இதற்கு முதல் Debit / Credit ஒன்று அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்று சொல்லி அதை எப்படி எங்கு பெறுவது என்றும் சொல்லி இருந்தேன். இப்போது தொடர்ந்து செல்ல Debit / Credit அட்டை ஒன்று தேவை.
Paypal பல நாடுகளில் வங்கி கணக்குகளை நேரடியாக இணைக்க அனுமதிக்கும் போதும் இலங்கையில் இன்னும் அது அனுமதிக்க படவில்லை. அதனால் தான் International நிலையில் பயன்படுத்த கூடிய ஒரு ஒரு கடனட்டை அவசியமாகிறது.
இப்போது உங்கள் கையில் ஒரு ATM card இருந்தால்
- உங்கள் ATM அட்டை வழங்கிய வங்கியின் ATM கிளையுடன் தொடர்பு கொண்டு உங்கள் ATM அட்டையில் Visa சேவையை செயற்படுத்தும் படி வேண்டுகோள் விடுங்கள்.
ஆனால் இப்போது இது அவசியம் இல்லை. இலங்கையில் வழங்கப்படும் அனைத்து ATM அட்டைகளிலும் உள்நாட்டில் பயன்படுத்த தக்க வகையில் Visa அல்லது Master சேவை செயற்பட்டு இருக்கும்.
இதை எளிதாக அடையாளம் காண
- உங்கள் ATM அட்டையின் முன்புறம் Visa / Master வர்த்தக சின்னம் பொறிக்கப்பட்டு இருப்பதுடன் பின் புறம் தனியாக 3 இலக்கம் பதியப்பட்டு இருந்தால் அந்து உள் நாட்டில் எங்கும் பயன்படுத்த தக்க அட்டை என அறியலாம்.
அப்படி இல்லாவிட்டால், தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்து பின்னர் அவர்களிடம் இருந்து அந்த 3 இலக்கங்களை பெற வேண்டி இருக்கும்.
உங்கள் ATM அட்டை, Visa/ Mater அட்டை தான் என அடையாளம் கண்டுகொண்டால்,
- உங்களுக்கு அந்த அட்டையை வழங்கிய வங்கியுடன் தொலைபேசியில் அவர்களின் ATM / Online Banking கிளையின் இலக்கத்துடன் தொடர்புகொண்டு, என் Visa Card இல் International Account இனை Activte செய்யும் படி கேளுங்கள்.
- அவர்கள் உங்கள் கடனட்டையின் இலக்கம், உங்கள் பாதுகாப்பு கேள்விக்கான விடை (ATM அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது கேட்டிருப்பார்கள்) ஆகியவற்றை கேட்டு விட்டு, எவ்வளவு காலத்துக்கு Active செய்ய என கேட்பார்கள்.
- பொதுவாக ஆக கூடியது 2 வருடங்கள். நீங்கள் இதற்கு புதிது, உங்கள் வங்கியில் இருப்பு அதிகம் என்றால் முதலில் 1 மாதத்துக்கு Active செய்து கொள்ளுங்கள். பிறகு தேவைக்கு ஏற்ற படி நீட்டிக்கலாம். அனைத்து சேவைகளும் இலவசமே.
குறிப்பு: இலங்கையில் தமிழில் பேசும் ATM / Online Banking உத்தியோகத்தர்கள் இல்லை. அதனால் சாரளமாக ஆங்கிலத்தில் கதைக்க கூடிய ஒரு நண்பரை அருகில் வைத்துக்கொண்டு அவர்களுடன் கதைப்பது நல்லம்.
அவர்களுடன் கதைத்து International Visa Account Active ஆகி விட்டதா? இப்போது உங்கள் ATM மூலம் உலகின் எந்த பாகத்திலும் பணம் பெற முடியும். நம் தேவை அது அல்ல.
இப்போது (Paypal) பெபல் பக்கம் வருவோம்.
- paypal இல் கணக்கு ஒன்றை ஆரம்பியுங்கள். நிச்சயம் உங்கள் சொந்த முகவரியை கொடுத்து ஆரம்பியுங்கள். இது பற்றி விளக்கம் இங்கே
- அடுத்து My Account > profile > Add / Edit Credit card என சென்று பஉங்கள் ATM அட்டையை இணையுங்கள்.
- அவர்கள் அந்த அட்டையை ஏற்றுகொண்டால் எல்லாம் முடிந்து விட்டது என்று பொருள் அல்ல. ஆனால் உங்களால் இனி Paypal மூலம் உலகம் முழுவது நிதி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
இப்போது உங்கள் அட்டையை Verify செய்யவா என கேட்டும்? ஓம் என்றால் பணம் அறவிடப்படும், திருப்ப தரப்படும் என்றெல்லாம் சொல்லி பயமுறுத்துவார்கள்.
நீங்கள் பயப்படாது Yes என்று கொடுங்கள். அதன் பின்னர் 4 இலக்க PIN இலக்கம் தருமாறு கேட்பார்கள். இப்போது நீங்கள் Logout செய்யுங்கள்.
- 3, 4 நாட்களின் பின்னர், உங்கள் வங்கியின் Online Banking Branch க்கு அழைத்து என் Paypal PIN இலக்கத்தை தருமாறு கேளுங்கள்.
- அவர்கள், உங்கள் கணக்கை உறுதிப்படுத்தி அதை தருவார்கள்.
- மீள Paypal இல் Login செய்து My Account > profile > Add / Edit Credit card இல் சென்று உங்கள் Card இனை தெரிவு செய்து அந்த 4 இலக்கங்களையும் கவனமாக கொடுங்கள். இப்போது Verify என சொல்லி பணத்தை மீள் அளிப்பதாகவும் சொல்லுவார்கள். அதை பற்றி கவலையை விடுங்கள்
Verify செய்வதன் நோக்கம், அதன் போது நடைபெறும் செய்முறைகள் பற்றி இங்கு சொல்லவில்லை. அது நீண்ட பதிவாகி விடும். இத்துடன் paypal உடன் நீங்கள் இணைவது முடிந்து விட்டது. Paypal ஆழமான அறிமுகம் - 3 இல் சந்திக்கிறேன்.
கணணிக்கல்லூரியில் முதன் முறையாக Facebook Comment Box இணைக்கப்படுள்ளது. அத்துடன் இதுவரை இருந்த Disqus Comment Box உங்கள் விருப்பின் பேரில் Load ஆகும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது.