Home » » உங்கள் பதிவுவின் எப்பகுதி வாசகரால் வாசிக்கப்பட்டது என்பதை கண்காணித்தல் - Google Analytics -4

இப்பதிவை வாசிக்கும் நீங்களும் ஒரு பிரபல பதிபவர் தான். எனினும் உங்கள் பதிவு பக்கம் வாசகர்களிடம் எந்தளவு சென்றடைந்து உள்ளது என்பதை நீங்கள் அறிவீரா? இதற்கு கூகிள் உதவியுடன் உங்கள் வாசகர்களை கண்காணிக்கும் முறை பற்றி நான் முன்னைய 4 பதிவுகளின் ஊடாகவும் தெரிவித்தேன். நீங்கள் Google Analytics சேவையை பயன்படுத்துபவராயின் இதை தொடர்ந்து வாசிக்கவும். இல்லை எனில் முதலில் அதை இணைக்கவும். அது தொடர்பான விளக்கங்களை இங்கே பெறுங்கள்.


நீங்கள் எனது முன்னைய Google Analytics தொடர்பான பதிவுகளை வாசித்து பரீட்சியமானவர் என்ற எண்ணத்துடன் இப்பதிவை மேலும் வளர்க்கிறேன்.


உங்கள் பதிவு எவ்வளவும் வாசகரால் வாசிக்கப்பட்டது என்பதை கண்காணித்தல் என்றால் என்ன?
நீங்கள் 1000 சொற்களில் ஒரு பதிவை எழுதுகிறீர்கள். அதன் நடை தொடர்ந்து விறுவிறுப்பாக உள்ளதா இல்லையா? உங்கள் பக்கத்திற்கு வரும் வாசகர் பதிவை படிக்க ஆரம்பிக்கிறார். இடையில் பிடிக்கவில்லை. உடனடியாக பக்கத்தை மூடுகிறார். இடையிலா? அப்படி என்றால்? அதை கண்காணிப்பது எவ்வாறு என்பதை இப்பதிவு அலசுகிறது.

இதற்கு உங்கள் வலைப்பூவில் இணைக்கப்பட்ட Google Analytics  கோடின்கின் இறுதியில் </script> க்கு முன் கீழே உள்ள கோடிங் பகுதியை இணையுங்கள்.





அத்துடன்  கோடின்கின் இறுதியில் </script> க்கு கீழே , இங்குள்ள உள்ள கோடிங் பகுதியை இணையுங்கள்.




இவ்வளவு தான் வேலை. இப்போது save செய்து கொள்ளுங்கள். இவை வலைபூவிற்கு மட்டும் அல்ல எந்த இணைய பக்கங்களுக்கும் பொருந்தும்.

இறுதியில் முன்னைய பதிவுகளில் சொன்ன முறைகளுடன் சேர்த்து உங்கள் இறுதி கோடிங் இவ்வாறே தோன்றும்.



இதன் புள்ளி விபரங்கள் எவ்வாறு தோன்றும்?
உங்கள் event பகுதியில் இதன் புள்ளி விபரங்கள் தோன்றும். இதை ஒரு பகுதியை இங்கே காணுங்கள் .. அம்புக்குறி இட்ட இடங்களை கவனிக்கவும்.

Google analytics scroll depth





























இதில் இருந்து என்ன விபரங்களை பெறலாம்?
இப்படங்களை பார்த்தே நீங்கள் புரிந்து இருப்பீர்கள்.
சுருங்க சொல்லின் உங்கள் பக்கம் எந்தளவு தூரம் பார்வையாளர்களால் உருட்டப்பட்டு வாசிக்கப்பட்டது என்பதை காணலாம்.

இந்த விசேட முறை அறிமுகப்படுத்தப்பட்டு சில வாரங்களே ஆகின்றது. இதை உடனடியாக உங்கள் கரங்களில் சேர்ப்பதில் கணணிக்கல்லூரி பெருமையடைகிறது. உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். இங்கே கருத்துரைகளை இடுவதில் ஏதேனும் சிக்கல்களை எதிர்நோக்கின் இங்கே கிளிக் செய்து தெரிவியுங்கள்

அடுத்த பதிவில் உங்கள் தளங்களில் இருந்து எடுக்கப்படும் திருட்டு படங்கள் தொடர்பாக Google Analytics மூலம் கண்காணித்தலை பற்றி பார்போம்.

நமக்காக நாமே !