
உயிரியல் என்பது வாழ்க்கை மற்றும் உயிரினங்கள் பற்றிய இயற்கை அறிவியலாகும். உயிரியலில் அனைத்து உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு, பரம்பல், மற்றும் உயிரியல் வகைப்பாடு போன்றவை ஆராயப்படுகின்றது. இது உயிரினங்களுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், எப்படி தனிப்பட்ட உயிரினங்களும், உயிரின இனங்களும், தோற்றம் பெற்றன, அவை தங்களுக்குள்ளும், ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது.மூலக்கூற்று உயிரியல் என்பது, மூலக்கூற்று மட்டத்திலான உயிரியல் குறித்த ஆய்வு ஆகும்.
இத்துறை, உயிரியல், வேதியியல் போன்ற துறைகளின் பிற பகுதிகளுடன், குறிப்பாக மரபியல், உயிர்வேதியியல் போன்ற துறைகளுடன் பொது ஆய்வுப் பரப்பைக் கொண்டுள்ளது. மூலக்கூற்று உயிரியல், பெரும்பாலும், பல்வேறு உயிரணு முறைமைகளுக்கு இடையேயான இடைவினைகளைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துகின்றது. இது, டி.என்.ஏ (DNA- ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்), ரைபோ கரு அமிலம் (RNA), புரதத் தொகுப்பு ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகளுடன், இத்தொடர்புகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வதையும் உள்ளடக்குகின்றது. இவை தொடர்பான இலகுவான விளக்கங்களை பெற இங்கே பாருங்கள். இவை அடிப்படைகளை இலகுவாக சொல்லி தருகின்றன. ஒவ்வொரு கலத்தினதும் இயக்கம் என்ன? அமிலங்களின் தொழிற்பாடு என்ன? வைரஸ் எப்படி இயங்குகிறது? நீரின் முக்கியம் என்ன? இப்படி பல வினாக்களின் விடையை இங்கே அறிந்து கொள்ளுங்கள். இங்கே உள்ள ஒவ்வொன்றையும் கிளிக் செய்து ஒவ்வொரு செயற்பாடாக ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.