
இப்பதிவு அனைவரும் பயன்படுத்த வேண்டிய Google Analytics - இணைத்தல் 1 இன் தொடர்ச்சியே. அதை வாசிக்கவிடின் முதலில் வாசித்த பின்பு மீண்டும் வாருங்கள்.
இங்கே உங்கள் பிளாக்கர் புள்ளி விபரங்களுக்கும் கூகிள் Analytic விபரங்களுக்கும் இடையில் உள்ள மாறுபாட்டை காணுங்கள்.
இவற்றில் இருந்து என்னத்தை பெறலாம்:
இவற்றில் இருந்து உங்களால் உங்கள் வலைத்தளத்தின் மொத்த ஜாதகத்தையும் பெறலாம்.
யார் எங்கிருந்து எதை தேடி எதனால் எப்போது எப்படி வந்து என்ன செய்து எதை வாசித்து எதை திருடி என்ன கமெண்ட் போட்டு வேறு எங்கெல்லாம் சென்று இறுதியாக எங்கிருந்து வெளியேறினார் என்று பார்க்கலாம். இன்னும் நிறைய இருக்கிறது. அதை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
பதிவின் நோக்கத்தை என்ன?
உங்கள் பதிப்புரிமை பெற்ற அல்லது உங்கள் சொந்த ஆக்கங்களை பிறர் பிரதி எடுப்பதை முற்றிலும் தடுப்பது எப்படி? அதையும் மீறி பிரதி எடுப்பவர்களை கையும் மெய்யுமாக பிடிப்பது எப்படி? அவர்கள் எதை எல்லாம் எடுத்தார்கள் என்பதை கண்காணித்தல். இவை தொடர்பாக இப்பதிவில் நான் உங்களுடன் பல விடயங்களை பகிர விளைகிறேன்.
நான் இதில் இந்த வகையை பயன்படுத்த போகிறோம்.
நான் இப்போது உங்கள் எழுத்துக்கள், புகைப்படங்களை எவ்வாறு CTRL+A அல்லது மௌஸ் மூலம் தெரிவு செய்வதை தடுப்பதை பற்றி பார்ப்போம். அத்துடன் திருடுபவர்களை கண்காணிதத்தலை Event என்ற பகுதியை பயன்படுத்தியும் காண போகிறோம்.
Text selectionனை தடுக்கும் முறைக்கு என்ன செய்ய வேண்டும்?
இது மிக மிக இலகுவானது. உங்கள் டஷ்போர்ட் இல் சென்று புதிய HTML Widget ஒன்றாக இந்த கோடிங்கை பேஸ்ட் செய்து save செய்யுங்கள். பின்னர் நீங்களே இது செயட்படுகிறதா என பரிசோதிக்க Text Highlight செய்து பாருங்கள்.
அத்துடன் இந்த முறை ஒன்றும் புதிதல்ல. பலர் பயன்படுத்திக்கொண்டு இருப்பீர்கள். எனினும் நான் இங்கே சற்று வித்தியாசமான முறையில் இரண்டு இணைத்துள்ளேன். அதனால் உங்கள் பழையதை நீக்கி விட்டு இதை இணையுங்கள்.
இப்போது உங்கள் பதிவு select செய்யப்பட்டு பிரதி எடுப்பது முழுவதுமாக தடுக்கப்பட்டு விட்டது . எனினும் Right Click மூலம் பலர் பிரதி எடுக்கிறார்கள். இதை Google Analytic மூலம் கண்காணித்து தடுப்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
இதனால் ஏற்பாடும் இடர்கள்:
இது சில பிரதி எடுக்க வேண்டிய பதிவுகள் இணைக்கப்படும் போது உங்களால் இதை நிறுத்த முடியாது. உதாரணமாக நான் இங்கு இதை இணைக்கவில்லை. இணைத்தால் உங்களால் மேற்குறிப்பிட்ட கோடிங் பகுதியை copy செய்ய முடியாது போகும். எனினும் இவ்வாறு தேவைப்படாத சந்தர்ப்பங்களில் இது பயனுள்ளது . உதாரணமாக இங்கே சென்று பிரதி எடுக்க முடிகிறதா என்று பாருங்கள். எனினும் இந்த கோடிங் இயக்கத்தை இடை நிறுத்தி பதிவு திருடர்களால் இலகுவாக பிரதி எடுக்க முடிகிறது. அதை கண்காணிப்பதை பற்றி தொடர்ந்து கீழே பாருங்கள்
அடுத்து பிரதி எடுப்பதை கண்காணிக்கும் முறை பற்றி பார்போம், பதிவு சற்று நீண்டு விட்டது. எனவே அடுத்த பதிவில் இதை காணுங்கள். அதற்கு முதல் இந்த கோடிங்கை முறையாக நிறுவி சிறப்பாக செயற்படுகிறதா என பாருங்கள்.
Google Analytic - 2 பதிவு திருடர்களை கண்காணித்தல்
இப்பதிவு உங்களுக்கு பயன்பட்டதா / பயனுள்ளதா என்பதை தெரிவியுங்கள்.
உங்கள் கருத்துக்களே எனது அடுத்த பதிவை சிறப்பாக்கும்.
நான் எதிர்பார்த்த அளவு இப்பதிவு பதிபவர்களை சென்றடைய வில்லை என்பது கவலையளிக்கிறது. முடிந்தால் நீங்கள் இப்பதிவை உங்கள் நண்பர்களுடன் G+ அல்லது ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.