Home » , » Computer Simulation அறிமுகம்

வழக்கத்துக்கு மாறாக அவ்வப்போது உயர்மட்ட சில பதிவுகள் கணணிக்கல்லூரியில் இடம் பெறுகிறது.. இவை பெரும்பாலும் பொறியியல் மாணவர்களிடம் தமிழில் உயர்மட்ட IT இனை கொண்டு சேர்க்கும் முகமாக பொறியியல் பீட மாணவ நண்பர்களால் எழுதப்படுகிறது. பெரும்பாலும் இவை அறிமுகங்களாகவே இருக்கும்.. ஒவ்வொருவரையும் வழி காட்டி விடுவதே நோக்கம். ஏற்கனவே Matlab பற்றி அறிமுகம் பதிவிடப்பட்டது... தமிழில் இதுவரை Matlab பற்றி எப்பதிவும் இல்லை.

ஏனைய தமிழ் தொழிநுட்ப தளங்கள் போல நாளாந்த Tech News களை கணணிக்கல்லூரி விரும்புவது இல்லை.

இப்பதிவில் Computer Simulation பற்றி பார்ப்போம்..


Simulation

எல்லோரும் Truck Simulator Game விளையாடி இருப்பீர்கள். இப்படி பல Games உள்ளது. அதாவது, கணனியில், நீங்கள் வாகனம் ஓட்டுவது போன்ற மெய் நிகர் அனுபவத்தை தருவது...
ஆனால் இப்பதிவில் games பற்றி பார்க்க போவது இல்லை.

பொதுவாக Mechanical Engineering இல் Autocad  simulation உதவும்..  ஒரு காரை கற்பனையில் பௌதிக விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கி ஓடி பார்க்கலாம்.
Matlab இல் Electrical / Electronic Simulation சிறப்பானது. குறிப்பாக Matrix இல் ஆழமாக இதில் செய்முறைகளை ஆராய முடியும். Matlab என்பது இப்போதெல்லாம் தனி பாடமாக பல்கலைகழகங்களில் கற்பிக்க படுகிறது.

Simulation இன் அவசியம்

  1. பல சமயங்களில் தேவையான components கிடைப்பதில்லை.
  2. அனைவருக்கும் போதிய அளவு உபகரணங்கள் ஆய்வு கூடங்களில் இல்லை.
  3. தவறாக இணைக்கப்படும் போது உபகரணங்கள் Simulation இல் பழுதடைவதில்லை
  4. பௌதிக இடம் மிச்சப்படுத்தப்படும்.

Simulation இன் சிறப்புக்கள்

நம் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முடியும்.  ஒரு Dual Core processor மூலம் ஒரு car / Motor / Amplifier இனை இயக்கி பார்க்க முடியும். 

நவீன Simulations softwares  ல் உண்மையான சூழலுக்கு இயைபான சூழலில் இயங்க வசதிகள் உண்டு. Eg: ஒரு A/C motor இயங்கும் போது ஏற்படும் வெப்ப விரிவு மாற்றங்களை ஏற்படுத்த முடிகின்றமை.

Simulation இற்கு உதவும் மென்பொருட்கள்

பொதுவாக
  1. Autodesk products
  2. Matlab
  3. National Instruments (Electronic products)
இதை விட பல Open source softwares கிடைக்கிறது.

வேறு வழிகள்:

Online இல் கூட இதை செய்ய பல தளங்கள் இலவசமாக உள்ளன. AutoDesk இன் இலவச தளமும் உள்ளது. தேவையனாவர்கள் Google இல் தேடி பாருங்கள்.