
சார்மினார் 1591-ல் கட்டப்பட்டது. இது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஹைதிராபாத்தில் அமைந்துள்ளது. இது ஒரு மசூதி ஆகும். இது ஹைதிராபாத்தின் சிறப்பான கட்டிடங்களில் ஒன்றாகும். மேலும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற கட்டிடங்களில் இதுவும் ஒன்று.இது முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தற்போது இது இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.