Home » » சுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை கண்டுபிடிக்கலாம்…


சுருக்கப்பட்ட இணையதள முகவரி பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது அதிகமாக டிவிட்டரில் தான் அனைத்து பயனாளர்களும் இந்த சுருக்கப்பட்ட url முகவரியை பயன்படுத்துகின்றனர். இதுஒரு வகையில் பார்த்தால் நன்மை தான் என்றாலும் பல வகைகளில் வைரஸ் மற்றும் ஆபாச இணையதளங்களின் முகவரியை சுருக்கி அனுப்புவதால் வைரஸ் எளிதாக நம் கணினியை தாக்குகிறது. இப்படி சுருக்கப்பட்ட முகவரியை நாம் சொடுக்காமல் எப்படி இதன் உண்மையான இணையதள முகவரியை கண்டுபிடிக்கலாம் என்பதைப் பற்றி தான் இந்த பதிவு.

நாளுக்கு நாள் இணையதள முகவரியை சுருக்க பல இணையதளங்கள் வந்து கொண்டிருந்தாலும் அத்தனை தளத்தையும் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. bit url மற்றும் பல தளங்கள் இணையதளங்களை சுருக்கும் சேவையை வழங்கினாலும் இன்னும் நாம் சொடுக்கிய url முகவரி எந்த தளத்திற்க்கு செல்லும் என்பதில் பலருக்கும் சந்தேகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
  குழந்தைகள் ஆர்வத்தில் தகவல்
என்னவென்று அறிய இந்த முகவரியை சொடுக்கவும் என்று
இருக்கும் இடத்தில் உள்ள சுருக்கப்பட்ட முகவரியை சொடுக்கி தங்கள் கணினியில் வைரஸ் வர வைத்துவிடுகின்றனர். இந்த பிரச்சினையிலிருந்து நம்மை மீட்க ஒரு இணையதளம் வந்துள்ளது இந்த இணையதளத்திற்கு சென்று நாம் சுருக்கப்பட்ட இணையதள
முகவரியை கொடுத்தால் அதன் மூலம் அதாவது உண்மையான
இணையதள முகவரியை நமக்கு கொடுக்கும். உதாரணமாக நாம்
http://bit.ly/b6CJ9n என்ற சுருக்கப்பட்ட முகவரியை கொடுத்து
சோதித்து பார்த்தோம் சரியாக கொடுத்தது.

இணையதள முகவரி :  http://www.unshortn.com