Home » , » நீங்கள் ஹாக்கர்களின் Victim ஆக இருக்கிறீர்களா? [ஹாக்கர் பகுதி 2]

எனது முந்திய பதிவில் (ஹாக்கர்" (Hacker) - ஒரு முன்னுரை (1)) கூறிய படி இந்த பதிவில் நாம் எவ்வாறு எல்லாம் hacker 'களின் Victim ஆக இருக்கிறோம் மற்றும் நமது Password எப்படி இருக்க வேண்டும் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.
Hacker என்பவன் ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து வந்து நமது PASSWORD எடுத்து செல்பவன் அல்ல. அவன் உங்களுடனும், என்னுடனும், ஏன் நமக்கு மத்தியில் இருக்கும் எவனோ ஒருவனாக கூட இருக்கலாம்.
சரி அவன் நமது password & Personal Details எடுத்து என்ன செய்ய போகிறான் என்று நினைத்தால். “Identity Thief” படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

A hacker can steal your passwords in Three methods. 
  1. dictionary Method 
  2. Brute force Method. 
  3. guessing method

1.Dictionary Method:

இந்த முறை மூலம்  நமது dictionary இல் இருக்கும் அனைத்து வார்த்தைகளும் முயற்சி செய்து உங்கள் password என்ன என்பதை 5 TO 10 MIN சொல்லிவிட முடியும். இதனால்  முடிந்த வரை Dictionary இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
Eg: 
I Love Rajini Kanth என்பதை ILRK என்று வைத்து கொள்ளுங்கள்.


2.Brute force Method

இந்த முறை மூலம்  alphabets வில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தாக முயற்சி செய்து பார்க்கும் a-z & A-Z, 0-9, & all Special Characters.
நீங்கள் உங்கள் password இல்  case Difference இல்லாமல் Password வைத்து இருந்தால் நான்கு இலக்க password கண்டு பிடிக்க எடுத்துகொள்ளும் நேரம் வெறும் 1 வினாடிகள் தான்.

So ILRK can reveled within 1 sec only my friend. உங்கள் password crack செய்ய  எவ்வளவு  நேரம் எடுக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?? அப்படி என்றால் இந்த சுட்டிக்கு செல்லவும்.

3. Guessing Method

இது தான் மிகவும் சுலபம் ஆனதும் மற்றும் மிகவும் அபாயகரமானதும் ஆகும்.
மேல்  குறிபிட்ட இரண்டு முறையும் Technical முறையில் password ஐ crack செய்யும் முறை. ஆனால் இந்த முறையில் எந்த டெக்னிக்கல் அறிவும் தேவை இல்லை. உங்களை பற்றி நன்றாக தெரிந்திருந்தால் போதுமானது.



இதை தான் நாங்கள் (ஹாக்கர்) SOCIAL ENGINEERING  என்று சொல்லுவோம், FB & Twitter  இல் உங்களுக்கு நண்பர்களாக இணைத்து, உங்களிடம் Chat செய்து, உங்களிடம் நன்மதிப்பு பெற்று உங்களின் Personal Information ஐ எளிதாக பெற முடியும். கீழே இருக்கும் தகவல்கள் பெற உங்கள் Profile information, மற்றும் நீங்கள் போடும் Status & Tweet பார்த்தாலே போதும்.



உங்களுடைய bio-data, or personal information தெரிந்து இருந்தால் போதுமானது. இது போக பிடித்த நிறம், ஹீரோ, ஹீரோயின், பொழுதுபோக்கு. பிறந்த நாள், உங்களுக்கு பிடித்தமானவரின் பெயர், பிறந்த தேதி, செல்ல பிராணி இன் பெயர், பிடித்த பாடல் வரிகள், உங்களுக்கு செல்போன் எண். இது தவிர வேற எதை நீங்கள் PASSWORD ஆக வைத்து விட போகிரிகள்??? 

எ.கா: உங்கள் பேங்க் ATM Card – Pin number எவ்வாறு இருக்கும் ??
மொத்தம் 4 எண்கள் தான், எனவே பின்வருபவைகளில்  ஒன்று தான் கண்டிப்பாக இருக்கும்.
  • பிறந்த வருடம் (இது உங்களுடையதோ இல்லை நெருக்கமானவர்கள் உடையோதோ இருகலாம், அல்லது இரண்டும் கலந்து கூட இருகலாம் Eg: your DOB 1986 your lover DOB 1988 so ur Pin no may be 8688)
  • பிறந்த தேதி (இது உங்களுடையதோ இல்லை நெருக்கமானவர்கள் உடையோதோ இருகலாம், அல்லது இரண்டும் கலந்து கூட இருகலாம் Eg: your DOB 01/01/1980 so your pin no maybe 1186)
  • உங்கள் செல்போனின் கடைசி நான்கு எண்கள் அல்லது முதல் நான்கு எண்கள், அல்லது உங்களுது துணையின் செல்போன் எண்கள் 
  • உங்கள் Bike / Car in reg no. or library membership card, Or Emp ID
  • மேல்  குறிபிட்ட எதோ ஒரு வகையுள் உங்களது pin no.  வந்து விடும் (80% of the pin no are fall in this category only)
சரி நீங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் பயன்படுத்தும் எல்லா கணக்கும் ஒரே Password  தானே பயன்படுத்துகிறீர்கள். அப்படி என்றால் ஒரு hacker உங்கள் எதனும் ஒரு ID ஐ  hack செய்து விட்டால், உங்களது அனைத்து ID யையும் எளிதாக hack செய்து விட முடியும்.

சரி ஒவ்வொரு  கணக்குக்கும் ஒவ்வொரு  Password  பயன்படுத்தினால் எந்த id க்கு எந்த password பயன்படுத்துகிறோம் என்பது மறந்து விடுகிறோம்  என்ற காரணத்திற்காக ஒரு excel இல் save செய்து வைக்கவோ, அல்லது ஒரு பேப்பரில் எழுதி வைத்தோ கொள்ளதிர்கள். அது இதை விட மோசமானது.
நான் உங்களுக்கு எளிதாக Password  வைப்பது எப்படி என்று சொல்லி தருகிறேன். நான் பயன்படுத்தும் முறை இது தான். உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்றால் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

எளிதாக பாஸ் வோர்ட் வைப்பது எப்படி?

Select any two names and two numbers set

for an example
  • singam&pulli 
  • 1234 & 7890
  • use it in combined method.
  • SinGam@1234
  • PuLli@7890
  • SinGam@7890
  • PuLli@1234
  • 1234@SinGam
  • 7890 @ PuLli

இதனால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட 8 Password  கிடைத்து விடுகிறது, ஒவ்வொரு கணக்கிற்கும்  இந்த 8 Password ஏதாவது ஒன்றை வைத்து கொண்டால். உங்களுக்கும் மறந்து விடாது. 

Some of the commonly used Passwords are revealed all over the World.




நமது அடுத்த பதிவில் hacker 'களால் அவ்வாறு எல்லாம் தாக்கப்படலாம் என்பதை பார்க்கலாம். 
நான் வேறு யாரும் அல்ல, உங்களுள் ஒருவன் தான்.