம் என்ற சுதந்திரம் தரப்படுவதனைப் பெருமையாகக் கூறுவார்கள். Google இதனை நிறுத்திவிட்டது. பலர் இதனை மிக மோசமான நடவடிக்கை என்றும், இதனால், சுதந்திரமான ஆய்வு கூகுள் நிறுவனத்தில் அற்றுப் போய்விடும் என்றும் கூக்குரலிட்டனர். ஆனால், தன் ஊழியர் மற்றும் பணிக் கலாச்சாரக் கட்டமைப்பில் மேற்கொண்டுள்ள மாற்றத்தில் இதுவும் ஒன்று என கூகுள் இந்த நிறுத்தத்தினை மேற்கொண்டது.5. BUILDING MAKER
Google Earth மற்றும் Google Maps ஆகிய application 'களில், முப்பரிமாண model 'களை உருவாக்க இந்த tool பயன்படுத்தப்பட்டது. இதனை சென்ற June 1 முதல் விலக்கிக் கொண்டது Google இருப்பினும் ஏற்கனவே, இதனைக் கொண்டு முப்பரிமாண படங்களை உருவாக்கியவர்கள், இதன் கிடங்கிலிருந்து அவற்றைப் பெற்று, பயன்படுத்திப் பார்க்கலாம். தற்போது Google earth மற்றும் maps application 'ளில், இதே முப்பரிமாண படங்களை உருவாக்க, tools தரப்பட்டுள்ளன.6. CLOUD CONNECT
இது ஒரு Plugin Program 'மாக, கூகுளால் தரப்பட்டது. Google Drive 'ல், நாம் உருவாக்கும் files தாமாக save செய்யப்பட இந்த tool பயன்பட்டது. பின்னர், Google drive 'வினை நம் Personal computer 'ல் இன்ஸ்டால் செய்து இந்த வசதியினை மேற்கொள்ளும் வகையில், Google மாற்றத்தை ஏற்படுத்தியது. personal computer மட்டுமின்றி, Mac மற்றும் Android சாதனங்களிலும் இதே வசதி தரப்பட்டது. ஆனால், இந்த வசதி சென்ற Aprilல் 30 முதல் நிறுத்தப்பட்டது.7. GOOGLE VOICE APP FOR BLACKBERRY
ஏற்கனவே Blackberry கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தான் அளித்த இந்த tool ஐ , Google வாபஸ் பெற்றுள்ளது. இந்த application 'க்கான தன் support 'னை தரப்போவதில்லை என Google றிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்திய blackberry வாடிக்கையாளர்களை, Google, HTML5 பயன்படுத்துமாறு கூறிவிட்டது.8. GOOGLE SYNC (Consumer version)
இதனைப் பயன்படுத்தி, Google Mail, Google calander மற்றும் contacts தொடர்புகளை, Microsoft exchange active sync protocol மூலம் பயன்படுத்தும் வகையில், Google வடிவமைத்துத் தந்தது. ஆனால், பின்னர் Google Google Sync நிறுத்தப்பட்டது. ஆனால், ஏற்கனவே இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தொடர்ந்து இதனைப் பயன்படுத்த முடியும். மேலும் வர்த்தக ரீதியான இதன் தனி tool இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கிறது. இருப்பினும், இந்த tool 'ஐ பொறுத்தவரை, Google இதனை அதன் சமாதிக்கு அருகே கொண்டு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.மேலே கூறப்பட்ட வசதிகளுடன், மேலும் சில சிறிய அளவிலான tools வசதிகளை கூகுள் நிறுவனம் நிறுத்தி உள்ளது. அவற்றில் சில வசதிகள், சில நாட்டு வாடிக்கையாளர்களுடன் மட்டுமே தொடர்புள்ளவை என்பதால், இங்கு பட்டியல் இடப்படவில்லை.
நன்றி-தினமலர்