ஆனால், பயனாளர்களுக்கு இந்த கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. இக்காலத்தில், Facebook , Twitter சமூக இணைய தளங்கள் பால் மக்கள் அதிக ஆர்வம் கொண்டு பயன்படுத்தி வந்தனர். ஆனால், தொடர்ந்த காலத்தில், பயனாளர்கள் Google plus பக்கம் தங்களை இணைத்துக் கொண்டு, அதன் சேவைகளைப் பயன்படுத்த தொடங்கினார்கள். தற்போது மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில், Twitter தளத்தினை Google plus மிஞ்சிவிட்டது.
இருப்பினும் Twitter மற்றும் Google plus இணைந்த எண்ணிக்கை, facebook எண்ணிக்கையை எட்ட இயலவில்லை.Twitter இடம் 23 கோடி பயனாளர்கள் உள்ளனர். Google Plus, தன்னிடம் 30 கோடி பதிவாளர்களைக் கொண்டுள்ளது. facebook பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிட்டது.
Google plus தளத்தின் அதீத வளர்ச்சி, சென்ற மே மாதத்திற்குப் பின்னரே ஏற்பட்டது. மே மாதம் இதன் வாடிக்கையாளர்கள் 20 கோடியாக இருந்தனர்.
Google நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் நோக்கம், Facebook தளத்தினை
வாடிக்கையாளர் எண்ணிக்கையில் வெற்றி கொள்வதல்ல. Google நிறுவனம் இயக்கும் தளங்கள் வழியாக, அதன் அனைத்து சேவைகளையும் தொடர்ந்து மேம்படுத்தவே Google திட்டமிடுகிறது. மிக எளிய சேவைகளை வழங்குவதிலிருந்து, மக்களின் வாழ்க்கைச் சிறப்புகளைப் பதிவு செய்திடும் தளங்களாக, Google ன் தளங்களை அமைக்க விரும்புகிறது. இதற்காகக் கீழ்க்காணும் இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
- *புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி, அவற்றின் மூலம் தேடுதலை எளிமையாகவும் விரைவாகவும் மேற்கொள்ள உதவுதல்.
- *சமூக இணைய தளங்களில் upload செய்யப்படும் படங்களை மேம்படுத்தி பதித்து வைத்திட வசதி செய்து கொடுத்தல். பயனாளர்கள் தங்கள் தகவல்கள் மற்றும் படங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வசதி செய்து கொடுத்தல்.
- video பயன்பாட்டிலும் புதிய வசதிகள் கிடைத்து வருகின்றன. அண்மையில், Google Auto Awesome Movie என்னும் டூலை வழங்கி உள்ளது. இதன் மூலம் Google plus ளத்திற்கு upload செய்யப்பட்ட video clip file 'களைக் கொண்டு, ஒருவர் தன் கற்பனைத் திறனுக்கேற்ப video படங்களைத் தயாரிக்க முடியும்.
நன்றி-தினமலர்