Home » » Google Adsense - ஒரு பார்வை - 10 வருட நிறைவு

Official BlogGoogle இன் பலராலும் அறியப்பட்ட சேவைகளில் ஒன்றாகிய Adsense,  June 18, 2013 அன்று - அதாவது நேற்று தனது பத்தாவது நிறைவு தினத்தை கொண்டாடியது. கடந்த 10 வருடங்களில் adsense எவற்றை சாதித்தது? என்ன மாற்றங்கள் வந்தன? என்னவெல்லாம் நடந்தது என நீங்கள் அறியாத மறு பக்கத்தை பற்றி இரத்தின சுருக்கமாக இப்பதிவு விளக்குகிறது.


  1. Adsense பற்றிய முதலாவது அறிவிப்பு 2003 இதே நாளில் இங்கு - googlepress இல் Google மூலம் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
  2. தனியான எந்த Domain பெயரையும் கொண்டிராமல் வெறுமனே adsense.google.com எனும் sub- domain ஒன்றில் இயங்குவது ஆச்சரியமான ஒரு விடயம். இதற்கும் வணிக ரீதியில் ஏதோ ஒரு காரணம் நிச்சயம் இருக்கும்.
  3. இது வரை  36 மொழிகளில் இயங்கும் இணைய பக்கங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் adsense சேவை வழங்கப்பட்டு வருகிறது. செம்மொழியான தமிழுக்கு இதுவரை ஆதரவு கிடைக்காமல் இருக்க பிரதானமாக தமிழை முதல் மொழியாக கொண்ட நாடு இதுவரை இல்லாததும், தமிழில் விளம்பரங்களை வழங்க போதிய அளவு விளம்பர தாரர்கள் இல்லாமல் இருப்பதும் ஆகும்.
  4. ஆரம்ப காலங்களில் இலகுவாக Adsense கணக்கை பெற கூடியதாக இருந்தாலும் 2012 இன் பின்னர் வந்த secound step approval முறை adsense பெறுவதை கடினமாக்கியது.
  5. Adsense ன் இறுக்கமான கட்டுப்பாடுகளே அதன் தரத்தை பேணி பாதுகாக்கிறது. 
  6. சராசரியாக ஒரு click க்கு முன்னணி தளங்கள் 1$ முதல் 4$ வரை அள்ளுகின்றன.
  7. Adsense தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் பதில்கள் இங்கு support.google.comஇருக்கின்றன
  8. Adsense இல் ஏற்பாடும் சந்தேகங்களை தீர்க்க அட்சென்ஸ் Community Center உதவுகிறது.
  9. அமெரிக்கர்களுக்கு மட்டுமே பல சிறப்பான சேவைகள் Adsense இல் கிடைக்கிறது.
  10. பாலியல், போதைப்பொருள் பற்றிய விளம்பரங்கள் Adsense இல் இடம் பெறுவதே இல்லை.
  11. என்றாலும் Family Planning (கருத்தடை) தொடர்பான விளம்பரங்கள் மட்டுப்படுதல்களுடன் வெளியாகிறது.
  12. Adsense இன் இன்னொரு பதிப்பாகிய Adsense premium நிபந்தனைகள் அற்ற ஒரு விளம்பர சேவை ஆகும். பல மில்லியன் பக்க பார்வைகளை பெரும் பக்கங்களுக்கு Google இன் விசேட அழைப்பில் இது வழங்கப்படுகிறது. சாதரணமாக Adsense பாவனையாளர் ஒருவர் Premium பகுதிக்கு பொருத்தமானவர் என Google கருதும் போது Google Adsense Team அங்கத்தவர் ஒருவர் நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புதிய சேவைக்கு  உங்களை அழைப்பார். Mashable.com, cnn.com போன்ற தளங்கள் சில உதாரணங்கள் ஆகும்.
  13. ஒரு நாட்டில் நீங்கள் பதிவு செய்த பின்னர் வேறு நாட்டுக்கு ஒரு போதும் உங்கள் Adsense கணக்கை மாற்ற முடியாது.
  14. ஆக குறைந்தது 100$ இருக்கும் போதே உங்கள் வருமானத்தை பெற முடியும்.
  15. Adsense ஆனது Adword தவிர்ந்த ஏனைய பல சேவைகளிடம் இருந்தும் விளம்பரங்களை பெறுகிறது. 
  16. இவ் விளம்பரங்கள் மீது போலியான click களை மேற்கொள்ள பல வழிகள் இணையத்தில் இருந்த போதும் எவையும் பயனளிப்பதில்லை.
  17. ஒவ்வொரு மாதமும் 1 மில்லியன் பேருக்கு பணம் செலுத்துவதாக Adsense குறிப்பிடுகிறது.
  18. தம்மிடம் 2 மில்லியன் மக்கள் உள்ளதாகவும் கடந்த வருடம் 7 millon US Dollers பணத்தை அவர்கள் சம்பாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
  19. Adsense நேரடியாக மட்டும் அல்லது Youtube, Blogger என வேறு hosted partners மூலமும் கிடைக்கிறது.
  20. Adsense ஆனது Google Analytics, Google Adwords, Google Webmaster என பல சேவைகளுடன் ஒருங்கினைக்கபட்டு மேலதிக Adsense bots மூலம் இணைய பக்கங்கள் கண்காணிக்கபட்டு பொருத்தமான விளம்பரங்கள் காட்சி படுத்த படுவதுடன் மிக  சிக்கலான Algorityms மூலம் ஒவ்வொரு கிளிக்'கும் கண்காணிக்கப்பட்டு பணம் செலுத்தப்படுகிறது.