இவற்றின் பெரும்பாலான குறைபாடு இவற்றின் stream link இயங்காமை ஆகும். இதனால் பல website களில் தேடி அலைய வேண்டி இருக்கிறது. அத்துடன் ஒவ்வொரு web site ஆக செல்வதால் நேர , bandwidth விரயமாகும். ஆனால் பலருக்கும் தமது music player ஊடாக பெரும்பாலான வானொலி சேவைகளை கேட்க முடியும் என்று தெரிவதில்லை. இப்பதிவு, எவ்வாறு மிக இலகுவாக கணனியில் (+ mobile) உள்ள music players ஊடக வானொலி சேவைகளை கேட்பது என்று விளக்குகிறது.
முன்பு பனி பெய்யும் நாட்களில் இந்திய வானொலி அலைவரிசைகள் யாழ்ப்பாணம் வரை கேட்க முடியும். மெல்ல மெல்ல மாசி மாதம் ஆக ஆக இவை முற்றிலும் அற்று போய் விடும். சின்ன வயதில் ஏதோ ஒரு அலைவரிசையில் "கீத்தா மாமியின் கிசுகிசு" என்று ஒரு நிகழ்ச்சி கேட்டதாக ஞாபகம்.
அடிப்படை
ஒவ்வொரு வானொலி நிலையமும் (அதற்காக திருச்சிரா பள்ளி ,காரைக்கால் எல்லாம் எதிர் பார்க்க கூடாது) Online streaming வசதியை வைத்து இருப்பார்கள். பெரும்பாலும் Flash player மூலம் அவை இயங்கும். இதற்காக HTML5 இப்போது பயன்பட ஆரம்பித்து இருக்கிறார்கள். பொதுவாக rtms protocol பயன்படுகிறது. இதை பற்றியெல்லாம் இங்கு தேவை இல்லை.
சுருங்க சொன்னால் அவர்கள் ஒரு விதமாகமுகவரி மூலம் அனுப்பும் அலைவரிசை, Flash இல் பாடலாக மாறும். இப்போது Flash இல் இருந்து அந்த முகவரியை கண்டுபிடித்து music player இல் கேட்க இப்பதிவு வழிகாட்டுகிறது.
என்ன தேவை
- இணைப்பு ( Speed more than 5 KBPS)
- நீங்கள் அனைவரும் நிச்சயம் பாட்டு கேட்பவர்களாக இருப்பீர்கள். அதற்கு பயன்படுத்தும் player software போதும்.சில பிரபல Players
- VLC
- Winamp
- Real Player
- Quicktime player
- Media player
- KM player
எப்படி கேட்பது
ஒவ்வொரு வானொலிக்குமான Streaming URL களை எடுத்து கேட்பது உங்களுக்கு சிரமம். எனவே இங்கு Play list ஆக உருவாகி வைத்துள்ளேன். .m3u , .pls, m3u8 என 3 வகைகளில் உள்ளது. அனைத்தும் நிச்சயம் உங்கள் music player இனம் காணும்.
- கீழே உள்ள ஏதாவது ஒன்றை தரவிறக்கி கொள்ளுங்கள்.
- Double click செய்து Open செய்யுங்கள். உங்கள் Default music player இயங்க ஆரம்பிக்கும்.
- Next Button or File > Bookmark ஊடக விரும்பும் வானொலி அலைவரிசைகளை கேட்க முடியும்.
** தானாக திறக்காவிட்டால் Open with மூலம் சென்று திறவுங்கள்.
Download Links:
- Radio.m3u - Cloud
- Radio.pls - Cloud
- Radio.m3u8 - Cloud
நன்மைகள்
- 6 KBPS என்ற மெதுவான இணைய இணைப்பு வேகத்திலே கேட்க முடியும்.
- ஒரே ஒரு click இல்அனைத்தையும் ஒரே இடத்தில் கேட்க முடியும்.
- உங்கள் Bandwidth பாதுகாக்கப்படும்.
- Playlist வசதி உங்கள் Mobile இல் இருப்பினும் உங்களால் கையடக்க தொலைபேசியிலும் கேட்க முடியும்.
பிரச்சனை
சிலவேளை வானொலிப்பெட்டியில் பாடல் முடிந்த பிறகு தான் streaming இல் கேட்கும். அதன் காரணம் மெதுவான அடிக்கடி தடைப்படும் இணைய இணைப்பு தான்.
பகிர்க
என்னால் முடிந்ததை தேடியும் Hello FM 106.4 , Radio City 91.1 FM போன்ற வானொலிகளை வழங்கும் இணைய பக்கங்களை கண்டறிய முடியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் அவற்றின் இணைய பக்க இணைப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் உள்ள streaming URL இனை பிரித்தெடுத்து மற்றவர்களுக்கு வழங்க உதவியாக இருக்கும்.
அத்துடன் உங்களுக்கு பிடித்த வானொலி இணைய பக்கங்களையும் comment இல் பகிருங்கள்....
இப்போது கிடைக்கும் வானொலிகள் :
- Sackthi Fm - Srilanka
- Radio Miche
- Chennai FM rainbow
- Aaha FM
- Big FM
- Sooriyan FM - Chennai
மேலும் பல ......