Home » » Google இன் சிந்திக்க வைத்த Doodles - The Hitchhiker's Guide to the Galaxy

The Hitch Hiker's Guide to the Galaxy என்ற சொல்லை எங்கோ கேள்வி பட்டு
இருப்பீர்கள். சில காலத்துக்கு முன்பு அதாவது Mar 11, 2013 அன்று Google பக்கம் வந்தவர்களுக்கு தெரிந்து இருக்கும். வழமையாக அனைவருக்கும் விளங்கும் படி Doodle களை வைப்பது வழமை. ஆனால் அன்று சற்று வித்தியாசம். அதே போல Nov 23, 2011 அன்றும் ஒரு வித்தியாசமானத்தை Doodle ஆக வைத்து இருந்தனர்.  Mar 11, 2013 இல் வெளியானது ஒரு வானொலி நிகழ்ச்சியில் வந்த  விஞ்ஞான புனை கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட Doodle.

Douglas Adams' 61st Birthday - The Hitchhiker's Guide to the Galaxy



"Far out in the uncharted backwaters of the unfashionable end of the western spiral arm of the Galaxy lies a small unregarded yellow sun." என்று ஆரம்பிக்கும் The Hitchhiker's Guide to the Galaxy புத்தகத்தை படிப்பதை விட திரைப்படத்தை பார்ப்பது சுவாரசியமானது. அண்மையில் வெளியாகிய Cloud Atlas என்ற திரைப்படத்தை போல இல்லாவிடினும் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்த பின்னர் இந்த Doodle உங்களுக்கு விளங்கும். படம் - புத்தகம் - Doodle அனைத்துமே ஒன்று தான்.

1977ல் Douglas Adams அவர்களது  "தி ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைட் டூ தி காலக்சி"  BBC வானொலி சேவையில் ஒரு அறிபுனை நகைச்சுவை நிகழ்ச்சியாக அறிமுகமானது. அதன் பெரும் வெற்றிக்குப்பின்னர், புத்தக வடிவிலும் வெளியானது.  அங்கதம், நகைச்சுவை உணர்வுகளுடன்  மொத்தம் ஐந்து புத்தகங்களைக் கொண்ட இந்த வரிசை இதுவரை உலகெங்கும் ஒன்றரை கோடி பிரதிகள்  விற்பனையாகியுள்ளது. இதன் அடிப்படையில் தொலைக்காட்சித் தொடர்கள், நாடகங்கள், நிகழ்பட ஆட்டங்கள், படக்கதைகள் மற்றும் ஒரு முழுநீளத் திரைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளன.

Dolphins மேல் எழுவது போல ஆரம்பிக்கும் படத்தின் முடிவில் மீள அவை கடலில் கலக்கின்றன. படத்தின் கதையை பார்த்தால், ஒருவர் வீட்டை இடிக்க வருகிறார்கள் - அப்போது வேறு இனம் பூமியை அழிக்கிறது - நண்பனின் உதவி உடன் தப்பிக்கும் ஹீரோ Galaxy  விட்டு Galaxy சென்று இறுதியில் மீள தன் வீட்டுக்கு வருகிறார்.

Don't Panic என்ற பகுதியை அழுத்தி ஆரம்பிக்கும் இந்த Doodle இனை பற்றி முழு விளக்கமும் தருவதை விட  நீங்கள் படத்தை பார்ப்பதால் / புத்தகத்தை வாசிப்பதால் தெளிவு பெறலாம். Primer போன்ற படங்களை Subtitle இல்லாமல் பார்த்த உங்களுக்கு நிச்சயம் இப்படம் சிம்பிள் தான்.


The Hitchhiker's Guide to the Galaxy இன் சாராம்சமே இந்த Doodle.

Resource-
  1. Doodle - google.com/logos
  2. About Douglas Adams - Wiki - Engllish
  3. The Hitch Hiker's Guide to the Galaxy E_Book Collection Tamilcc Cloud (5 Books)
  4.  The Hitchhikers Guide to the Galaxy Movie - Torrent - DvDrip
  5. Offical Web Site - hitchhikerslive.com

இதில் சுவாரசியமானது ? = 42 அதாவது அனைத்துக்குமான விடையாக பல வருடங்கள் ஜோசித்து super computer தரும் விடையாக 42 அமைகிறது. வெற்றிடத்தில் இருத்தல், Galaxy  விட்டு Galaxy  செல்லும் போது உரு மாறல்,பூமியை Mostly Harmless என்று சொல்லி அழித்தல், பின்னர் backup மூலம் மீள கட்டி எழுப்புதல். இப்படி பல விடயங்கள்.


மேலும் ஒரு Doodle  -  Nov 23, 2011


 60th Anniversary of Stanislaw Lem's First Publication முன்னிட்டு வெளியானது- The Astronauts என்ற புத்தகம் வெளியானதை முன்னிட்டு இது வெளியிடப்பட்டது. சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. Google வெளியிட்ட முதலாவது HTMl5 இல் ஓரளவு அமைய பெற்ற Doodle இது தான்.