Home » , » PayPal பற்றி ஆழமான அறிமுகம் - 1

வழமை போல பெரிதாக பதிவுகளை தர முடிவதில்லை. அண்மையில் CIMA Exam ஒன்றுக்கு நண்பர் ஒருவர் பணம் செலுத்த முற்பட்ட போதும் USA University ஒன்றுக்கு பணம் செலுத்த முயன்ற போதும் Paypal பற்றி இலங்கையர்கள் இன்னும் பெரிதாக அறியவில்லை என்று தெரிந்தது. அண்மையில் களனி பல்கலைக்கழகத்துக்கு போன போதும் Paypal இனை விளம்பரப்படுத்தி இயங்கும் கடை ஒன்றை கண்டேன். எவ்வளவு தூரத்துக்கு மக்களை இவர்கள் ஏமாற்றுகிறார்கள்? இப்பதிவில் ஓரளவுக்காவது Pay pal பற்றிய தெளிவை ஏற்படுத்த முயற்சிக்கிறேன்.


இலங்கையில் வசிக்கும் Paypal சேவையை பயன்படுத்த விரும்பும் தொழில்நுட்ப விரும்பிகளை மையப்படுத்தி எழுதப்படுகிறது. இங்கு கூறப்படும் நடைமுறைகள், சேவைகள் அனைத்தும் இலங்கை உள்நாட்டு வங்கிகளுக்கும் நாணய சட்டங்களுக்கும் அமைவாக பதியப்படுகிறது. முடிந்தவரை இப்பதிவு சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்குமாறு எழுதப்பட்டுகிறது.

Paypal என்றால் என்ன?

சுருங்க சொன்னால் உலகம் முழுவதும் நாட்டுக்கு நாடு நிறுவனத்து நிறுவனம் பணத்தை பரிமாற்ற உதவும் சேவை. இணையத்தில் பொருள் வாங்குது என்றாலும் சரி, உறவினருக்கு அனுப்புவது என்றாலும் சரி Paypal தான் எப்போது சிறந்தது. சிங்கப்பூரில் இதன் தலைமையகத்தை  கொண்ட இதன் தளம் அமெரிக்காவில் உள்ளது. இன்று Ebay போன்ற சேவைகளுடன் இறுக பிணைக்கப்பட்டு விட்டது.

Paypal இன் சிறப்பு என்ன?

இதன் சிறப்பே பாதுகாப்பும் நம்பிக்கையும் ஆகும். தனிநபர் பாவனைக்கு இலவசமாக கிடைக்கிறது. வர்த்தக நடவடிக்கைகளில் வாங்குபவருக்கு பாதுகாப்பளிக்கிறது. தகுந்த காரணங்களுடன் Refund பெறும் வசதி என பல நன்மைகளை பாவனையாளுக்கு வழங்குகிறது. அதே போல Developers க்கு API வசதிகளை மிகுந்த பாதுகாப்புடன் வழங்கி கொண்டிருக்கிறது.

Paypal இன் முக்கியம் என்ன?

நேரடியாக Visa, Master கார்ட் மூலம் நிதி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவற்றில் எந்த பற்றுசீட்டுக்களும் நமக்கு கிடைப்பதில்லை.  நேரடியாக பணம் பரிமாற்றிய வங்கி மூலமே நீண்ட அலைச்சலின் பின்னர் விவரங்களை பெற முடியும்.
 ஆனால் paypal ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும் மின்னஞ்சல் மூலம் அறிக்கைகளை அனுப்பிக்கொள்ளும்.

இலங்கையில் Paypal

இலங்கை ஜனாதிபதியின் மேலே உள்ள கீச்சு மூலம் ஓரளவு விளங்கி இருக்கும். 
Nolimit இல் ஆடை வாங்கினாலும் Ebay இல் செருப்பு வாங்கினாலும்  'Odel' இல் அது வாங்கினாலும் சரி paypal தேவை.

இலங்கையருக்கான Paypal செயற்படுத்தும் நடவடிக்கை படிமுறைகள் 

அடிப்படை  தேவைகள்

  • Paypal கணக்கு
  • HNB / Commercial Bank கணக்கு (BOC, People's Bank, NSB இல் இயங்குவதில்லை)
  • HNB / Commerical Bank Visa/ Master Debit Card + International Account Activation
இதுவரை உங்களிடம், Paypal கணக்கு இல்லை என்றால் முதலில் ஆரம்பித்து கொள்ளுங்கள். அத்துடன் HNB / Commercial Bank இலும் கணக்கை ஆரம்பித்து Debit Card ஒன்றை பெற்று கொள்ளுங்கள் (ATM card டை தான் சொல்கிறேன்)

இவை ரெண்டும் இருந்தால் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்ற அடுத்த பதிவில் எதிர் பாருங்கள்.