நாம்
இணையத்தில் இருந்து மென்பொருட்கள், வீடியோ, ஆடியோக்கள் போன்றவற்றை நம்
கணினியில் டவுன்லோட் செய்து ரசிப்போம்.அப்படி டவுன்லோட் செய்து
கொண்டிருக்கும் பொழுது நம் கணினியில் பாதிப்பு ஏற்பட்டாலோ, அல்லது நமது
இன்டர்நெட்டில் பிரச்சினை ஏற்பட்டாலோ நாம் டவுன்லோட் செய்வது தடைபட்டு
விடும். திரும்பவும் முதலில் இருந்து தொடங்க வேண்டும். மற்றும் நீங்கள்
டவுன்லோட் செய்யும் பைல் மிகவும் மெதுவாக டவுன்லோட் ஆகும் இது போன்ற
பிரச்சினைகளில் இருந்து நம்ம விடுவிக்க வந்துள்ளது Free Download Manager
என்ற அறிய இலவச மென்பொருள்.
மென்பொருளின் பயன்கள்:
- மென்பொருளை இடையில் நிறுத்தி பிறகு தொடங்கி கொள்ளும் Pause வசதி.
- சாதரணமாக கணினியில் ஒரு பைல் டவுன்லோட் ஆகும் நேரத்தை காட்டிலும் 6 மடங்கு வேகமாக மென்பொருளை தரவிறக்கி கொள்ளலாம்.
- வெறும் 6MB அளவுள்ள சிறிய மென்பொருளாக இருந்தாலும் அதிக சக்தி கொண்டதாக உள்ளது.
- ஒருவேளை நீங்கள் Zip பைலை தரவிரக்கினால் அதற்குள்ளே என்ன இருக்கிறது என பார்த்து கொள்ளும் வசதியும் உள்ளது.
- Firefox,IE, Opera போன்ற உலவிகளுக்கும் பொதுவான மென்பொருளாக இதை உபயோகித்து கொள்ளலாம்.
- வீடியோவை Preview பார்த்து பிறகு டவுன்லோட் செய்யும் வசதி.
- டோரென்ட் பைல்களை டவுன்லோட் செய்யும் வசதி.
- டவுன்லோட் முடிந்ததும் தானாக கணினியை அனைக்க Automatic Shutdown வசதி.
- காசு கொடுத்து வாங்கும் மென்பொருளில் இல்லாத பல வசதிகளை இந்த மென்பொருள் கொண்டுள்ளது.
- கீழே உள்ள லிங்கில் சென்று மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
- அடுத்து இந்த மென்பொருளை திறந்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் கணினியின் டாஸ்க்பாரில் இந்த மென்பொருள் உட்கார்ந்து கொள்ளும்.
- இப்பொழுது நீங்கள் ஏதேனும் டவுன்லோட் செய்ய வேண்டியதை கிளிக் செய்தால் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்.(க்ரோம் உலவியை உபயோகித்தால் அதில் தானாக இந்த விண்டோ திறக்காது மென்பொருளில் Add download என்பதை கிளிக் செய்தால் மட்டுமே இந்த விண்டோ திறக்கும்.)
- நீங்கள் டவுன்லோட் செய்யும் மேன்போருழிலோ அல்லது வேறு ஏதேனும் பைல்கழிலோ வைரச உள்ளதா என முன்கூட்டியே சோதிக்க இதில் உள்ள Malcious என்ற பட்டனை அழுத்துங்கள்.
- உங்களுக்கு சோதித்து அறிவிப்பு வரும் பின்னர் இதில் உள்ள OK பட்டனை அழுத்துங்கள்.
- அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த பைல் வேகமாக டவுன்லோட் ஆகிவிடும்.
- இந்த மென்பொருளில் பல வசதிகள் நிரம்பி காணப்படுகின்றன. அதை நீங்கள் ஒவ்வொன்றாக சோதித்து அறிந்து கொள்ளுங்கள்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Free download Manager 3.8