Home » » தொழில்நுட்ப துளிகள் May (1)

1.   இப்போது The Pirate Bay தளம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டு Domain இல் செயற்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இப்போது  thepiratebay.sx இல் இயங்கி வருகிறது. அண்மைக்காலங்களில் தமிழ் திரைப்படங்கள் உடனுக்குடன் பலரால் இங்கு பகிரப்படுவதால் இங்கும் பிரபலம் ஆக தொடங்கி விட்டது.

Embedded image permalink

2. Google + comment Box இல் சில மாற்றங்கள் சில தினங்களுக்கு முன்னர் வந்தது. வந்த உடனேயே, பல பிழைகள் இனம் காணப்பட்டு பலராலும் அதிருப்தி வெளியிடப்பட்டது.


3.வழமை போல  May 1 இல் இந்திய நேரப்படி நள்ளிரவில் USA Diversity Lottery 2014 Visa குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நீங்களும் பதிவு செய்து இருந்தால் இங்கே - dvlottery.state.gov சென்று காணுங்கள்.

4. Google கொஞ்ச நாட்களுக்கு முன்  பல நாடுகளின் Street View தொகுப்பை வெளியிட்டது. இப்போது அனைத்தையும் திரட்டி தந்து Gallery இனை புதுப்பித்து உள்ளது. நீங்கள் இங்கே maps.google.com/gallery சென்று முழு தொகுப்பையும் காணுங்கள்.

5. வரும் June மாதம் பல API கள் செயல் இழக்கின்றன. Google Map v2, Twitter API V1.  Facebook  API இல் புதிய மாற்றங்கள் வருகிறது.  மேலும்....

ஒரு Entertainment:


Chrome Experiments இணையத்தில் பிரபலமானவை - அண்மையில் பார்த்த ஒரு experiment என்னை கவர்ந்தது. உங்கள் கணனியில் Web  Camera இருந்தால் கீழே உள்ள முகவரிக்கு சென்று பாருங்கள். நீங்கள் கையை அசைக்கும் ஒவ்வொரு விதத்துக்கும் அழகிய  Music இனை உருவாக்க முடியும். (தூரத்தில் நின்று பார்ப்பவர், நீங்கள் அந்தரத்தில் Table tenis விளையாடுவதாக எண்ணினால் நான் பொறுப்பல்ல)
Music Experiment - Google Chrome

இனி சில கீச்சுக்கள் :