Home » » BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி?

நிறைய பதிவர்களுக்கு சொந்த டொமைன் வாங்க வேண்டும், அதில் பதிவுகளை எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளதை நான் கடந்த முறை எழுதிய custom domain குறித்த பதிவுகளின் வாயிலாக அறிந்தேன். ஆனால் அவர்களிடம் Credit Card இல்லாத காரணத்தால் சொந்த டொமைன் வாங்க இயலவில்லை என்பதும் புரிந்தது. இப்போது வெறும் டெபிட் கார்ட் மூலம் பல தளங்களில் எளிதாக டொமைன் வாங்கலாம். அவ்வாறு வாங்கிய பின் சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதே இந்தப் பதிவு. 

நான் என் நண்பர் ஒருவர்க்கு வாங்கி செயல்படுத்தியது எப்படி என்று விளக்குகிறேன். 
டொமைன் வாங்குவது மிக எளிது. அது உங்களுக்கு எளிதாக வரக்கூடிய ஒன்றுதான். இப்போது அதற்கு பின் செய்ய வேண்டிய வேலைகளை சொல்கிறேன். இதில் உள்ள www.hthints.com எனது ஆங்கிலத் தளம் ஆகும்.
1. முதலில் BigRock தள முகப்புக்கு செல்லுங்கள்.


2. உங்கள் அக்கவுண்ட்க்குள் Log-In செய்து கொள்ளுங்கள்.

3. இப்போது  "Domains--> List All Orders"  என்பதை கிளிக் செய்யவும். 
4. உங்கள்  "Domain Name" மீது கிளிக் செய்யுங்கள்
5. இப்போது வரும் பக்கத்தில் "DNS" Tab ஐ தெரிவு செய்யவும்.
6. இப்போது "Manage DNS" என்பதை தெரிவு செய்திடுங்கள்
7. இப்போது ஒரு புதிய விண்டோ வரும் இதில்  Record எதுவும்  இல்லை என்று வரும். இதில்  "CNAME Records" என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
8. இப்போது  "Add A Record" என்பதை கிளிக் செய்யுங்கள் 
9. இப்போது CNAME Record பகுதியில் கீழே உள்ளது போல செய்திடுங்கள்.

Host Name: www
Value: Choose 2nd Radio Button and Type "ghs.google.com"

மற்ற எதுவும் மாற்றம் செய்ய தேவை இல்லை.
10. இப்போது  "Save Record" என்பதை கிளிக் செய்து இதை Save செய்து விடவும். 
11. இப்போது உங்கள் வலைப்பூவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.
12.  Blogger--> Dashboard-->Settings--> Add A Custom Domain
நீங்கள் ஏற்கனவே டொமைன் வைத்து உள்ளதால் Advanced Settings பக்கம் வரவும். இதில் உங்கள் தள முகவரி கொடுங்கள். குறிப்பாக முன்னால் www என்பதை மறந்து விட வேண்டாம். உதாரணம்:  www.songsnew.in

[ Redirect yourdomain.com to www.yourdomain.com. என்பது உங்களுக்கு வரும்போது கிளிக் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.இது வலைப்பூவில் உங்கள் டொமைன் முகவரி கொடுக்கும் இடத்திற்க்கு கீழ் வரும்.  ]
13. அவ்வளவுதான் நண்பர்களே இன்னும் ஒரு 5 அல்லது 6 மணி நேரத்தில் உங்கள் தளம்செயல்பட ஆரம்பிக்கும்.(blogger மூலம் வாங்கினால் இரண்டு நாட்கள் கூட ஆகலாம்.)