இந்த Program, controlc.com என்ற முகவரியில் கிடைக்கிறது. இதனை install செய்தவுடன், இது நம்மிடம் கேட்கும் முதல் தேவை ஒரு password தான். இதன் மூலம் நம் Data 'வினைச் சுருக்கி வைத்துக் கொண்டு பின்னர் கேட்கும் போது தரும்.
எனவே, ஏதேனும் நினைவில் வைத்துக் கொண்டு பயன்படுத்தக் கூடிய பாஸ்வேர்ட் ஒன்றைக் கொடுத்து, அதனையே இந்த Program க்கு Password ஆக அமைத்துவிடவும். பின்னர், இந்த program 'னைத் திறக்கவும். இது மாறா நிலையில் உங்கள் Computer 'ல் உள்ள, அதாவது நீங்கள் set செய்த browser 'ல் திறக்கப்படும். உடன், நீங்கள் set செய்த password கேட்கப்படும். அதனைக் கொடுத்தவுடன், browser 'ல், நீங்கள் clip board 'க்கு அனுப்பிய data 'வினைக் காணலாம். நீங்கள் எதனையும் copy செய்திடவில்லை என்றால், காலியாக இடம் காட்டப்படும்.
இந்தப் பக்கத்தின் மேலாக உள்ள Advanced என்ற button 'னைக் click செய்தால், மற்ற setting பக்கத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு Advanced Search Settings, Settings, and Blacklist போன்ற tab களைப் பார்க்கலாம். Advanced Search Settings பகுதியில், நீங்கள் எந்த வகையில் தேடலை மேற்கொள்கிறீர்கள் என்பதனை வரையறை செய்திடலாம். தொடர்ந்து, சார்ந்த பல அமைப்புகளையும் உருவாக்கலாம். Admin Theme என்ற பிரிவில் கிடைக்கும் கீழ் விரி பட்டியல் பெட்டியில், பத்துவகையான கருத்துப் பொருட்கள், உங்கள் தேடலுக்கென கிடைக்கிறது. அத்துடன் உங்களுக்குக் காட்டப்படுபவை எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதனையும் இங்கு விருப்பமாக அமைக்கலாம்.
Text, files மற்றும் படங்கள், clip board க்குச் சென்ற பின்னர், எத்தனை நாட்கள் வைக்கப்பட வேண்டும் என்பதனையும் set செய்திடலாம். மாறா நிலையில் இது இரு வார காலமாக அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல விருப்பங்களையும் இதில் அமைக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் உடனே செல்ல தரவிறக்க முகவரி:
நன்றி : தினமலர்