இன்றில் இருந்து Google + Comment Box அனைத்து Blogger க்களுக்கும் கிடைக்க கூடியதாக இருக்கும் என Google அறிவித்துள்ளது. உங்கள் Blog Domain மற்றும் போது பழைய comments களை இழக்க நேரிடும் என்றும் கூடவே அறிவுறுத்து உள்ளார்கள். இதை பற்றி அவர்களின் உதவி பக்கத்தில் விரிவாக சொல்லி உள்ளார்கள்.
Wikileaks 6 மாத இடைவெளியின் பின்னர் 2 million அமெரிக்க இரகசிய ஆவணங்களை கசிய விட்டுள்ளது. PlusD என்ற பெயரில் ஒட்டு மொத்த ஆவணங்களையும் கணணி மயப்படுத்தி Google போன்ற Timegraph வசதியுடன் வெளியிட்டு உள்ளார்கள். இப்போது ஊடகங்களில் அவ்வப்போது இவை பற்றிய தகவல்கள் கசிகின்றன . 1966-01-01 தொடக்கம் 2010-12-31 வரையான ஆவணங்களை நீங்களும் பார்வையிடலாம் இங்கே.
Google இன் people finder , boston அனர்த்தத்தில் சிக்கிய காணமல் போன மக்களை கண்டறிவதில் சிறந்த பங்காற்றி உள்ளது. இதற்க்கு முன்னர், ஜப்பான் சுனாமி அனர்த்தத்திலும் இதன் பங்கு முக்கியம் பெற்று இருந்தது.
கடந்த சில தினங்களாக Google Apps பகுதியாக செயல் இழந்து விட்டது. அவர்கள் தொடர்ந்து சரி செய்தும் மீளவும் இவை பலருக்கு இயங்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. Google Apps Status தொடர்பாக இங்கே அறிய முடியும்
Twitter தனது Music சேவையை விரைவில் ஆரம்பிக்க உள்ளது. https://music.twitter.com/ என்ற முகவரியில் விரைவில் கிடைக்கும். சிலருக்கு இப்போது இயங்க ஆரம்பித்துள்ளது. பெரும்பாலும் இன்று வெளியிடப்படலாம்.
Thepiratebay.se மீள .se இல் தொடர்ந்து இயங்க ஆரம்பித்து உள்ளது . .gl பற்றி எந்த கருத்தும் வெளியாகவில்லை.
Google fiber க்கு போட்டியாக ஜப்பான் ISP ஒன்று 2GBps இல் இணைய இணைப்பை வழங்கி உள்ளது. இப்போதும் KBPs இல் இருக்கும் நம் நாட்டுக்கு எப்போது விடிவோ தெரியவில்லை.
VPN, Open DNS போன்றவற்றின் அதிகரித்த பயன்பாட்டால் உலகளாவிய இணைய இணைப்பு வேகம் அதிகரித்து உள்ளதாக கூகிள் அறிக்கையிட்டுள்ளது.
Google Analytic இன் Dashboard இல் போது Realtime Widet அனைவருக்கும் கிடைத்துள்ளது