அட போங்கப்பா.. நாங்களே அட்சென்ஸ் கிடைக்காம வெறுப்பில இருக்கிறம். இதில நீங்க வேற..என்று பலர் சொல்லுவீர்கள். ஆனால் Adsense கிடைத்தவர்களுக்கு இனிப்பான மாற்றம் தான் இது. உலகம் முழுவதும் Developers களின் நீண்ட கால எதிர் பார்ப்பு -கோரிக்கை நேற்று நள்ளிரவு முதல் நிறைவேறியது. அப்படி என்ன மாற்றம்?? இதுவரை காலமும் Adsense இன் AD code ஆனது synchronous மட்டும் கிடைத்தது. இனி Asynchronous இலும் கிடைக்கும். இரேண்டுக்கும் என்ன வேறுபாடு? ஒரு "A" தானே?? அப்படியல்ல... பழைய Ad code மூலம் சில சமயங்களில் பக்க வடிவமைப்பு உருக்குலைக்கப்பட்டு இருக்கும். இனி அந்த பிரச்சனை இல்லை. Asynchronous ஒரு நாள் முழுக்க பாடம் நடத்தலாம். அதை பற்றி இங்கு தேவை இல்லை. Asynchronous இனை பயன்படுத்துவதால் என்ன நன்மை? Asynchronous க்கு மாறும் போது கவனிக்க வேண்டியவை என்ன? என்பது பற்றி இப்பதிவு அலசுகிறது.
@Adsense introduced Asynchronous Adsense Ad code in Beta.
— Power^ (@powerthazan) June 28, 2013
நன்மைகள்
- improved web latency
- better user experience for your site’s visitors
- Adsense Ads தோன்றுவதில் சிக்கல் வந்தாலும் இணையப்பக்கம் இலகுவாக தோன்றும்.
- Mobile பாவனையாளர்களையும் அனுசரிக்கிறது
கவனிக்க வேண்டியவை
பழைய Adsense code அனைத்தையும் நீக்கி விட்டு மீள அதே AD unit க்கு உரிய Asynchronous Ad Code இனை பயன்படுத்துங்கள்.
மாறும் போது பூரணமாக மாறுங்கள். ஒன்றில் synchronous Ad Code அல்லது Asynchronous Ad Code மட்டும் இருப்பதே நல்லது.
எப்படி மாறுவது?
Adsense பக்கத்தில் AdSense ad code இனை பெரும் போது புதிதாக வந்திருக்கும் Drop box இல் "Asynchronous BETA" இனை தெரிவு செய்யுங்கள். புதிய Adcode னை இணைய பக்கங்களில் பயன்படுத்துங்கள்.
இனி புதிய Ads http://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js மூலம் அழகாக உங்கள் பக்கத்தை அலங்கரிக்கும். இது வரை http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js தானே இருந்தது.
- இதை பற்றிய Google உதவிக்குறிப்பை இங்கே https://support.google.com/adsense/answer/3221666 காணலாம்.
- இது beta நிலையிலேயே உள்ளது