Home » » நீண்ட Blog Archive தானாக திறப்பதை தடுத்து மடிப்பது எப்படி?


பொதுவாக அனைவரினும் Blog Archive பெரிதாக நீட்டிக்கொண்டு இருக்கும். அதை எப்படி அழகாக மடித்து சுருக்கு வைப்பது என இப்பதிவில் பார்ப்போம்.

இதன் நோக்கம்?

அதிக பதிவுகளை நீங்கள் பதிவிடும் போது அதன் list, பெரிதாகி, அதாவது blog Archive நீண்டு அலங்கோலமாக இருக்கும். அதை சுருக்கி மடித்து வைத்து இணைய பக்கத்தின் வடிவத்தை பேணுதல்.

யாருக்கு பயனுள்ளது?

மாதம் 5 பதிவுகளுக்கு மேல் எழுதும் பிரபல பதிபவர்களுக்கு தான். Blogger இல் இயங்கும் பதிபவர்களுக்கே இது உரியது. Wordpress, Drupal க்கு பல வழிகளில் இதை செய்யலாம்.

அடிப்படை அம்சங்கள்

இது இரு அடிப்படை அம்சங்களை கொண்டது.

  1. Blog Archive மிக நீண்டதாக இருந்தால் அதை குறிந்த அளவிற்கு மேற்படாமல் காட்டுதல்.
  2. வாசகருக்கு ஆரம்பத்தில் Blog Archive அனைத்தும் திறந்த படி இல்லாமல் இருக்க வைத்தல்.

சுருக்குதல்

இது பின்வரும் CSS மூலம் செய்யப்படும்.  இதை மட்டும் பயன்படுத்தினால் கணணிக்கல்லூரியின் Blog archive போல தென்படும்.


மடித்து வைத்தல்

பொதுவாக நடப்பு மாத Blog archive ஒரு போதும் Blogger இல் மடிக்க முடியாது. அத்துடன் இதுவே ஒவ்வொரு வலைப்பூவிலும் மிக நீண்டதாக காணப்படும். இதை மடிக்க jQuery கட்டளைகள் உதவுகின்றன. 

எப்படி வலைப்பூவில் இணைப்பது?

எதற்காக மேலே இவற்றை பற்றி மேலோட்டமாக சொன்னேன் என்றால்,  உங்களுக்கும் இணைய மொழிகளில் ஒரு ஆர்வம வர வேண்டும். அத்துடன், நீங்கள் இணைக்க போகும் ஸ்கிரிப்ட் பாதுகாப்பானதா, அதன் அடிப்படி அம்சங்கள் என்ன என்பவற்றை அறிந்து இருக்க வேண்டும்.

கீழே உள்ள ஒரு வரி நிரலை நீங்கள் ஒரு HTML Widget  ஆக இணைத்தால் போதும்.

About jQuery Script

  •  If not loaded, script  load it automatically
  • CSS applied with jQuery
  • https used for avoid automatic redirect of Google drive
  • Google drive used as host for long term support
சந்தேகங்கள் / உதவிகள் தேவைப்பட்டால் கருத்துரைக்கு வாருங்கள்.
எதிர் காலத்தில் இப்படி பல பதிவுகளை கணணிக்கல்லூரியில் எதிர் பாருங்கள்.