இது 2012 இல் அவதானிக்கப்பட்ட ஒன்று. இதன் பெயர் ISON. இதை பற்றி அறிய NASA வில் தேடி பாருங்கள். இதை எப்படி காணலாம் என பார்ப்போம்.
வானில் எங்கே தோன்றும்?
கிழக்கு வானில் அடி வானுக்கு சற்று மேலாக தோன்றும். இது 28 ம் திகதியை அண்மிக்கும் போது நன்றாக கீழ் இறங்கி விடும். இது செவ்வாயையும் வெள்ளியையும் இணைக்கும் கற்பனை கோட்டின் வழியே இருக்கும். (படம் பார்க்க)
எப்போது தோன்றும்?
கார்த்திகை மாதம் 20ம் திகதி முதல் 28 ம் திகதி வரை.
எங்கு இருப்பவர்கள் காணலாம்?
ஆசியாவில் இருக்கும் குறிப்பாக இந்திய இலங்கை மக்களை கொண்டு இப்பதிவு எழுதப்பட்டு உள்ளது. உங்கள் நாடுகளின் உத்தியோக பூர்வ இணைய பக்கங்களில் மேலதிக தகவல்களை காணுங்கள். வெறும் கண்ணால் காண முடியும்.
எப்போது காணலாம்?
பெரும்பாலும் சூரியன் உதிக்க 1 மணி நேரம் முதல். வழமையாக Zero Five hundred (05:00 Am).