இதே வேலையை செய்ய சில Chrome extensions இருந்த போது அவை அவ்வளவு பயனளிப்பதில்லை.
இதற்காக நாம் பயன்படுத்த போகும் ஒரு இலவச சேவை Zbiz ஆகும். இதை பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. என்றாலும் அண்மையில் ஒரு நண்பருடன் தொடர்பு கொண்ட போது தான் பலர் Torrent பற்றியோ, அல்லது இது பற்றியோ அறியவில்லை என்று புலனாகியது. அதன் பின்னரே இதை பற்றி எழுதுகிறேன்.
இதன் பெரும் நன்மையே எப்போதும் மாறா வேகத்தில் கோப்புக்களை பெற முடிகின்றமை. சில சமயங்களில் 10 kBps இலும் குறைவான வேகத்தில் கூட Bittorrent இல் இருந்து பெற்ற அனுபவங்கள் உங்களுக்கு இருக்க கூடும்.
அதை விட எந்த Torrent Client இல்லாமலும் தரவிறக்க தேவை இல்லை.
மேலும் சில நன்மைகள்:
- இவர்கள் Copyright தொடர்பாக எமக்கு பச்சை கொடி காட்டுவதால் எதையும் தரவிறக்கலாம்.
- கவனிப்பார் அற்று கிடக்கும் சில மென்பொருட்களை விரைவாக பெற வழி இது மட்டுமே. எ.கா: Nero இன் ஆரம்ப பதிப்புக்கள்.
- பழைய தமிழ் படங்களை பெற உதவுதல் - தமிழ் படம் ஒன்று வந்தவுடன் அனைவரும் தரவிறக்குவார்கள். சில நாட்களில் எல்லாம் ஓய்ந்த பிறகு seeders இல்லாமல் உங்கள் வேகம் குறையலாம். அதற்கு இலகுவான வழி இதுதான். (இப்பதிவின் உதாரணத்தில் விஸ்வரூபம் திரைப்படம் தரைவிரக்கப்படுவதை மேற்கோள் காட்டுகிறது)
- தொழிநுட்ப ரீதியில் சில Torrent seeders உங்கள் Firewall மூலம் தடை செய்யப்படுவார்கள். இதை தொழிநுட்ப அறிவில்லாமல் கையாள முடியாது. இம்முறையில் Internet Download Manager உதவுவதால் வேறு பிரச்சனைகள் எதுவும் வராது.
- Resume பற்றி கவலைப்பட தேவை இல்லை. விட்டு விட்டு விரும்பிய வேளை தரவிறக்கலாம்.
கவனிக்க வேண்டியவை:
- பொதுவாக 1 - 2 GB க்கு உட்பட்ட கோப்புக்களை மட்டுமே தரவிறக்க இதை பயன்படுத்துங்கள். அளவு கூடினால் சில தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டி இருக்கலாம்.
- என் அனுபவத்தில் 120kBps வேகம் தான் ஆக கூடியது. 8 GB ஆகிய இதன் உச்ச கொள்ளளவை தரவிறக்க 1 நாள் செல்லும்.
- இதில் GTA 4 எல்லாம் தரவிறக்க முடியாது. அவை எல்லாம் 15 GB இல் இருக்கும்.
இதன் தீமைகள் / மட்டுப்பாடுகள் :
இலவச சேவையில் இவை மட்டுப்படுத்தப்படும்.
- ஆக கூடியது 8GB
- ஒரு IP யில் 2 தரவிறக்கமே ஒரு நேரத்தில்.
- ஒரு கோப்பு 7 நாட்கள் மட்டுமே அவர்களின் செர்வரில் இருக்கும்.
இதை எப்படி பயன்படுத்துவது?
இது தொடர்பான Screenshots கீழே பாருங்கள்.
- Torrent Site : http://thepiratebay.sx (or any magnet link / .torrent providers)
- Direct Download Site: http://zbigz.com/
வழமை போல; அனைவரை போலவும் நானும் இத்தளத்தில் எழுதுவது குறைந்ததற்கு காரணமாக நேரம் இல்லை என்ற சாட்டை உங்களிடம் முன் வைக்கிறேன். முன்பு தரமான தகவல்களை சில தளங்கள் தந்தார்கள். இப்போது அவர்கள் உறங்கி விட மழைக்காளான்களாக பலரும் தோன்றி எதேதோ எழுதுகிறார்கள்.
நீங்களும் தொழிநுட்ப தொடர்கள், பதிவுகள் கணணிக்கல்லூரியில் எழுத விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். Email:[email protected] or Direct contact form here