கணனி விளையாட்டுக்களை வேகமாக விளையாடுவதற்கு கணனி வேகமாக இருத்தல் அவசியமாகும்.
மேலும் விளையாட்டுகளை கணனியில் பயன்படுத்தகணனியின் வன்பொருள்களின் டிரைவர்கள் சரியாக அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
குறிப்பாக கணனியின் டிஸ்பிளே மற்றும் சவுண்ட் டிரைவர்கள் (Display and Sound Drivers) சரியாக அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். இப்படிகணனியில் விளையாட்டுகளை விளையாடும் போது ஏற்படும் பிரச்சினைகள் அதிகம். இதனை எளிதாக்குவதற்கு இலகுவான வழியுள்ளது. ஆம், GameBooster என்ற மென்பொருளே அது.
இதனை இலவசமாகவோ கட்டணம் செலுத்தியோ தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
இது IoBit நிறுவனத்தின் மென்பொருளாகும்.
இந்த மென்பொருளின் பயன் என்ன?
1.ஒரே கிளிக்கில் கணனியின் விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஏற்ப திறனை மேம்படுத்துகிறது.
2. கணனிணியில் உள்ள வன்பொருள்கள் முறையாக அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் அப்டேட் செய்கிறது. (Hardware updates)
3. விளையாட்டுகளின் திறனை அதிகரிக்க தேவைப்படும் பயன்பாடுகளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். (Extra Improving Softwares)
4. விளையாட்டுகளுக்கு ஏற்றவாறு கணனியின் அமைப்புகளை மாற்றுகிறது.(Change settings for gaming)
5. விளையாட்டு அடங்கியுள்ள போல்டர்களை Defragment செய்கிறது. (Defragmenting games)
6. தேவையில்லாமல் இயங்கும் புரோகிராம்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. (Stops unnecessary programs)
7.RAM நினைவகத்தைச் சுத்தப்படுத்தி வேகமாக்குகிறது. (Cleans RAM)
8. புரோசசரின் திறனை மேம்படுத்துகிறது. (Improving Processor performance)
9. விளையாட்டுக்குப் பயன்படுத்தும் கருவிகளின் அமைப்புகளை நொடியில் மாற்றி அமைத்திடலாம். (Mouse, Keyboard, Joystick)
விளையாடி முடித்ததும் Gaming Mode ஐ நிறுத்தி விட்டு கணனியை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து நமது வேலைகளைப் பார்க்கலாம். இது கணனி விளையாட்டுகள் விளையாடுவோருக்கு அவசியமான மென்பொருளாகும்.
இதனை இங்கே தரவிறக்கம் செய்யலாம். Game Booster _