எப்பொழுதும், Google, Script, Tracking, Developing இப்படி எழுதி எழுதிய எனக்கு சலிக்கும் போது வாசிக்கும் உங்களுக்கு எப்படி இருக்கும்.. அதனால் ஒரு மாற்றமாக ஒரு கணித வினா ஒன்று இப்பதிவில், அதற்காக எட்டு கால் பூச்சிக்கு எத்தனை கால் என்றெல்லாம் கேட்க மாட்டேன். விடை தெரிந்தவர்கள் Comment Box இல் சொல்லுங்களேன்.இது மிக நீண்ட காலத்துக்கு முன்னர் உலாவிய ஒரு கணக்கு தான். தெரிந்தவர்கள் நிறைய பேர் இருப்பீர்கள். தெரியாதவர்களுக்காக,
மூன்று நண்பர்கள் ஒரு சாப்பாட்டு கடைக்கு சென்றார்கள் (எதுக்கு? நகை அடகு வைக்கவா? சாப்பிட தான்)
போன மூவரும் திருப்தியாக உணவு அருந்திய முடித்தனர்.
சர்வர் பில்லை கொண்டு வந்து வைத்தார். மூவருக்குமாக சேர்த்து 75 ரூபாய் என இருந்தது.
மூவரும் தத்தமது பர்ஸ்ஸில் இருந்து 25 ரூபாயை எடுத்து சர்வர் இடம் கொடுத்தனர் (25 * 3 = 75).
சர்வர், முதலாளியிடம் 75 ரூபாயை கொடுக்க , முதலாளி 5 ரூபாய் discount கொடுத்தார். 70 ரூபாயை தான் எடுத்து விட்டு, மீதி 5 ரூபாயை சர்வர் இடம் மீள கொடுக்கும் படி கொடுத்தார்.
சர்வர் தனக்கு என 2 ரூபாய் டிப்ஸ் எடுத்து விட்டு, மிகுதி மூன்று ரூபாயையும் 3 நண்பர்களிடம் 1,1,1 என பிரித்து கொடுத்தார். ஆகவே இப்போது ஒவ்வொரு நண்பர்களும் உணவுக்காக செலவழித்த தொகை 24 ரூபாய்.
இப்பொழுது கேள்வி,
மூவரும் செலவழித்த தொகை 24 * 3 = 72 Rs
சர்வர் இடம் உள்ள டிப்ஸ் : 2 Rs
மொத்தம் : 72 + 2 = 74 Rs.
ஆனால் அவர்கள் ஆரம்பத்தில் கொடுத்தது 75 Rs
அப்படியான மீதி 1 ரூபாய் எங்கே??
இதற்கு விடையை நீங்கள், வகையிட்டு சொல்லலாம், தொகையிட்டு கூட சொல்லலாம், அதுக்கும் மேலாக கணித தொகுத்தறிவு மூலம் கூட நிறுவலாம். இதற்கு விடை கண்டு பிடிக்க உங்களுக்கு Supercomputer தேவை என்றால் Nasa விடம் உள்ள Super Computer இனை பயன்படுத்த உங்களுக்கு பயன்படுத்த அனுமதி பெற்று தர நான் தயார்.
எப்படியென்றாலும் சரி, இக்கணக்கை தெளிவு படுத்தினால் சரி? அந்த ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா?