Home » » "லிம்போ" வியக்க வைக்கும் விளையாட்டு [ Limbo Game Review + Download]

Call of Duty, NFSMW, GTA V இப்படி High End Video Games, தான் பொதுவாக கணணி விளையாட்டுக்களில்  ஆர்வமுள்ளவர்களின் தேர்வாக இருக்கும். அதுவும் உயர் தர Hardwares கொண்ட  கணணி என்றால் சொல்லவா வேண்டும். உயர் தர Graphic, தெளிவான கதை,  சம்பவங்க என அனைத்தும் மெய்நிகர் தன்மையில் இவற்றில் தான் கிடைக்கும். அதிகளவு Graphic நுணுக்கங்கள் தான் நாம் இவற்றில் பெரும்பாலும் எதிர் பார்ப்பது. Crysis 2 வில் இருந்து 3 D இல் விளையாடும் வசதியின் சிறப்பை அதை விளையாடியவர்கள் உணர்ந்து இருப்பீர்கள். இந்த அனுபவங்களை எளிய 2D Games தருவது சிரமமான விஷயம், வெறும் சில நூறு MB களில் அதை அங்கே எதிர்பார்ப்பதுமே கூட தவறான ஒன்றே!   ஆனால் சில அதிசயமான - ஆச்சரியமான விளையாட்டுக்கள் எப்போதாவது கிடைக்க தான் செய்கின்றன.

80 MB அளவில் Action, Adventure  Stunning Graphics, எளிமை, சிந்தனையை தூண்டும்  சவால்கள், மிக எளிமையான controls , ஒரு அழகான கதையம்சம், அதற்கொரு சுவாரசியமான  முடிவு என, நீண்டகால பசிக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும் ஒரு Game பற்றி தான் பார்க்க போகிறோம்.  அத்துடன் விட்டு விடுவமா? நீங்களும் விளையாட Download செய்யவும் கீழே  முடியும்.


Limbo  அறிமுகம்

Nameless boy character  who awakens in the middle of a forest on the "edge of hell " searching his missing sister through dark woods 
இந்த விளையாட்டை பற்றி சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தமிழ் வலைப்பூவில் பார்த்தேன். இப்போது தான் அதை விளையாடி பார்க்க - உங்களுடன் பகிர முடிகிறது. Android தவிர்ந்த அனைத்து OS களுக்கும் இது கிடைக்கிறது.

நடு காட்டில் விழிக்கும் சிறுவன், தனது சகோதரியை தேடி பயணிக்கிறான்.போகும் வழியில் தன்னை கொல்ல வரும் ஒரு சிலரை போட்டு தள்ளிய படி செல்கிறான். இறுதியில் சகோதரியை அடைந்தானா என என நீங்களே விளையாடி காணுங்கள்.

பல விருதுகளை அள்ளிய இந்த விளையாட்டை டென்மார்க்க்கை சேர்ந்தவர்களால் 2010 இல் மேம்படுத்தப்பட்டது.

கணணியின் அடிப்படை தேவைகள்

High end Games  விளையாட அவசியமான, Advance Hardware configuration  இதற்குத் தேவையில்லை என்பதால் எளிய கம்யூட்டர்களிலும் கூட விளையாட முடியும் என்பது சிறப்பு. கொஞ்சம் Horror Effects நிகழ்வுகளில் இருக்கிறது.

  • OS: XP, Vista, 7, 8, 8.1
  • Processor: 2 GHz
  • Memory: 512 MB RAM
  • Graphics: Any cards + Shader Model 3.0 required
  • Hard Drive: 185 MB free space
  • DirectX®: 9.0c


Download

விளையாட்டை பற்றி சொல்லி விட்டு, அப்படியே விட்டால் சரி இல்லை. இதை வாங்கி விளையாடும் நிலையில் அனைவரும் இல்லை. ஆரம்பத்தில் 180MB இல் வெளியான இவ்விளையாட்டு இப்போது 75 MB க்கு சுருங்கப்பட்டு விட்டது. கீழே உள்ள இணைப்பில் தரவிறக்கி வழமை போல install செய்து விளையாடுங்கள்.

Hints

  • ஆரம்பத்திலேயே சொன்னேன், கொஞ்சம் சிந்திக்க வேண்டும் என்று. சில Levels உடைக்க முடியாவிட்டால் Youtube இல் தேடி பாருங்கள். அனைத்து levels விளையாடி முடித்த videos கிடைக்கின்றன.
  • பெரும்பாலும் Time முக்கியம்
  • பௌதிக வெளியில் உள்ள அனுபவங்கள் முக்கியமானவை

Conclusion 

Games 'இல்  ஆர்வமும், அதே நேரம் தயக்கமும்,சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் விளையாட வேண்டியது Limbo வை தான், லிம்போவில் உங்களோடு பயணிக்க ஒரு சிறுவன் காத்திருக்கிறான்.

Thanks : லிம்போ -[ புலம்பல்கள் ஆதி தாமிரா ], Wikipedia  & Thepiratebay Uploaders