Home » » அறியப்படாத Mobile Phone வசதிகள்



* "உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக இலங்கை தான் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் உள்ளது".என்றெல்லாம் இந்திய அரசு பீத்திக்கொண்டாலும் உண்மையில் மிக மோசமான மதிப்பு கூட்டப்படாத சேவைகளுடன் தான் இந்தியாவில் உள்ள செல்போன் நிறுவனங்கள் தங்களது மொபைல் சேவையை வழங்கி வருகின்றன.


பல நாடுகளில் எப்போதோ வந்துவிட்ட 3G சேவை இப்போதுதான் இந்தியாவில் வந்திருக்கிறது.ஆரம்பத்தில் இந்த தொழில்நுட்பத்தை முதலில் சில குறிப்பிட்ட மாநகரங்களில் அறிமுகப்படுத்திய பி.எஸ்.என்.எல் நிறுவனமும் வழக்கம் போல குறைட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.



VISUAL RADIO (விஷுவல் ரேடியோ) : இந்த தொழில்நுட்பம் முழுக்க முழுக்க நோக்கியா நிறுவனத்தை சார்ந்ததாகும்,பொதுவாக நாம் மொபைலில் ரேடியோ கேட்கும் போது அந்த ரேடியோ ஸ்டேஷன் பெயர் மற்றும் அலைவரிசை எண்ணை மட்டுமே போனின் திரையில் நம்மால் பார்க்க முடியும். ஆனால்
நோக்கியா கண்டுபிடித்த இந்த தொழில்நுட்பம் மூலம் அந்த பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர்? பாடலை பாடியது யார்? உட்பட பல விபரங்களையும், வானிலை நிலவரங்களையும் சாலைகளில் ட்ராபிக் நிலவரங்களையும் என எல்லாவற்றையும் நமது மொபைல் திரையில் நேரடியாக காண முடியும். மேலும் அந்தப் பாடலுக்கு நாம் மதிப்பு கொடுப்பது அந்தப் பாடலை தரவிறக்கம் செய்து கொள்வது போன்ற வேலைகளையும் செய்து கொள்ள முடியும்.

இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த நோக்கியா நிறுவனம் முதல் முறையாக அதை தாங்கள் தயாரிக்கும் மொபைல்களில் புகுத்தி அதன் சொந்த நாடான பின்லாந்து நாட்டில் சோதனை செய்து பார்த்தது,அது வெற்றி பெறவே உலகத்திலுள்ள பல நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தை நோக்கியா நிறுவனம் தங்களது மொபைல் சாதனங்கள் மூலம் அறிமுகப்படுத்தியது.

 இந்த தொழில்நுட்பம் நோக்கியா போன்களில் மட்டுமே இருக்கும்,இந்த வகை போன்கள் 5000/- என்ற விலையிலிருந்து சந்தையில் கிடைக்கிறது. குறிப்பாக நோக்கியாவின் 'N-SERIES' போன் வகைகளில் இந்த தொழில்நுட்பம் உத்திரவாதத்துடன் உள்ளது.

PUSH TO TALK (புஷ் டூ டாக்) : இந்த தொழில்நுட்பம் மற்ற கம்பெனியின் மொபைல்களிலும்  இருந்தாலும் நோக்கியா நிறுவனம் தான் இந்த தொழில்நுட்பம் உள்ள போன்களை அதிகமாக வெளியிடுகிறது. இந்த "புஷ் டூ டாக்" தொழில்நுட்பம் ஒரு வாக்கி-டாக்கி சமாச்சாரத்தை ஒத்ததுதான். இந்த வகை போன்களில் இதற்காகவே தனியாக ஒரு பட்டன் இருக்கும்.அதனை அழுத்தி நாம் ஐந்துக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் ஒரே நேரத்தில் தொடர்பை ஏற்படுத்தி பேச முடியும்,அதாவது பொதுவாக கான்பரன்ஸ் கால் என்று சொல்லப்படும் வசதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் பேச வேண்டு மென்றால் நாம் ஒவ்வொருவரின் நம்பரையும் டயல் செய்ய வேண்டியிருக்கும்.ஆனால் இந்த நுட்பத்தில் அந்த நம்பர்களை ஒன்றன் பின் ஒன்றாக சேமித்து வைத்து விட்டால் ஒரு பட்டனை அழுத்தி ஒரே நேரத்தில் அத்தனை பேரிடமும் பேசமுடியும்.

இந்த தொழில்நுட்பத்தை நமது மொபைல் ஆபரேட்டர்கள் உதவியால் தான் பயன்படுத்த முடியும்.புதிய புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உலக நாடுகள் வரிசையில் இந்தியா மட்டுமே இன்னும் முயலோடு போட்டியில் கலந்து கொண்ட ஆமையாக இருக்கிறது. இப்படி இருந்தால் எப்படி இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னேறும்?


பின்குறிப்பு :
 இந்த இரண்டு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய  மொபைல்களை நோக்கியா நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பே சந்தையில் அறிமுகப்படுத்தி விட்டது.ஆனால் இங்குள்ள மொபைல் ஆபரேட்டர் நிறுவனங்கள் இந்த சேவைகளை முழுமையாக தர அக்கறை காட்டவில்லை.அதனால் நோக்கியா நிறுவனம் புதிதாக தயாரித்து வெளியிடும் பெரும்பாலான மொபைல்களில் இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் பதிந்து வெளியிடுவதை குறைத்துக் கொண்டுள்ளது.