Home
»
Web sites
»
தரம் குறையாமல் புகைப்படங்களின் அளவை குறைப்பதற்க
Posted on
2011/09/06
at
3:45 PM
By
Tamil CC
| |
|
|
|
|
|
நம்மிடமோ அல்லது கூகுளில் தேடியந்திரத்தில் இருந்தோ புகைப்படங்களை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.பிளாக்குகள்,
பேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற தளங்களில் புகைப்படங்களை பகிர்கிறோம். இதில்
டிஜிட்டல் கமெராவில் எடுக்கப்படும் தரம் மிகுந்த புகைப்படங்கள் 5mb முதல்
10mb வரை இருக்கும்.
இது போன்ற புகைப்படங்களை சமூக தளங்களில் பதிவேற்றம் செய்தால் மிகவும்
நேரம் எடுக்கும். இதனால் கால தாமதம் ஏற்படலாம் மற்றும் நீங்கள் limited
band width hosting உபயோகித்தால் தேவையில்லாமல் உங்கள் பணம் தான்
விரயமாகும். இந்த பிரச்சினைகளை தீர்க்க வந்துள்ளது JPEGmini என்ற புதிய
ஆன்லைன் டூல்.
உங்களின் புகைப்படத்தை அளவை குறைக்க இந்த தளத்திற்கு JPEGmini
செல்லுங்கள். அங்கு உள்ள Select Photo என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள்
அளவு குறைக்க வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அவ்வளுவுதான் உங்களுடைய புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டு அளவு
குறைக்கப்பட்டு விடும்.
அடுத்து அங்கு உள்ள Download Photo என்ற பட்டனை அழுத்தி உங்களின் புகைப்படங்களை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இணையதள முகவரி |
|