Home » » உயர்தர சித்திரவதை Waterboarding ஓர் அறிமுகம்

Wakeboarding பற்றி அறிந்து இருப்பீர்கள். நீரில் விளையாடும் ஒரு பிரபல விளையாட்டாகும். ஆனா இது விளையாட்டு அல்ல. சித்திரவதை. அவ்வப்போது வித்தியாசமான தகவல்கள் கணணிக்கல்லூரியில் இடம்பெறுவது வழமை. அந்த வகையில் இதுவும் ஒன்று. முகத்தில் நீர் ஊற்றுவது தண்டனையா? வலிக்குமா? இப்பதிவில் பார்ப்போம்.

File:Waterboarding.jpg

Waterboarding என்றால் என்ன?

Waterboarding என்பது சித்திரவதையின் ஒரு வகையாகும். தலை சாய்தளத்தில் கீழ்நோக்கி இருப்பதுடன் சித்திரவதை செய்யப்படுபவரின் பின்புறம் அசைய முடியாமல் பிணைக்கப்பட்டிருக்கும். பின்னர் முகத்தில் மூச்சு காற்று செல்லும் வழியில் நீர் ஊற்றப்படும். இது பல  வகையில் செய்யப்படும். பெரும்பாலும் முகத்தில் பழைய துணி ஒன்றை வைத்தே அதன் மேல் நீர் ஊற்றுவார்கள். இது பொதுவாக 14 seconds வரை நீடிக்கும்.
சட்ட அறிஞர்கள், அரசியல்வாதிகள்,  புலனாய்வு அதிகாரிகள், இராணுவ நீதிபதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றால் பரவலாக சித்திரவதை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Waterboarding இன் வரலாறு

Zero Dark Thirty (நள்ளிரவு 12:30) படம் பார்த்தால் இதை நிச்சயம் கண்டு இருப்பீர்கள். ஒசாமா பின்லேடனை கொல்வதை சொல்லும் இப்படத்தில் முக்கிய முஸ்லிம் தீவிர வாதியிடம் இருந்து இவ்வாறு தகவல்கள் பெறப்பட்டதை காணலாம்.  Grand Thefe Auto V விளையாடியவர்கள் இதை காணலாம்.
1500 களில் spain இல் டோக்கோ என்றழைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சித்திரவதையின் வடிவத்தில் நீரின் பயன்பாடானது புலன் விசாரணை நடத்துபவர்களுக்கு ஒரு ஆழமான சமயம் சார்ந்த முக்கியத்துவத்தையும் கொடுக்கிறது. உலகப் போர் II க்கு முந்தைய அமெரிக்கக் கைதிகள் உலக போர்கள் மற்றும் அமெரிக்க படையெடுப்புக்களில் இவை அடிப்படை அம்சமாக இருந்தன.

CIA இதைப்பற்றி இப்படி சொல்கிறது.

In this procedure, the individual is bound securely to an inclined bench, which is approximately four feet by seven feet. The individual's feet are generally elevated. A cloth is placed over the forehead and eyes. Water is then applied to the cloth in a controlled manner. As this is done, the cloth is lowered until it covers both the nose and mouth. Once the cloth is saturated and completely covers the mouth and nose, air flow is slightly restricted for 20 to 40 seconds due to the presence of the cloth... During those 20 to 40 seconds, water is continuously applied from a height of twelve to twenty-four inches. After this period, the cloth is lifted, and the individual is allowed to breathe unimpeded for three or four full breaths... The procedure may then be repeated. The water is usually applied from a canteen cup or small watering can with a spout... You have... informed us that it is likely that this procedure would not last more than twenty minutes in any one application

Waterboarding  இல் ஏற்பாடும் அனுபவம்?

இதை வெறுமனே பார்த்தால் ஒன்றும் இல்லாதது போல தோன்றும்.  ஆனால் உண்மையில் இது ஒரு திகிலூட்டும் அச்சத்தைத் தோற்றுவிக்கிறது - தாங்க முடியாத வலியை  ஏற்படுத்துகிறது. சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் மனிதன் தான் கொல்லப்படுவதாக நம்புகிறான்.மூச்சு காற்று செல்லும் வழியில் நீரை ஊற்றினால் கைதிக்கு நீரில் மூழ்கடிப்பதைப் போன்ற புலணுனர்வு ஏற்படும்.

Waterboarding இல் எதிர் பார்க்கப்படுவது?

விரைவாக உடலில் காயங்கள் இன்றி தகவல்களை பெற்று கொள்வதாகும்.US கடற்படையில்  இது பயிற்ச்சி நடவடிக்கையில் ஒன்றாகும்.

Waterboarding இன் பக்க விளைவுகள்?

இந்தக் கடுமையான விசாரணை நுட்பங்களானது தவறாகக் குற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும். இதன் போது வாந்தியெடுத்தல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பாடும். அதை விட   பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பல ஆண்டுகள் கடந்த பிறகும்  அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இதை எதிர் கொண்ட ஒரு நோயாளியால் குளிக்கவே முடியவில்லை மேலும் மழை பெய்யும் போது மிகவும் பயம் கொள்கிறார்.

நீங்களும் இதை எப்போதாவது உபயோகிக்கலாம் என நினைக்காதீர்கள். இதை செய்வதும் பரிசோதிப்பதும் பயங்கரமான விளைவுகளை கொண்டுவரும்.